மற்றுமொரு டிசம்பர் 6
என் ப்ரியத்துக்குரிய எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புதிய நாவலான எக்ஸைல் (ஆங்கிலப்பெயரா? இதற்கெல்லாம் வரிவிலக்குச் சலுகை இல்லையா?) வரும் டிசம்பர் 6 அன்று காமராஜர் அரங்கில் மாலை ஆறு மணியளவில் நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது. சூழ்நிலை சாத்தியப்படும் ரசிக அன்பர்கள், வாசக நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள். தள்ளுபடி விலையில் எக்ஸைல் நாவலை முன்பதிவு செய்து கொள்ள: https://www.nhm.in/shop/978-81-8493-204-1.html இந்த நாவலுக்கு சினிமா போல் ப்ரோமோ வீடியோ எல்லாம் செய்து எதிர்பார்ப்பு மீட்டரை எகிறச் செய்திருக்கிறார்கள். அலுவல்கள் கழுத்தை இறுக்கி நெருக்குவதால் 99% நான் கலந்து கொள்ளவியலாது என்றே தெரிகிறது. பார்க்கலாம்.