கவுச்சி வாடை

*

மீண்டும் மீண்டும் வேண்டும்
உப்புப் பொரிந்தபடி மிதக்கும்
சதைத்திரட்சியின் ஈர‌ வாசம்.

*

சொற்களில் இல்லை கலவி
காட்சியில் இல்லை கலவி
கலவியிலும் இல்லை கலவி.

*

கொழுத்த மீன் பிடிக்கத்
தலை குனியும் கொக்கு
கணக்காய்த் துடிக்கிறது
வெட்கங்கெட்ட வேட்கை.

*

எள்ளி நகைத்திடலாம்
அள்ளித் தூற்றிடலாம்
கொள்ளியும் வீசிடலாம் -
காறியுமிழ் காமம் தானே!

*

எல்லாம் முடிந்து களைத்த‌
ஒற்றைப் பெருமுச்சுடன்
மல்லாக்கப் படுக்கையில்
துளையிட்ட பலூன் போல்
சிறுத்துப் போய்க்கிடக்கிறது
உடம்புரசுமிந்த ஆதிய‌ரிப்பு.

*

Comments

Anonymous said…
kavarchi vaadai yenra thalaippai paarththu vittu ullae vandhaen...yaemaandhu poi vittaen...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி