பெயரற்ற வரிகள்
*
சற்று முன்பு
எழுதப்பட்ட
இந்த வரி
என்னுடையதா?
*
பதில்களால்
வெட்ட வெட்ட
கேள்விகளில்
கிளைக்கிறது
வாழ்க்கை.
*
அதிஅற்புதங்கள்
பல்கிப்பெருகிட
அருகிக்குறுகின
சாதாரணங்கள்.
*
எப்போதும் எங்கும்
எவ்விஷயத்திலும்
தேவைப்படுகிறது -
துளி தூய விஷம்.
*
நேற்றே வந்திருப்பேன்
நாளை கிளம்பி விடின்;
இப்போது இன்றாகிறது.
*
சற்று முன்பு
எழுதப்பட்ட
இந்த வரி
என்னுடையதா?
*
பதில்களால்
வெட்ட வெட்ட
கேள்விகளில்
கிளைக்கிறது
வாழ்க்கை.
*
அதிஅற்புதங்கள்
பல்கிப்பெருகிட
அருகிக்குறுகின
சாதாரணங்கள்.
*
எப்போதும் எங்கும்
எவ்விஷயத்திலும்
தேவைப்படுகிறது -
துளி தூய விஷம்.
*
நேற்றே வந்திருப்பேன்
நாளை கிளம்பி விடின்;
இப்போது இன்றாகிறது.
*
Comments