தேவதை புராணம்

"At the touch of love everyone becomes a poet." - Plato

தமிழ் பேப்பர் மின்னிதழில் கடந்த ஃபிப்ரவரியில் நானெழுதிய காதல் புராணம் என்ற கவிதைத் தொடர் தற்போது தேவதை புராணம் என்ற பெயரில் புத்தக ஆக்கம் பெறுகிறது. கற்பகம் புத்தகாலயம் இதனை வெளியிடுகிறது.

தமிழ் பேப்பரில் வெளியான போது கிடைத்த அதீத‌ வரவேற்பு தான் இதை நூலாக்கும் எண்ணத்தையே தந்தது.

இது 150 சிறுகவிதைகள் கொண்ட தொகுப்பு. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவங்களில் ஒரு பெண் தன் காதலைப் பற்றியும், காதலனைப் பற்றியும் பேசுவதாய் அமைந்தவை இவை.


ஈராயிரம் ஆண்டுகள் பேசின சங்கதி என்பதையெல்லாம் தாண்டி காதலைப் பற்றிப் புதிதாய்ச் சொல்ல இன்னமும் விஷயமிருக்கிறது என்ற நம்பிக்கை தான் தேவதை புராணம். இது இளைஞர்களுக்கானது; இளைஞிகளுக்கானது. அதாவது உடலிலோ மனதிலோ இளமையைக் கொஞ்சமேனும் தேக்கி வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இதன் உட்கணமேனும் பிடிக்கும். பிடிக்க வேண்டும். காதலின் ரசனையான சுவாரஸ்யம் தான் தேவதை புராணம் தொகுதி.

மற்றபடி, "இதெல்லாம் கவிதையே இல்லை" பஜனை கோஷ்டிக்கும் நிறைய வேலை இருக்கும். தயாராகுங்கள்.

வெவ்வேறு கட்டங்களில் இந்தத் தொகுதியின் மீது நம்பிக்கை வைத்த நண்பன் இரா.இராஜரானுக்கும், எழுத்தாளர் பா.ராகவனுக்கும், பதிப்பாளர் ஆர்.நல்லதம்பிக்கும் என்னுடன் வாசகர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

புத்தகத்தை வடிவமைத்தவர் ஆர்.சி.மதிராஜ். வைரமுத்து போன்றவர்களின் புத்தகங்களுக்கு வடிவம் ஈந்தவர். அடிப்படையில் அவரே கவி என்பதால் வேலை சுளுவானது. அவரது டிஸைனை ஒரு கொண்டாட்டம் என்பேன்.

புத்தகம் 2012 சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியாகிறது. மற்ற‌ விவரங்களை பிற்பாடு தெரியப்படுத்துகிறேன்.

போன வாரம் எனது வலைப்பதிவில் வெளிட்டிருந்த புத்தக அட்டைப்படத்தைப் பார்த்து விட்டு கணிசமானோர் தேனருந்திய‌ நரி மாதிரி (என்ன ஓர் அழகான உவமை!) "யார் சார் அந்த ஃபிகரு?" என்று கேட்டவாறிருந்தனர்.

அந்தப் பேரழகியின் பெயர் அர்ச்சனா ஜோஸ் கவி. மேலதிக தகவல்களை கூகுளிடம் கேட்டுப் பார்க்கவும்!

Comments

Anonymous said…
1 doubt.

how to get the copy rite? where to get copy rite? plz tell me...
@Anonymous
The book is not yet ready. I will update once it is realeased.
Anonymous said…
u have mistaken my question...i didn't asked u the copy f ur book...i just want a help...

காப்புரிமை பெறுவது எப்படி? நான் சிறு புக் ஒன்று எழுதப் போகின்றேன். அதற்கு கேட்கின்றேன். (நான் என் சொந்த பணத்தில் ப்ரிண்ட் செய்து கொல்வேன்)....

எங்கே எப்படி காப்புரிமை பெறுவது? உதவுங்கள்.
@Anonymous
தெரியாது. மன்னிக்கவும்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்