பரத்தை கூற்று : ஜாக்கி சேகர்

பரத்தை கூற்று புத்தக வெளியீட்டு நிகழ்வு பற்றி ஜாக்கி சேகர் அவர்களின் பதிவு:

*******

http://jackiesekar.blogspot.com/2010/10/1817102010.html

*******

Sunday, October 17, 2010 Posted by ஜாக்கி சேகர் at 8:34 AM

மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/17•10•2010)

ஆல்பம்

நேற்று அகநாழிகை பதிப்பகத்தின் சென்னையில் பரத்தை கூற்று கவிதை புத்தக வெளியிட்டு விழா, கே கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் நடந்தது... நல்ல கூட்டம்.நான் ஆயுதங்களை எல்லாம் கழுவி பொட்டு வைத்து, படையல் போட்டு கிளம்பி செல்ல நேரமாகிவிட்டது... எழுத்தாளர் சாரு பேசிக்கொண்டு இருந்தார்...அந்த சிறிய ஹாலில் 1000 வாட்ஸ் லைட் போட்டு ஒரு வீடியோகிராபர் நிகழ்வை டேப்பில் திண்னகொடுத்துக்கொண்டு இருந்தார்... அதனால் அத்தனை பேரின் கபாலங்களிலும் வியர்வை வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது...சாரு அந்த கவிதை புத்தகத்தில் இருக்கும் ஒரு கவிதையை வாசித்தார்...

“விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனசு தொட்டதில்லை” ...

அதன் பின் அதே புத்தக தொகுப்பில் ஒரு கவிதையை வாசிக்கும் போது சின்ன பசங்க காதை பொத்திக்கொள்ள சொன்னார்...பிளவு வெடிப்பு என்று போனது சரியாய் நினைவில்லை.. ஆனால் நண்பர் புத்தகம் வாங்கிய போது அதனை வாசித்து பார்த்தேன்...
==========
“களைத்துறங்குமென்னை
எழுப்பிப் புணர விழையும்
நீயென்ன ஆம்பிளை?”

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.....
========
“எந்த ஆண்மகனும் இதுவரை
நேருக்கு நேர் சந்தித்ததில்லை
என் கண்களின் அலட்சியத்தை”
==========
சாரு பல கவிதைகள் விசில் அடிக்கும் ரகம் என்றார்... கவிஞர் சரவணகார்த்திகேயன் நன்றியுரை வழங்கும் போது பிரின்ட் செய்யபட்ட புத்தகத்தை வைத்த நன்றியுரை வாசித்தது எனக்கு நிறைவை தரவில்லை... விழா முடிந்து.. கவிஞர் சரவண கார்த்திகேயன் என்னிடம் வந்து ஜாக்கி நலமா?என்றார்.. எனக்கு அவரை தெரியாது? என்னை அவருக்கு தெரிந்து இருக்கின்றது... இது போலான நேரத்தில் எனக்கு எப்படி ரியாக்ஷன் தருவது என்றே தெரியவில்லை...நான் கை கொடுத்து சிரித்து வைத்தேன்...
எனக்கு தெரியாத பலரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த தமிழ் பதிவுலகத்துக்கு என் நன்றிகள்... விழாவில் மிஸ் ஆனவர்கள்.. அண்ணன் உண்மைதமிழன் மற்றும் பட்டர்பிளை சூர்யா?? சூர்யா என்ன உடம்பு சரியாகிவிட்டதா??? கார்க்கி, அப்துல்லா சான் வருவதற்குள் வந்து சென்று விட்டதாக சொன்னார்கள்..
===========
நேற்றைய புத்தக வெளியீட்டு விழா ஒரு மினி பதிவர் சந்திப்பு போல் இருந்தது. மணிஜி,நர்சிம்,லக்கி அதிஷா,கேபிள்,பெஸ்கி,சாம்ராஜ பிரியன், ராஜகோபால் , உழவன், சங்கர்,விஜயமகேந்திரின் என இன்னும் பலர் வந்து இருந்தார்கள்... என்னை லோக்கல் என்று கலாய்த்துக்குகொண்டு இருந்தார்கள்...அகநாழிகை வாசு தனது காரில் வக்கில் சின்னத்தை பொறித்துவிட்டார்...
=====

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி