விமர்சனமா? அவதூறா?
எக்ஸைல் பற்றிய என் விமர்சனத்துக்கு எதிர்வினையாய் சில பதிவுகளை சாரு தன் வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்து சற்று முன் நான் அவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது:
*******
from: Saravanakarthikeyan C. <c.saravanakarthikeyan@gmail.com>
to: Charu Nivedita <charu.nivedita.india@gmail.com>
date: Wed, Dec 14, 2011 at 10:12 AM
subject: விமர்சனமா? அவதூறா?
mailed-by: gmail.com
டியர் சாரு,
சாரு நிவேதிதா என்ற ஒருவருக்கு மட்டும் தான் மரியாதை. அல்லக்கைகளோடெல்லாம் மாரடிக்க விருப்பமில்லை. அதனால் உரையாடலை உங்களோடு மட்டும் மட்டறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
ஒருவரின் படைப்பை விமர்சிக்க அவரை விட உயர்ந்த படைப்பாளியாய் இருக்க வேண்டும் என்று சொல்வதே அராஜகமாகப் படவில்லையா? (அப்படியென்றால் ராகுல் டிராவிடைத் தவிர இவ்வுலகில் வேறு யாருமே சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை விமர்சிக்க முடியாது).
நான் உங்கள் பிரதியை அணுகியது ஒரு வாசகனாகவே; படைப்பாளியாக அல்ல. அதனால் உங்கள் படைப்பை நான் குறை சொன்னால் பதிலுக்கு "நீ என்ன பெரிய படைப்புப் புடுங்கியா?" எனக் கேட்பது அர்த்தமில்லாதது. உங்கள் குழந்தை போஷாக்காய் இல்லை என்று ஆதங்கப்பட்டால் பதிலுக்கு என் குழந்தை சவலைப்பிள்ளை என்று சொல்கிறீர்கள்.
நாவல் பற்றிய எனது விமர்சனத்துக்கு எதிர்வினையாக அது பற்றிய உங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பதே முறை. அப்படி அல்லாமல் சம்மந்தமின்றி இதில் என்னுடைய படைப்பை இழுத்திருப்பது உங்களின் பதட்டத்தையே காட்டுகிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன் மீது குற்றம் சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீது ஃபாஸிச பிஜேபி அரசு வழக்குப் போட்டதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
என் கவிதைத் தொகுதியின் இடம் என்னவென்று எனக்கு நன்கு தெரியும். அதை விதந்தோதுவீர்கள் என்றெல்லாம் அசட்டுத்தனமாய் எதிர்பார்த்து உங்களை வெளியீட்டிற்கு அழைக்கவில்லை. அதன் பேசுபொருள் குறித்து தமிழில் குறிப்பிடத்தகுந்த படைப்புகளை எழுதியவர் என்ற அடிப்படையிலேயே உங்களை அழைத்தேன். அதனால் அன்றைய உங்கள் உரையில் உண்மையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
அதனால் அன்று நீங்கள் பேசியதற்காய் இப்போது உங்களைப் பழிவாங்குகிறேன் என்பதெல்லாம் முதிர்ச்சியற்ற குதர்க்கப் பேச்சு. அப்படித் திரிப்பதன் மூலம் உண்மையில் நீங்கள் செய்திருப்பது Character Assasination.
மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இரவு பத்து மணி நேரம் கண்விழித்து ஒரு நாவலைப் படித்தவனுக்கு அது ஏமாற்றம் தந்தால் இப்படித்தான் எதிர்வினையாற்ற முடியும் (பிடிக்காத நாவலை எப்படி தொடர்ந்து பத்து மணி மேரம் படித்தாய் எனக் கேட்கலாம். விமர்சனம் எழுதத்தான் வேறுவழியின்றி தொடர்ந்து படித்தேன்). ஒருவேளை என் விமர்சனத்தில் துவேஷம் ஏதும் வெளிப்பட்டிருந்தால் அது என் மொழியின் போதாமையாகவே இருத்தல் வேண்டும். அல்லது பகடி என்கிற கலை எனக்குச் சரிவர கைகூடாமல் போயிருக்கலாம்.
என் கவிதை நொபேல் இலக்கியம் என்று எங்கும் மார் தட்டியதாய் எனக்கு நினைவில்லை. அப்படி சொல்லிக் கொள்கிறவர் தன் நாவலை எவ்வளவு தரமாக எழுதியிருக்க வேண்டும் என்பது தான் இங்கு பிரச்சனை.
இப்போதும் என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. "டியர் சாரு" என்று தான் தொடங்கி இருக்கிறேன்; பொறுமையாகவே உரையாடி இருக்கிறேன்; உங்களுக்குப் புரியவைக்கவே பிரியப்படுகிறேன். உங்களின் அடுத்தடுத்த படைப்புகளையும் படிக்கவே செய்வேன். காரணம் உங்கள் படைப்புத்திறன் மீது இன்னமும் மிச்சமிருக்கும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தான். என் விமர்சனம் என்பது அந்தக் குறிப்பிட்ட படைப்புக்கானது மட்டுமே. படைப்பாளியின் ஒட்டுமொத்த இலக்கிய ஸ்தானத்தை நிறுவும் செயல் அல்ல - வேண்டுமானால் அதன் ஒரு பகுதியாகக் கொள்ளலாம்.
கொஞ்சம் யோசியுங்கள். அவதூறு செய்திருப்பது நானா அல்லது நீங்களா?
- சி.சரவணகார்த்திகேயன்

Comments
சாரு பரத்தையர் கூற்று வெளியிட்டு பேசியபிறகுதான் நீங்கள் தேகம் பற்றி எழுதினீர்கள். அதில் இருந்த சாதக அம்சங்களையும் பட்டியலிட்டிருந்தீர்கள்.
இப்படியெல்லாம் விமர்சனத்திற்கு உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்தால், விமர்சிக்கவே முடியாது :-)
நான் சாருவின் எழுத்தை எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவரையோ அவர் எழுத்தையோ குறை சொல்லிவிட்டால் எப்படியெல்லாம் எதிர்வினையாற்றுகிறார்?அதைத்தான் சொல்கிறேன். உண்மை வீசம் என்ன விலை கேட்கும் உத்தமர் தான் இவர் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.
இந்த லட்சணத்தில் அவரும் ஜெயமோகனும் செய்வது கருத்தியல் மோதலாம்.
//கூறுகெட்ட கவிஞர்களின் குணக்கேடு - விபச்சார "வேலைக்கு" ஆள் எடுக்க சொன்னவரின் விபரீத விமர்சனம்//
இப்படி தலைப்பு வைத்திருக்கிறார் ஒருவர். அதற்கு சாரு சுட்டி தருகிறார். இன்னமும் இதை யாரும் கண்டித்ததாய் தெரியவில்லை.
இவரெல்லாம் தமிழ் எழுத்தாளாரம். இவரை கொண்டாடவில்லையாம்.. வாழ்க தமிழிலக்கியம்.
இப்படி ஒரு வரி இருக்கிறது சாரு வலையில்.
அதான் கமலை ரொம்ப வருஷமா பிடிக்கலையே! பின் ஏன் மீண்டும் மீண்டும் பார்த்து சொரிந்துக் கொள்கிறார? இதை சாருவிடம் அதே வாசகர் ஏன் கேட்கவில்லை?
இப்படி ஒரு வரி இருக்கிறது சாரு வலையில்.
அதான் கமலை ரொம்ப வருஷமா பிடிக்கலையே! பின் ஏன் மீண்டும் மீண்டும் பார்த்து சொரிந்துக் கொள்கிறார? இதை சாருவிடம் அதே வாசகர் ஏன் கேட்கவில்லை?/////////
ஜெயமோகன் இனி இந்தாளைப் பற்றிப் பேசுவது தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொள்வதற்கு சமம் என்று காரித்துப்பி விரட்டிய பிறகும்
'உத்தமத் தமிழ் எழுத்தாளன்' என்று இன்னும் அவரைப் பற்றி எழுதுகிறான் இந்த ஆள்..இலக்கியவாதி என்று காட்டிகிறாராம்..வடிவேலு நானும் ரவுடிதான்னு சொல்றமாதிரி.. இதை எந்த பிச்சக்காரப்பயலும் கேக்க மாட்டேங்குறான்...
இதில் ஜெமோவுக்கும் இவுருக்கும் நடப்பது தத்துவ மோதலாம்...எளவு..தத்துவம்னா என்னன்னாவது தெரியுமா இவருக்கு? ஜெமோவுக்கு உறை போடக்கூட காணமாட்டான்...
உங்களுக்கு இருப்பது perversion என்றால் சாருவுக்கு இருப்பதற்குப் பெயர் என்னவென்று சொல்வது?
சாருவைச் சுற்றியிருப்பவர்கள்தான் அவரது எதிரிகள்!
நீர் பிரசவித்த பரத்தையும் ஒரு குப்பை.சாரு பிரசவித்த Exile உம ஒரு குப்பை.இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.சாருவின் கோபமெல்லாம்,ஒரே ஒரு குப்பை பிரவித்த ஒருவர்,பல குப்பைகளை பிரவித்திருக்கும் இன்னொருவரை எப்படி விமரிசிக்கலாம் என்பதாகத்தான் இருக்கும்.எனவே
நீரும் விரைவில்,
மாமா கூற்று,குஷ்டரோகியின் கூற்று,
போன்ற "காவியங்களை"படித்துவிட்டு சாருவைத்தாக்கலாமே!
மன்னிக்கவும். யாரையும் மரியாதையின்றி வசைபாடுவதில் எனக்கு உவப்பில்லை.
வணக்கம். நான் இன்னும் எக்சைல் படிக்கவில்லை. ஆனால் நீங்கள் சரி இல்லை என்று சொல்லி விட்டீர்கள்.
உடனேயே நான் தெரிந்து கொண்டேன். நாவல் நன்றாக இருக்கும் என்று. ஏனென்றால் உங்களுக்கு நுண்ணுணர்வு இல்லை என்பதை உங்கள் தளத்தில் வெளியாகி இருக்கும் சினிமா விமர்சனங்களை படித்தாலே எளிதில் புரிந்து கொள்ளலாம்.
ஒரு தாழ்மையான விண்ணப்பம்.நீங்கள் கொஞ்சம் எழுதுவதை நிறுத்திவிட்டு சிறிது காலம் ஆழ்ந்து வாசியுங்கள் அப்பொழுதாவது உங்களுக்கு நுண்ணுணர்வு வருகிறதா என்று பார்க்கலாம்.
உங்களை போன்ற பால்வடிக்கெல்லாம் நான் கமென்ட் போடுவதில்லை. என்னவோ உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதனால் தான் உங்களுக்கு உங்களை பற்றி புரிந்து கொள்ள இந்த கமெண்டை எழுதினேன்.
அப்புறம் எதற்காக, அவருக்குத் தனி மடல், சுய விளக்கம் எல்லாம்!
அவரை மகாத்மா ரேஞ்சுக்கு பேசியவர்கள் உண்டு
//
அவ்வ்வ்... இன்னமும் அப்படித்தானே.. இப்ப எல்லாம் மகாத்மா ரேஞ்சைத் தாண்டி கடவுள் ரேஞ்சுக்கு போயிட்டாரு, பாலபிஷேகம் எல்லாம் நடக்குது பாஸ்...
@சி எஸ் கே.. உங்க பதில் அருமை. ஆனா அவர் உங்க புத்தகத்தை மோசமா விமர்சிச்ச நிலையில் நீங்க அவர் புக் நல்லாயில்லைன்னு சொன்னா இப்படித்தான் எதிர்வினை வரும்ன்றதை நீங்க எதிர்பார்க்கலைன்னு நம்ப நான் தயாரா இல்லை.
ஓ.........அந்த கொட்டை இல்லாத பழமா?
.
.
கொட்டை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதை பற்றி அடுத்த கதையில் சொல்வாராம்!