மன்மதன் அம்பு - A VERY SHORT INTRODUCTION
மன்மதன் அம்பு - மை.ம.கா.ராஜன், காதலாSquare, அ.சண்முKey, தெனாLee, 5தந்திரம் போல் கிரேஸி மோகன் flavoured full length comedy flick எதிர்பார்த்துப் போனீர்கள் என்றால், u 'll be deceived. இது ஒரு romantic melodrama. கௌதம் மேனன் பிச்சை வாங்க வேண்டும் - அவ்வளவு பீட்டர். ஆனான் எல்லாமே அழகான, அற்புதமான வசனங்கள் (ஒரு சோறு பதம் : "Honesty is a luxury and you inflated it"). கமல் நடிப்பில் புதிதாக எதுவுமே இல்லை. நேற்று "Comeback to Kamal" என ட்வீட்டியதன் காரணம் 'சாம தான பேத தண்டம்' பாடலில் வரும் கமலின் நடனம் - just loved it. 'நீல வானம்' பாடலில் Flashback காட்ட உபயோகப் படுத்தியிருக்கும் Reverse Video Play முறை அபாரம். நடிப்பில் சங்கீதா தான் excelling. அது யதார்த்தமான நடிப்பு இல்லை - சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஆனால் மிக ரம்மியமான நடிப்பு. "த்ரிஷா நன்றாக நடித்திருக்கிறார்" என்று என் ஆயுட்காலத்தில் எழுதுவேன் என ஒருபோதும் நான் கனவு கூடக் கண்டதில்லை - doing it now. மாதவன், ஊர்வசி, ரமேஷ் அரவிந்த எல்லாம் as usual. குட்டீஸ் are cute. குரூப்பாக வரும் ஆசாமி யார்? Did a fairly good job. உஷா உதூப் also attracts attention. மற்றபடி, படத்தின் இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதையும் இயக்கமும் Passing Clouds. சுருக்கமாகச் சொன்னால், Good but not great.
Comments
வசனங்கள் அற்புதம் !!!
Originality and creativity in screenplay writing is a luxury and I doubt whether kamal can afford it in his life time.
Manmadhan ambhu is blunt and it misses the mark.
History ain't what you are writin'. It is what it is. Try to write processed data rather than foolish facts..!
கடைசியாக பார்த்த பல படங்களை பார்த்த பின் தலைவழி மாத்திரையை தேடினேன் ஆனால் "மன்மதன் அன்பு" பார்த்த பின்பு அப்படி ஒரு தேவை ஏதும் இல்லை. உண்மையை சொன்னால் நான் சமிபத்தில் பார்த்த படங்களில் "மன்மதன் அன்பு" நல்ல படம்.
கண்டிப்பாக கமலை தவிர வேறுயாரும் இது போன்ற கதையில் நடித்து வெற்றி கண்பது அரிது என்பது எனது தாழ்மையான கருத்து.
ஒரு கசப்பான உண்மை: இப்போ இராமசாமி போன்ற தமிழ் கலாரசிகர்களுக்கு கமல் படம் புரிய வாய்ப்பு இல்லை. திரு. இப்போ இராமசாமி அவர்களே இப்போ உங்களுக்கு தளபதியின் காவலன் படம் வந்தாச்சு, போய் கண்டுகளியுங்கள்.
Live Sound Recording அது ஒரு தனி கதை.