ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்
இரு வாரங்களுக்கு முன் எழுத்தாளர் சுஜாதா குறித்து ஜெயமோகன் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்வினையாய் இந்த மின்னஞ்சலினை அவருக்கு அனுப்பியிருந்தேன்.
*******
from c.saravanakarthikeyan@gmail.com
to jeyamohan.writer@gmail.com
date Thu, Aug 18, 2011 at 1:33 AM
subject சுஜாதாவும் இளைஞர்களும் - சில கருத்துக்கள்
mailed-by gmail.com
டியர் ஜெயமோகன்,
"சுஜாதாவின் எழுத்து இன்றைய இளைஞர்களைக் கவர்வதில்லை" என்கிற தொனியில் நீங்கள் எழுதியிருந்த ஒரு சிறிய குறிப்பினை வாசித்தேன் [சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம் - http://www.jeyamohan.in/?p=19548]. இவ்வாக்கியத்தின் பொருளை முழுவதுமாய் உள்வாங்கிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இவ்விளக்கத்தைக் கோருகிறேன். மற்றபடி சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்திற்குக் கொடி பிடித்து எழுதப்படுவதல்ல இக்கடிதம்.
இதன் அர்த்தம் இன்றைய இளைஞர்கள் சுஜாதாவைப் படிப்பதில்லை என்பதா அல்லது சுஜாதாவைப் படிக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அவரெழுத்து பிடிக்கவில்லை என்பதா? சுஜாதாவைப் படிப்பதில்லை என்றால் அவர்கள் வேறு யாரைப் படிக்கிறார்கள்? படித்தும் பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு வேறு யாரைப் பிடிக்கிறது?
இவ்விடயம் குறித்த என் புரிதலாக சிலவற்றை சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.
பதின்மத்திலிருந்து விலகும் ஒரு தமிழ் இளைஞனுக்கு வாசிப்பில் சுஜாதா ஒரு மிகச்சிறந்த ஆரம்பப்புள்ளி. சுலபமான அதே சமயம் கவர்ச்சிகரமான துவக்கம். ஆரம்பத்தில் வாசிப்பதற்கான ஒருவித ஊக்கத்தினை / போதையினை சுஜாதாவின் எழுத்துக்களிலிருக்கும் வாசிப்பின்பம் அளிக்கிறது. அது அலுக்கும் போது நிஜமான தேடலை உடையவன் அங்கிருந்து நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு நகர்வான். இத்தகைய எளிமையான துவக்கத்தைத் தரக்கூடிய எழுத்து என்றால் தமிழில் பிரதானமாய் சுஜாதாவையே குறிப்பிட வேண்டியிருக்கிறது.
ஒருவர் ஆழமான எழுத்துக்களை வந்தடைய சுஜாதா ஒரு மறைமுக மார்க்கம். வாசிப்பின்பத்தை விட வாசிப்பாழம் முக்கியம் என்ற புரிதல் வருவதற்கு ஒருவன் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். அந்த சுண்டியிழுக்கும் துவக்கத்தை குறைந்தபட்சம் அடுத்து வரும் ஐம்பதாண்டுகளில் எந்தவொரு சராசரித் தமிழ் இளைஞனுக்கும் சிறப்பான முறையில் அளிக்க வல்லவை சுஜாதாவின் எழுத்துக்கள் என்பதாகவே எண்ணுகிறேன்.
மாறாக, விபத்தாய் ஆரம்பத்திலேயே உங்களைப் போன்றவர்களின் சிக்கலான எழுத்தை [நேர்மறை அர்த்தத்தில்] தன் வாசிப்பாய்த் துவக்கும் ஒரு பக்குவமுறா வாசகன் அதன் வீச்சின் கடுமையில் ஊக்கமிழந்து தன் வாசிப்பை நிறுத்திவிடக்கூடும். பதிலாய் அவன் சுஜாதாவில் தொடங்கி மெல்ல உங்களிடம் வரலாம்.
ஆரம்பத்திலேயே முதிர்ந்த நோக்குடன் வாசிப்பைத் தொடங்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைந்தவர்கள். அதே போல் சுஜாதாவில் தொடங்கி சுஜாதாவிலேயே முடிந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். இந்த இரு சாராரையும் தவிர்த்து, இன்னும் தொடக்கம் கிடைக்காத, கிடைத்தால் நல்ல வாசிப்பை நோக்கி நகரக்கூடிய வாசகர்கள் கணிசமானோர் இருக்கிறார்கள். இங்கு தான் சுஜாதாவின் தேவை இருக்கிறது.
அல்லது இன்றைய இளைஞர்கள் தமிழ் படிப்பதேயில்லை என்பதைத் தான் அப்படி அங்கதமாய்க் குறிப்பிட்டீர்களா - ஒருவன் சுஜாதாவை விரும்பவில்லை என்றால் அவன் தமிழே படிக்கவில்லை என்ற அர்த்தத்தில்? ;-)
சி.சரவணகார்த்திகேயன்
www.writercsk.com

Comments
சீரங்கத்து தேவதைகளில் வரும் சுஜாவின் பாட்டி பற்றிய ஒரு கதைக்காவே சுஜாதாவை எவ்வளவு வேண்டுமானாலும் புகழலாம்.
சுஜாதவை ஜெ ஒரே அடியில் கீழே தள்ளப் பார்ப்பது சுஜாவின் ரசிகரான உங்களை சாத்துவது போல் உங்களுக்கு இருந்திருக்கிறது. நீங்கள் Jவிற்கு பதில் எழுதி மெய்ல் அனுப்பியது என்பது ஒரு self checking. மொத்தம் 10 வகை self checking உண்டு. அது இவை.
1st type of self checking: தான் சரியா தவறா என்பதை அறியவும் தான் எந்த நிலையில் உள்ளோம் என்பதை செக் செய்யவும் அடுத்தவர்களோடு தன்னை ஒப்பிட்டு அதன் மூலம் மனிதன் தன்னை செக் செய்து கொள்கிறான்.
2nd type of self checking: தான் சரியா தவறா என்பதை அறியவும் தான் எந்த நிலையில் உள்ளோம் என்பதை செக் செய்து கொள்ளவும் மனித மனம் ’திணித்தல்’(imposing) என்ற வழியை பயன் படுத்துகிறது.
3rd type of self checking:
ஒருவரை இவர் இப்படிப்பட்டவர் என முன்கூட்டியே guess செய்து விட்டு அந்த guess சரிதானா என அறிய அதன் பின் அவரையோ அவர் சம்பந்தபட்டவட்டையோ ஆராய்ந்து அதன் மூலம் தன்னையும் தன் guessஸையும் check செய்து கொள்வது.
4th type of self checking:
தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து அதன் மூலம் தன் நிலையை செக் செய்து கொள்வது.
5th type of self checking:
அடுத்த மனிதனை அறிவதின் மூலம் தன்னை அறிவது. அடுத்தவன் என்பவன் நம்மிடமிருந்து முழு முற்றாக வேறு பட்டவனா என்ன?
6th type of self checking: தான் சரியா தவறா என்பதை அறியவும் தான் எந்த நிலையில் உள்ளோம் என்பதை செக் செய்யவும் 'துணைத்தேடல்' என்பதையும் மனித மனம் பயன் படுத்துகிறது.
7th type of self checking: அடுத்தவர்களிடம் எதையோ சொல்லியோ அல்லது எதையோ தந்தோ அல்லது எதையோ செய்தோ அதை அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை அறிந்து அதன் மூலம் தன்னை அறிதலும் தன் நிலையை செக் செய்தலும். அல்லது எத்தனை பேர் தான் சொல்லியதை(or செய்ததை or தந்ததை) ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை கணக்கிட்டு அதன் மூலமும் கூட மனிதன் தன்னைத் தானே செக் செய்து கொள்கிறான்.
8th type of self checking: அடுத்தவர்களோடு உடல் மூலம் சண்டையிட்டோ அல்லது தர்க்கம் மூலம் மோதியோ தன்னை அறியப் பார்ப்பதும் தன் நிலையை செக் செய்ய பார்ப்பதும்.
9th type of self checking: அடுத்தவர்களின் plus மற்றும் minusகளை மிகத் துல்லியமாய் எடை போட்டு அதன் மூலம் தன்னை அறியப் பார்ப்பது. அடுத்தவர்களில் ப்ளஸ் மைனஸ்களை மிகத் துல்லியமாய் எடை போட்டு அதன் மூலம் தன்னை பட்டை தீட்டிக் கொள்வது.
10th type of self checking: தான் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்து கொள்ள தன் செயல்களை கவனிப்பதை விட்டு விட்டு தானாகவே ’நான் நல்லவன்’ என்ற ஒரு கற்பனையை வளர்த்துக் கொண்டு அதற்கு உறம் சேர்க்கும் விதமாய் பிச்சைகாரனுக்கு காசு போடுதல் போன்ற வெளிப்படையாக உணரக் கூடிய செயல்களை செய்து அந்த செயல்களை மிக கவனமாய் தன் நினைவில் நிறுத்திக் கொண்டு அதன் மூலம் தான் நல்லவன் என்று அவனாகவே நம்பிக் கொண்டானே அது சரிதான் என்று மீண்டும் நம்பிக் கொள்ளுதல்.
(d 1st type is told by AAdhavan. 2nd type by professor A.Ramasamy. The other 8 types r by me)...d
தானே சரி என்று நம்புகிறவர்கள்தான் எல்லோரும். அப்படி நம்புவதற்கு தொடர்ந்து தன்னைப் போல் அல்லாத அடுத்தவர்களை சரி இல்லை என்று சொல்வது. தான் சரி என்று தொடர்ந்து நம்பிக் கொள்ள தொடர்ந்து அடுத்தவர்களை சரி இல்லை என்று சொல்வது. வெறுமனே நான் எனக்கு சரி; அவன் அவனுக்கு சரி என்று யாருமே சொல்வதில்லை.
see what u have written here about theists
http://www.writercsk.com/2009/04/sarkars-philosophy-xxii.html
Unfortunately, GOD created all theists as irreversible fools
நீங்கள் உண்மையிலேயே பறக்கும் இனத்தை சேர்ந்தவர் எனில் ஊர்ந்து செல்லும் சிற்றுயிரைப் பற்றி பேசவே மாட்டீர்கள். உங்களுக்கு உள்ளூர சந்தேகம் இருப்பதினால் தான் ஊர்ந்து செல்லும் சிற்றுயிரைப் பற்றி பேசிக் கொண்டு உள்ளீர்கள்.