சில நாட்களுக்கு முன் ஆண் பெண் இடையேயான நட்பு மற்றும் காதல் குறித்து அராத்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதி இருந்தார். நிதர்சனத்துக்கு மிக அருகில் இருந்து அதே சமயம் அங்கதம் துள்ளி விளையாண்ட அப்பதிவு எனக்கு மிகப் பிடித்திருந்தது. மனுஷ்ய புத்திரனின் ' அதீதத்தின் ருசி ' தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ' சினேகிதிகளின் கணவர்கள் ' கவிதைக்கு இணையான பதிவு என்று அதற்கு கமெண்ட் இட்டிருந்தேன். நெல்முனையளவும் அதில் மிகை இல்லை. இதில் சொல்லப்பட்டிருக்கும் சிலபல விஷயங்களில் நான் வாதியாக, பிரதிவாதியாக, சாட்சிக்காரனாக நின்றிருக்கிறேன் என்பதே என் வரையில் இதை மிகவும் அந்தரங்கமானதாக ஆக்குகிறது. And I promise, for everybody, that will be the case. ******* ஆண் - பெண் : காதல் Vs நட்பு அராத்து ஆண் பெண் நட்பு / ஆண் பெண் காதல் இரண்டிலும் பொதுவான சில செயல்களை பார்த்து நக்கல் அடிக்கும் நயவஞ்சகர்களுக்காக இந்த பதிவு. இரண்டிலும் பொதுவாக சில வினைகள் இருந்தாலும், அவற்றிற்கிடையேயான மெல்லிய வேறுபாடுகளைப் பட்டியலிடுவதே நோக்கம். (1) காதல் : கட்டிப்பிடிக்கலாம், இறுக்கி கட்டிப்பிடிக்கலாம், ம...