Posts

Showing posts from April, 2011

படித்த‌து / பிடித்தது - 100

அசாவாமை குறிப்புகளை எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன் குறிப்புகளின் மதிப்பு குப்பைகளுக்குச் சமானமில்லை ஒரு மாத்து குறைவுதான் முத்தம்மா கொட்டும் குப்பையில் எப்போதேனும் தென்படும் ஆணுறை போல யாருமில்லாததை உறுதி செய்து கொண்டு ஆட்காட்டி விரலை மடக்கி பளிப்பு காட்டும் எதிர் வீட்டு +2 மாணவியைப் போல காகத்திற்குப் பதிலாய் கரண்ட் கம்பத்தில் கரிச்சான் இருப்பதைப் போல மேலாளர் விடுப்பில் இருக்கும்போதும் அவர் மேஜையை ஒழுங்கு செய்யும் சேவகன் போல அரிதாகவே தோன்றி அப்போதே மறையும் தன்மையுடைத்த பூந்திக்கொட்டைகளைப் பொறுக்குவது போல மண்ணரிக்கையில் மினுங்கும் பொற்துகளை புளி ஒற்றி எடுப்பது போல இறுதி ஓவரில் ஓடி ஓடி ரன் எடுப்பது போல முகநூலில் நாரியரைத் தேடித் தேடிச் சேர்ப்பது போல அரும்பாடு பட்டுத்தான் சேகரம் செய்கிறார்கள் எழுத்தாளனை எரியூட்ட அவன் ஆயுளில் சேகரித்த குறிப்பு மூட்டைகள் போதுமானவை நேரடியானவை நேர்மையற்றவை எவருக்கும் புரிபைவை எழுதியவனுக்கே கிரந்தம் எடுப்புச் சோறென ஏகப்பட்ட ரகங்கள் கடைசிப்பேருந்தை தவறவிட்ட கொசுக்கடி ராத்திரியில் காணாமற் போன மகனின் சடலத்தை

படித்தது / பிடித்தது - 99

முன்னாள் காதலிகள் சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன் எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும் முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவென மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன். எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும் அதுவும் ஐந்து என அவள் சொல்கையில் மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம். - லதாமகன் நன்றி : நவீன விருட்சம்

நல்ல‌ நோட்டு குறிப்புகள்

Image
கள்ள ரூபாய் நோட்டுக்களை இனங்கண்டு கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கிய‌க்குறிப்புகளை பொது மக்கள் நலங்கருதி வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். முக்கியமாய் 1000, 500 ஆகிய ரூபாய் நோட்டுக்களிலேயே கள்ளப்பணப்புழக்கம் அதிகமிருக்கும் என்பதால் அவற்றை வாங்கும் போது கூடுதல் கவனத்துடன் இக்குறிப்புகளைப் பின்பற்றுவது நல்லது. இது தவிர எளிய முறையில் பல பயனுள்ள தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த வலைப்பக்கம் வழங்குகிறது: http://www.rbi.org.in/commonman/Tamil/scripts/home.aspx

ஸ்பாம் மெயில் - தொடர்ச்சி

ஸ்பாம் மெயில் குறித்த எனது முந்தைய பதிவுக்கு எழுத்தாளர் என்.சொக்கன் ட்விட்டரில் பகிர்ந்திருந்த கருத்துக்கள் இவை: ******* நண்பரே, ஸ்பாம் மெயிலை மறுப்பது ஒருவர் தனி உரிமை. அதற்காக இப்படியெல்லாமா திட்டுவீர்கள்? :) என்னைப் பொறுத்தவரை தவறு எஸ்.ரா.மீதுதான், அவர் அந்த முதல் மெயிலில் எல்லா ஐடிகளையும் bccயில் போட்டிருக்கவேண்டும் நீங்கள் சொல்வதுபோல் ரூல் செட்டப் செய்து அந்த த்ரெட்டை ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புவதெல்லாம் சிலருக்குதான்தெரியும் மற்றவர்கள் நெளிந்திருப்பார்கள். இருவர் தைரியமாகச் சொன்னார்கள். இப்படித் திட்டுகிறீர்கள் :) எஸ்ரா விருது பெற்றது சந்தோஷம்.அதற்காக எல்லோரும் அவரை என் முன்னிலையில்தான் பாராட்டவேண்டுமா? :) இதே நிஜப் பாராட்டுக் கூட்டமாக இருந்தால் அங்கே சென்று உட்கார்ந்தது என் முடிவு, காது நிறையக் கேட்டிருப்பேன் இங்கே நடப்பது அதுவல்ல, அந்த த்ரெட்டில் என் முகவரி இருப்பது என் முடிவல்ல, எஸ்.ரா. முடிவு உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள், ஸ்பாம் எந்த வடிவில் வந்தாலும் தவறே. இது எஸ்.ரா.வை அவமானப்படுத்துவதாகாது ******* என் வரையில் சொக்கன் பழகுதற்கு மிகுந்த pleasant ஆ

ஸ்பாம் மெயில் - ஓர் எதிர்வினை

நேற்று எஸ்.ராமகிருஷ்ணன் தான் தாகூர் இலக்கிய விருது பெற்ற செய்தியை மின்னஞ்ச‌ல் வழி இணையத்தில் எழுதும் குறிப்பிட்ட சில நூறு பேர்களிடையே பகிர்ந்திருந்தார். அதற்கு ரிப்ளை ஆல் செய்து வாழ்த்தியவர்களைக் கண்டித்து, தங்களுக்கு அது தொந்தரவாயிருக்கிறது என்ற தொனியில் கவிஞர் வா.மணிகண்டன், பதிவர் சந்தன‌முல்லை இருவரும் சொல்லியிருந்தார்கள. சக மனிதனை மதிக்காத சூழ்நிலையில் தான் அவனுக்கு மேலாகத் தன்னைக் கருதிக் கொண்டு அறிவுரை சொல்லும் திமிர் வரும் என நான் கருதுவதால் அந்த பூர்ஷ்வாத்தனத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டியது அவசியமாகிறது. ******* அன்பில்லாத வா.மணிகண்டன் மற்றும் சந்தனமுல்லைக்கு, ரிப்ளை ஆல் போட்டு எல்லோர்க்கும் மெயில் அனுப்புவது நிச்சயம் ஸ்பாம் செய்வது தான். நான் செய்ய விரும்பாததும், அடுத்தவர் எனக்கு செய்வதை வெறுப்பதுமான‌ ஒரு வேலையே அது. என் புத்தக வெளியீட்டு விழாவிற்கான அழைப்பை எல்லோர்க்கும் அனுப்பி வைத்த போது,‌ எல்லோரும் வாழ்த்துச் சொல்லி ரிப்ளை ஆல் செய்ய ஆரம்பிக்க எனக்கு மிகவும் சங்கடமாகிப் போனது (எஸ்.ரா. கூட அப்பட்டியலிலிருந்து என்னைத் தனியஞ்சலில் கடிந்து கொண்ட நினைவு). அதனால் ரிப்ளை ஆல்

சுஜாதா விருதுகள் - 2011 : சில குறிப்புகள்

உயிர்மை குழுமம் வழங்கும் சுஜாதா விருதுகள் - 2011 அறிவிக்கப்பட்டிருக்கின்றன. http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4212 இணையப்பிரிவில் அடியேனின் பெயரும் பொடியெழுத்துக்களில் இடம் பெற்றுள்ளது. ******* உயிர்மை குழுவினரால் இறுதி தேர்விற்காகப் பரிந்துரைக்கப்பட்ட 6 இணைய‌தளங்களில் என்னுடையதும் ஒன்று. பின் இறுதிச்சுற்றில் சாரு நிவேதிதா, ஷாஜி மற்றும் தமிழ் மகன் ஆகியோரால் 30க்கு 10 புள்ளிகள் அளிக்கப்பட்டு 4ம் இடம் வழங்கப் பட்டிருக்கிறது. முதல் கட்ட‌ உயிர்மை குழுவுக்கும் இறுதிச் சுற்றின் நடுவர் குழுவுக்கும் நன்றிகள் உரித்தாகுக‌. இந்த இடமே நான் எதிர்பாராரது தான். காரணம் கடந்து போன‌ ஒன்றரை ஆண்டுகளாகவே வலைப்பதிவில் நான் தீவிரமாக இயங்கியிருக்கவில்லை. எழுதிய சொற்ப இடுகைகளும் பெரும்பாலும் சினிமா தொடர்பானவையே. கிட்டதட்ட ஒரு‌ மின்னூடக‌ வண்ண‌த்திரை ஆகி விடக்கூடிய அபாயத்துடன் தான் என் வலைப்பதிவு இருந்து வருகிறது. இச்சூழலில் உயிர்மை விருதுகளுக்காக விண்ண‌ப்பிக்கையில் பதிவின் பத்து முக்கிய இடுகைகளின் சுட்டிகளை அளிக்கக் கேட்டிருந்தார்கள். அத்தேர்விற்கே விழி பிதுங்கி விட்டது எனக்கு.

புதிய தலைமுறை

Image
" I am a New Generaion Girl!!! Any thing for my Country to get Home the World Cup So INDIA Cheer with me That we need 1983 BACK " - ட்விட்டரில் பூனம் பாண்டே, மார்ச் 31, 2011 மதியம் 2:39 ******* பூனம் பாண்டே - 72 மணி நேரத்துக்கு முன் இந்தப் பெயரை உச்சரித்திருந்தால் நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்காது; ஆனால் இக்கணம் இப்பெயர் பிரபஞ்ச பிரசித்தம். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்லும் நாளைய பொன் நிகழ்வில் இந்த ஐந்தடி ஏழங்குல உயர 19 வயது மும்பை மாடலின் தூய நிர்வாண அழகியலை பேரார்வத்துடன் எதிர்நோக்கியிருக்கின்றன‌ சுமார் 242 கோடி இந்தியக் கண்கள். வாழிய, நம் நாட்டுப்பற்று! உலகக்கோப்பை போன்ற பிரம்மாண்ட விளையாட்டு நிகழ்வுகளில் இது போன்ற அதிர்ச்சி மதிப்பீட்டு அறிவிப்புகள் வெளியிடப்படுவது புதிதல்ல. கடந்த 2010 உலகக்கோப்பை கால் பந்துப் போட்டியில் கூட இது நடந்தது. அர்ஜெண்டினா கோப்பை வென்றால் அந்நாட்டின் தலைநகரான Buenos Airesல் நிர்வாணமாக ஓடுவதாக Luciana Salazar என்ற 29 வயது மாடல் அறிவித்தார். பதிலுக்கு பேரகுவே கோப்பை வென்றால் அதன் தலைநகரான Asunciónல் நிர்வாணமாக ஓடுவதாக Lari

பரத்தை கூற்று : கீதாஞ்சலி பிரியதர்ஷினி

திருச்சியைச் சேர்ந்த கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்ஷினி திருமதியாகிய நான் , அவனைப் போல் ஒரு கவிதை ஆகிய கவிதைத் தொகுப்புக்களையும், மறந்து போன குரல் என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியிருக்கிறார். திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றவர். அவர் சில வாரங்கள் முன்பு பரத்தை கூற்று கவிதைத் தொகுதி பற்றி அகநாழிகை பதிப்பகத்துக்கு ஒரு விமர்சனக்கடிதம் எழுதியிருந்தார். அதை இங்கே பதிகிறேன்: ******* பரத்தை கூற்று - சி.சரவணகார்த்திகேயன் தமிழ்ச் சமூகத்தின் முகமூடிகளை கிழிக்கிறேன் என்பதும் இவற்றை கடந்து செல்கிறேன் என இளைஞர்களின் மனம் சங்கல்பம் எடுப்பதும் எவ்வளவு பழமை எனில் பரத்தமை எனும் சொல்லாக்கமும் அவ்வளவு பழமையானது என்பது மீண்டும் ஒரு கவிஞனின் அகச்சீற்றத்தை நாம் தரிசிக்கும் போது உணர முடிகிறது. தமிழில் சூடு, சொரணை, பொய், பித்தலாட்டம் இப்படிப்பட்ட பேச்சுச் சொற்கள் வழக்கொழிந்த நிலை போல பரத்தை எனும் சொல்லெல்லாம் மாறி இன்று பாலியல் தொழிலாளி என்று உருமாறியிருப்பதால் கவிஞர் கவலைப்பட தேவையில்லை எதற்கும். ஆனால் இன்னமும் வீடுகளில் ஒப்பாரி வைக்கும் தொலைக்காட்சி சீரியல் கதாநாயகிகளின் கிளிசரின் கண்ணீருக்கு