Posts

Showing posts from June, 2012

பழங்குடி உணவுத் திருவிழா

Image
செம்மை அறக்கட்டளை ஓசூரில் வரும் ஞாயிறன்று பழங்குடி கலை மற்றும் உணவுத் திருவிழா வை நடத்துகிறது. கட்டணம் கட்டி கலந்து கொள்ளும் நிகழ்வு இது. இந்நிகழ்வின் மூலம் வசூலாகும் பணம் பெண்ணாகரம் பகுதியில் வாழும் இருளர் பழங்குடி இன மக்களுக்கு வாழ்விடம் அமைக்க பயன்படுத்தப் படவிருக்கிறது. தினை, வரகரசி, தங்கச்சம்பா, சாமை போன்ற மரபான தானியங்களைப் பயன்படுத்தி பழங்குடி முறைப்படி செய்யப்பட்ட உணவு வகைகள் இந்நிகழ்வில் கிடைக்கும் எனத் தெரிகிறது. நிகழ்வில் செந்தமிழன் இயக்கிய‌ பாலை படத்தின் குறுந்தகடு விற்பனைக்குக் கிடைக்கும்.   இன்னும் இரண்டு நாட்களே உள்ளன என்பதால், நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்துவிடுதல் நன்று. சமையல் எண்ணிக்கை கணக்கிற்கு இது உதவியாக இருக்கும். விரயமோ பற்றாக்குறையோ அனாவசியமன்றோ. நாள் / நேரம் : 24-ஜூன்-2012 / மாலை 5:30 நிகழுமிடம் : மீரா மஹால், ஓசூர். கட்டணம் : நபர் ஒன்றுக்கு ரூ.200 /- தொடர்புக்கு : மு.வேலாயுதம் (096593-60967 / 098444-45714) பின்குறிப்பு: நான் இதில் கலந்து கொள்கிறேன். உணர்வுக்காகவா உணவுக்காகவா என்பதைப் பிற்பாடு முடிவு செய்யலாம்!

தேவதை புராணம் : குமுதம் பு(து)த்தகம்

Image
குமுதம் இதழில் (6.6.2012) பு(து)த்தகம் பகுதியில் தளவாய் சுந்தரம் அவர்கள் எழுதிய தேவதை புராணம் குறித்த சிறிய அறிமுகக் குறிப்பை இங்கே பகிர்கிறேன். புத்தகம் குறித்த செய்தி நிறைய பேரைச் சென்றடைய இது வழிவகுத்திருக்கும்.

மூழ்கவே மூழ்காத கப்பல்

Image
குமுதம் இதழில் (6.6.2012) வெளியான டைட்டானிக் கப்பல் பற்றிய எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்.

அம்ருதா - ஜூன் 2012 இதழில்

Image
அம்ருதா ஜூன் 2012 இதழில் சென்ற வருட இலக்கியத்துக்கான‌ நொபேல் பரிசு குறித்து நானெழுதிய‌ விரிவான 4 பக்க கட்டுரை ' யதார்த்தத்தின் அடர்கசிவு ' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

Music for me is defined by Ilayaraja - கௌதம் மேனன்

Image
ரேடியோ மிர்ச்சி பண்பலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தின் இசை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் எழுத்து வடிவம் இது. (நன்றி : ILLAYARAJA- KING OF MUSIC ஃபேஸ்புக் பக்கம் ) கே: ராஜா Sir – Gowtham Menon இந்தக் Combination அமைந்தது எப்படி? சொல்லுங்கள். ப: Starting from மின்னலே, எல்லா படத்துக்கும் ராஜா Sir’ஐக் கேட்கலாம் என்றுதான் நினைப்பேன். Because I grew up with his Music. ”நீதானே என் பொன்வசந்தம்” படம் ஒரு 50% Shoot பண்ணி முடித்துவிட்டேன். கதாநாயகியின் பெயர் நித்யா. அதில் ஒரு காட்சி..! ‘நினைவெல்லாம் நித்யா’ படத்தில் வரும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ பாடலை Jeeva கதாநாயகிக்காகப் பாடுவார். அப்போதுதான் எனக்குத் தோன்றியது .. ‘இது ராஜா Sir படத்தில் வரும் பாடலின் வரிகள்’. எனவே அவரைக் கேட்கலாம்’ என்று. என் தயக்கத்தைத் தவிர்த்து நேராகப் போய் அவரை சந்தித்தேன். நான் அவரை சந்திப்பேன் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. நான் வேறு ஏதோ விஷயமாக அவரை சந்திக்க வந்திருக்கிறேன் என்றுதான் அவரும் நினைத்திருப்பார் என்று எண்ணுகிறேன். அவரிடம் நான் ‘Sir.. ஒவ்வொரு முறையும்