பரத்தை கூற்று : கல்யாண்குமார்
கல்யாண்குமார் ' புதிய தலைமுறை ' வார இதழின் உதவி ஆசிரியர். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை விவாதக்குழுவில் பணியாற்றுகிறார். ' பரத்தை கூற்று ' தொகுப்பு குறித்து அவர் எழுதியிருந்த மின்னஞ்சல் இங்கே: ******* அன்பான சரவண கார்த்திகேயன், இனிய வணக்கம். நான் கல்யாண்குமார். புதிய தலைமுறையில் உதவி ஆசிரியராக உள்ளேன். நண்பர் அதிஷா மூலமாக உங்களின் பரத்தை கூற்று படிக்கக் கிடைத்தது.ஆழமான அழுத்தமான விஷயங்களை உங்களின் எளிய சொல்லாடல் மூலம் அற்புதமாக பதிவு செய்து, பரத்தையரின் உலகிற்காக ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். அவர்களுக்குக் குரல் கொடுக்க எழுத்தாளர்களாகிய நம்மைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் பாவம். இது அவர்களுக்கான ஒரு சிறப்பிதழ் என்றே சொல்லலாம். நகைச்சுவையையும், சிந்தனையையும், அவர்களின்பால் பரிதாபத்தையும் அந்தக் கவிதைகளை படிக்கிற தருணத்தில் தூண்டி விடுகின்றன, உங்களின் வீரியமிக்க வரிகள். உங்களுக்கு எழுத்துத் துறையில் வெளிச்சம் நிறைந்த எதிர்காலம் இருப்பதை உணர்கிறேன். வாழ்த்துகள், அன்புடன் கல்யாண்