(தமிழ்) தேசிய விருதுகள்
முதலில் செய்திகள் வர ஆரம்பித்த போது சந்தேகமே வந்து விட்டது. மாநில திரைப்பட விருதுகளா, தேசிய திரைப்பட விருதுகளா என்று. பின் ராஜீவ் மசந்த் முதல் சொக்கன் வரை மயக்கம் தெளிவித்தார்கள். தமிழுக்கு மட்டும் இம்முறை மொத்தம் 15 விருதுகள்: வெற்றிமாறன் (இயக்கம் & திரைக்கதை - ஆடுகளம் ), தனுஷ் (நடிகர் - ஆடுகளம் ), கிஷோர் (படத்தொகுப்பு - ஆடுகளம் ) தினேஷ் குமார் (நடன அமைப்பு - ஆடுகளம் ), வ.ஐ.ச.ஜெயபாலன் (சிறப்பு குறிப்பு - ஆடுகளம் ), (சிறந்த தமிழ் படம் - தென்மேற்குப் பருவக்காற்று ) சரண்யா (நடிகை - தென்மேற்குப் பருவக்காற்று ), வைரமுத்து (பாடல் - தென்மேற்குப் பருவக்காற்று) ), ஸ்ரீநிவாஸ் மோகன் (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - எந்திரன் ), சாபு சிரில் (கலை இயக்கம் - எந்திரன் ), சுகுமாரி (துணை நடிகை - நம்ம கிராமம் ), இந்திரான்ஸ் ஜெயன் (ஆடை அலங்காரம் - நம்ம கிராமம் ), தம்பி ராமையா (துணை நடிகர் - மைனா ) மற்றும் ஓவியர் ஜீவா (சினிமா எழுத்து சிறப்பு குறிப்பு - திரைச்சீலை ). சென்ற வருடத்தைய என் பட்டியலில் ஆடுகளம் படம் கணக்கில் கொள்ளப்படவே இல்லை (சென்னையில் படம் வெளியாகும் நாளே எனக்கு கணக்கு; தணிக்கை சான்றிதழ் தே...