மெல்லினம் இதழில் (நவம்பர் 2011) வெளியான 7ஆம் அறிவு பற்றிய எனது திரைவிமர்சனத்தின் முழு வடிவம் இது: ******* ஏ.ஆர்.முருகதாஸ் முதல் சூர்யா வரை தமிழனின் பெருமையைச் சொல்கிறதென கூவியறிவித்த படம்; சன் டிவி முதல் விஜய் டிவி வரை ப்ரோமோ நிகழ்ச்சிகளின் மூலமாக உயரத் தூக்கிப் பிடித்த படம்; மல்ட்டிப்ளெக்ஸ் முதல் கீற்றுக்கொட்டகை வரை போட்டிபோட்டு வாங்கித் திரையிட்டிருக்கும் தீபாவளிப்படம் - 7ஆம் அறிவு . இந்தப்பின்புலங்களோடு சேர்த்துப்பார்க்கையில் படம் ஏமாற்றத்தையே அளிக்கிறது. 7ஆம் அறிவு படத்தின் கதை என்ன? ஆரம்பத்தில் சொல்லப்பட்டது போல் இது ஹாலிவுட்டின் இன்செப்ஷனோ , பாலிவுட்டின் சாந்தினி சௌக் டூ சைனா வோ அல்ல. ஆனால் கொஞ்சமாய் தசாவதாரம் படத்தின் சாயல் மட்டும் இருக்கிறது. 6ம் நூற்றாண்டு போதி தர்மன், சீனா சென்று, மக்களை கொடிய நோயிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றி பின் மருத்துவத்தையும் தற்காப்புக்கலையையும் கற்றுத்தருகிறார். 21ம் நூற்றாண்டில் இந்தியா மேல் கிருமி யுத்தம் நிகழ்த்த வரும் சீனஉளவாளிக்கு போதிதர்மரை genetics மூலம் மறுபடி உருவாக்க முயலும் பெண் விஞ்ஞானி தடையாக வர, எந்த நூற்றாண்டு...