உடுமலை.காம் - ஓர் அறிமுகம்
உடுமலை.காம்-ல் ராஜா சந்திரசேகரின் சமீபத்தைய இரண்டு கவிதைத்தொகுப்புகளை (அனுபவ சித்தனின் குறிப்புகள், நினைவுகளின் நகரம்) நேற்று மாலை 4 மணிக்கு ஆர்டர் செய்திருந்தேன், இன்று மதியம் 1 மணிவாக்கில் வந்து சேர்ந்து விட்டது. அதாவது நான் ஆர்டர் செய்து இன்னமும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் சரக்கு கைக்கு கிடைத்து விட்டது. உடுமலை.காம் இருப்பது தமிழகத்தின் உடுமலைப்பேட்டையில், நானிருப்பது கர்நாடகத்தின் பெங்களூருவில் என்பதையும் இங்கே கணக்கில் கொண்டு யோசித்தால் இது எனக்கு ஒரு பேராச்சிரியமாகத் தோன்றுகிறது. இந்த வேகத்திற்கான logistics சேவைகள் இருக்கின்றன என்றாலும் ஒரு தமிழ் நிறுவனம் - அதுவும் புத்தக வியாபாரம் தொடர்பானது - இத்தனை கச்சிதமாய்ப்பணி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழிலக்கியம் தொடர்பான கிட்டதட்ட எல்லா நூல்களும் இவர்களிடம் கிடைக்கின்றன. தபால் செலவும் இலவசம். அழகாய்ப் பேக் செய்து பத்திரமாய் வந்து சேர்ந்து விடுகிறது. தவிர, சென்னையில் இருப்பவர்கள் புத்தகக்கடைகளில் தேடியலைய வேண்டியதில்லை; வெளியூரில் இருப்பவர்கள் புத்தகக்கடைகளையே தேடியலைய வேண்டியதில்லை. மிக மிகச்சுலபம். நண்பர்கள் அனைவருக்கும் இவ்விணையதளத்தினை சிபாரிசு செய்கிறேன்.
http://udumalai.com/
நண்பனிடம் இவ்விஷயத்தைச் சொல்லி வியந்த போது "E-Bookஆ?" எனக்கேட்டான். E-Book என்றால் கூட இந்த வேகத்திற்கு வியக்கவே செய்திருப்பேன். Hats-off to them!

Comments
http://www.noolulagam.com
their service also good.
yes.. they are serving to foreign countries also.. please look into the details here..
http://udumalai.com/?page=faq
free home deliverynnu vera solreeenga kandippa use aagum :)
ஒரு முறை நீங்கள் கூறியது போல 24 Hrs உள்ளாகவே புத்தகங்கள் வந்துவிட்டது(நானும் பெங்களூர் தான்).
ஆனால் மூன்று வாரத்திற்கு முன் ஆர்டர் பண்ணியது (மோகமுள்,பேசும் பொம்மைகள்) இன்னும் வரவில்லை.
also try www.newbooklands.com