கார்த்தி Vs கங்னம்
"What I thought was, you know, crazy about music, dancing, performance, so that kind of psycho." - Psy (BBC Interview, December 2012) கங்னம் ஸ்டைல் என்பது பெருமாள்முருகனின் நாவல் பாதிப்பில் எழுதும் இலக்கிய மோஸ்தர் போலிருக்கிறது என்று எண்ணியிருந்த ஓர் அப்பாவி நான். அலெக்ஸ் பாண்டியன் படத்தின் Bad Boy பாடலில் கார்த்தி கங்னம் ஸ்டைலில் ஆடி இருக்கிறார் என்று கேள்விப்பட்ட போது தான் அது ஏதோ சர்வதேசிய நடன வஸ்து என என் சிற்றறிவுக்குப் புலனாகியது. Psy என்று செல்லமாக அழைக்கப்படும் (எனக்கு CSK போல!) பார்க் ஜே-சங் 35 வயது தென் கொரிய ராப் பாடகர். அவரே பாடல்கள் எழுதி, கம்போஸ் செய்து, நடனமமைத்து வீடியோ ஆல்பங்கள் வெளியிடுபவர். 2001லிருந்தே இவர் ஓரளவு பிரபலம் தான். 2012 ஜூலையில் PSY 6 (Six Rules) - Part 1 என்ற தனது ஆறாவது ஆல்பத்தை வெளியிட்டார். அதில் தான் கங்னம் ஸ்டைல் ( Gangnam Style - 강남스타일 ) பாடல் இடம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட கொரியன் பாப் (K-pop) என்ற தனி genre-ஏ இருக்கிறது. இப்பாடல் அவ்வகைமை தான். இந்த ஆல்பம் தென் கொரியாவில் மட்டும் லட்சம் பிரதிகளுக்கு மேல்...