பரத்தை கூற்று புத்தகம் பற்றிய கவிஞர் மதன் அவர்களின் விமர்சனம் இது: ******* http://azhagiyalkadhaigal.blogspot.com/2011/01/blog-post.html ******* Posted on January 10, 2011 at 12:38 AM by மதன் நசுக்கப்பட்ட யோனி மலர்களின் திரவப் பிசுக்கார்ந்த தரை! (பரத்தை கூற்று ஒரு பார்வை) உலகின் ஆதித் தொழில் பரத்தைமை என்ற கூற்று ஒரு புனைவோ என்ற ஐயப்பாடு அவ்வப்போது எனக்கெழுவதுண்டு என்றபோதும், அது உண்மையாக இருக்கக் கூடிய சாத்தியப்பாடுகளின் நீட்சி காரணமாக சற்று ஆற்றிக் கொள்வதுண்டு. பரத்தைமை என்ற தளத்தில் பேசத் துவங்கின், அது ஆண், பெண் என்றவிரு பாலருக்குமான உறவின் வலிமை, இருபாலரும் பரஸ்பரம் மற்றும் தத்தம் மீது கொண்டிருக்கும் மதிப்பு, கற்பு, காமம், ஆணாதிக்கம், பெண்ணியம் என்று பல்வேறுபட்ட விளிம்புகளைக் கடந்தும், விரிந்தும், சென்று கொண்டேதானிருக்கும். இந்தளவுக்கு வலிமையான தளத்தைக் கையிலெடுத்து, அதன் பொருட்டு எழுதிக் குவித்த ஐந்நூறு குறுங்கவிதைகளுள், நூற்றைம்பதைக் கூர்தீட்டி, தன் முதல் கவிதைத் தொகுப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கும் நண்பர் சரவண கார்த்திகேயனுக்கு முதலில் என் வாழ்த்துகள். 26 வயதி...