பரத்தை கூற்று : அதி பிரதாபன்

பரத்தை கூற்று பற்றி பதிவர் அதி பிரதாபன் (ஏதோ.com) எழுதிய‌ BUZZகள் இங்கே:

*******

http://www.google.com/buzz/pbeski/aAeMabqQrEG/பரத-த-க-ற-ற-பரத-த

பரத்தை கூற்று

பரத்தை கூற்று புத்தகத்தின் முதன்மையில், புத்தக ஆசிரியர் எழுதிய பூர்வ பீடிகை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

மேலும் அது முடிகையில், இக்கவிதைகள் “Of the Prostitutes, By the Prostitutes, For the Prostitutes” என்ற போதிலும் இவை யாவும் யான் கண்டு கேட்டு கற்றுயிர்த்தவையின் ஞாபகச்சில்லுகளே. மற்றபடி, வேசியைப் பற்றி எழுத உனக்கென்ன தகுதி இருக்கிறது, உனக்கு எப்படி தெரியும் இதெல்லாம், நீ போயிருக்கிறாயா ஒருத்தியிடமாவது, குறந்த பட்சம் சாவித்துவாரம் வழியாகவேனும் பார்த்திருக்கிறாயா போன்ற அறிவுஜீவிக் கேள்விகளையெல்லாம் எளிமையான ஒரு புன்னைகையின் துணையோடு கடந்துபோக உத்தேசித்திருக்கிறேன் என்றிருக்கிறது. இதுவும் பிடித்திருக்கிறது.

பின்பு உள்ளே உள்ள பாக்களில் (65),
என் போலொருத்தியிடம் போகாமல்
நிச்சயம் எழுதியிருக்க முடியாது
வாத்ஸாயனன் - காமசூத்திரத்தை
என்றிருப்பதுவும் பிடித்திருக்கிறது.

*******

http://www.google.com/buzz/pbeski/TuaNAaqspME/பரத-த-க-ற-ற-வ-ழ-வ-ல

பரத்தை கூற்று விழாவில் சாரு

நேற்று பரத்தை கூற்று விழாவில் சாரு தலையில் முடி அதிகம் இல்லாமலும், வழக்கம் போல அழகிய மீசையுடனும் வந்திருந்தார். அவர் பேசியவற்றில் முக்கியமான சில கருத்துக்கள்:

1. கவிதை

நான் கவிதை எழுதுவேன் என்றாலும் கவிதைப் புத்தகம் வெளியீட்டு விழாவுக்கு வழக்கமாக கலந்து கொள்வதில்லை. இப்புத்தகத்தின் ஆசிரியர் எனது தீவிர ரசிகர், நான் வெளியிடுவதைத்தான் விரும்புகிறார் என்று சொன்னார் அகநாழிகை வாசு கவிதை என்பது சொற்களால் ஊடுருவும்படி இருக்கவேண்டும். அக்காலத்தில் எழுதியவற்றைத் தான் அவ்வாறு ஏற்றுக்கொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு பாரதி என்றார்.

மொத்தத்தில் இப்போது வருவதெல்லாம் கவிதையே இல்லை என்று விட்டார். அப்படியானால் இவற்றிற்கு வேறு பெயர் சொல்லியிருக்கலாம்.

தோ ஒரு நாட்டில் எல்லோருமே கவிஞர்கள் என்றார் (எந்த நாடு என்பது மறந்து விட்டது). தமிழ்நாட்டிலும் அனைவரும் கவிஞர்கள் தான் என்றார், திருமணத்திற்கு முன்பாம், அதன் பிறகு நேரமில்லை என்கிறார்களாம். மேலும் அக்காலக் கவிஞர்கள் சிலர் பெயரைச் சொல்லி, கவிதை எழுதுவதை நிறுத்தவில்லையென்றால் கொன்று விடுவேன் என்று சொல்லி கொன்ற அரசர்கள் பற்றி சொன்னார். அந்த அளவுக்கு கவிதையின் வீச்சு இருந்ததைப் பற்றிப் பேசினார்.

2. பிறர் கூற்றை நாம் சொல்வது சரியாக இருக்குமா?

ஒரு பரத்தையின் கூற்றாக கூறப்பட்டுள்ள இது சரியாக இருக்குமா? என்றார். என‌க்கும் இந்த சந்தேகம் உண்டு. காதல் கவிதை எழுதுவார்கள், கேட்டால் காதலிக்கவில்லை, கற்பனையில் எழுதினேன் என்பார்கள். அதேபோல தாய்மை பற்றி, வேசி பற்றி, பெண்மை பற்றி, கலவி பற்றி, கற்பு பற்றி பலர் கற்பனையில் எழுதுவது சரியான கூற்றாக இருக்குமா என்பது எனது சந்தேகம். அதன் பின் தான் எழுதிய நாவல்கள் பற்றியும் சொன்னார்.

3. விமர்சனத்தில் துதி பாடுவது

நான் எனது கருத்துக்களை நேரடியாக ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிடுவேன், எந்த விழாவாக இருந்தாலும் யாரைப் பற்றியும். சிலர் விமர்சனம் என்ற பெயரில் துதி பாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இப்போது எந்திரனை எடுத்துக் கொள்ளுங்கள். ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள். ஹாலிவுட்டுக்கு சவால் விடும் படமாம். இப்படியெல்லாம் சொன்னால் சங்கர் சந்தோசப்படுவார் என அவரைச் சுற்றி துதி பாடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிச் செய்வது சரியா? நல்லா இல்லாத பட்சத்தில் குறைகளைச் சுட்டிக் காட்டுவதால் அவருக்கு நான் நன்மைதான் செய்கிறேன். இது சரியா இல்லையா? இதற்கு முன், மகாநதி பார்த்துவிட்டு எழுதியதைப் பார்த்த கமல் என்னிடம் பேசினார், நட்பு உருவானது. பின்பு குருதிப்புனல் படத்தைப் பார்த்து எழுதினேன். மகாநதியில் ஆரம்பித்த கமலுடனான நட்பு நேரில் பார்க்காமலேயே குருதிப்புனலில் முறிந்து போனது.

4. எனது அடுத்த நாவல்
 
இப்படி வேசிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பெங்களூரில் நடந்த விழாவொன்றில் பேசியதைப் பற்றிப் பேசினார். அப்போது Male Prostitution பற்றிப் பேசினார். நான் ஒரு இரண்டு வருட காலங்கள் Male Prostitute ஆக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, அப்போது நான் அனுபத்தவைகளே என்னுடைய அடுத்த நாவல், டிசம்பரில் வெளியாகிறது என்றார். எனவே அடுத்து வரும் அவரது நாவல் ஆண் விபச்சாரி பற்றி இருக்கலாம்.

5. கவிப்பேரரசு
 
இங்கு புத்தகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து என்று இருக்கிறது. எனக்கு அடைமொழியெ பிடிக்காது. ஏற்கனவே இதே இடத்தில் கலைஞர் என்ற அடைமொழியைப் பற்றி ஒரு விவாதம் எழுந்தது பேரரசு என்றால் என்ன? அரசு என்றால் என்ன? ஏற்கனவே இங்கே ஒரு அரசர் இருக்கிறார், மதுரையில் ஒரு அரசர் இருக்கிறார். இப்படி நாம் அடைமொழிகள் கொடுத்து நம்மையே அடிமைகளாகக் காட்டிக்கொள்கிறோம். இந்தியாவில் மக்களாட்சி என்ற பெயரில் அரசாட்சி நடப்பது போலத்தான் இருக்கிறது. இந்தியாவில்தான் அடிமைகள் அதிகம்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி