புதிர் அவிழ்ந்தது!

"இக்கவிதைத் தொடர் ஆரம்பிக்கும் தினம் காதலர்களுடையதாக இருப்பது ஒரு தற்செயல். ஆனால் கவிஞர் யாரெனத் தெரிவிக்காதிருப்பது தற்செயல் அல்ல."

ஃபிப்ரவரி 14 - காதலர் தினம் - தொடங்கி கடந்த பதினைந்து நாட்களாக ஆசிரியர் பெயரே இல்லாமல் 'காதல் புராணம்' என்ற கவிதைத்தொடர் தமிழ் பேப்பர் இதழில் வெளிவ‌ந்து கொண்டிருந்தது. தொடரின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டிருந்த சிறுகுறிப்பு தான் மேலே இருப்பது. சில‌ தினங்களாகவே அவ்வப்போது தொடரை எழுதுவது யார்? என நம் மக்கள் ட்விட்டர் சந்தில் முட்டிக் கொண்டிருந்தார்கள்.15 நாள் புதிர் இப்போது அவிழ்ந்திருக்கிறது.

அதை எழுதி வந்தது யார் என்று இன்று அறிவித்திருக்கிறார்கள். மேலதிக விபரங்களுக்கு:

http://www.tamilpaper.net/?p=2830

*******

Comments

Kaarthik said…
வாழ்த்துகள். நீங்கள் அதைப் பற்றிய ட்வீட்டுகளை ரீட்வீட் செய்ததிலேயே தெரிந்துவிட்டது. அதைத் தவிர்த்திருந்தால் சஸ்பென்ஸ் இருந்திருக்கலாம் :-)
Raju said…
எலி அம்மணமாய் ஓடிய போதே, சிக்கிவிட்டது தலைவா..!
:-‍)

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

உங்க வீட்டுப் பொண்ணு

இறுதி இரவு [சிறுகதை]