பரத்தை கூற்று : சில போஸ்டர்கள்

பரத்தை கூற்று புத்தக வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழை சில நட்புப் பதிவர்கள் தம் வலைப்பதிவுகளில் போஸ்டர் அடித்திருந்தனர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

இட்லிவடை - http://idlyvadai.blogspot.com/2010/10/blog-post_14.html
விஜய் மகேந்திரன் - http://vijaymahendran.blogspot.com/2010/10/blog-post_13.html
யுவகிருஷ்ணா - http://www.luckylookonline.com/2010/10/blog-post_14.html
வல்லமை.காம் - http://www.vallamai.com/?p=1093
வல்லமை வலைப்பூ - http://vallamaii.blogspot.com/2010/10/blog-post_13.html

இதில் இட்லிவடையில் மட்டும் என் வேண்டுகோளுக்கிண‌ங்க பதிவிடப்பட்டது.

*******

யுவகிருஷ்ணா தன் பங்குக்கு ஒரு சுனாமி அழைப்பையும் விடுத்திருந்தார்:

எழுதியவர் யுவகிருஷ்ணா at Thursday, October 14, 2010

பரத்தை கூற்று - அனைவரும் வருக!

நண்பரும், படைப்பாளியுமான எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் இப்போது கவிஞராகவும் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறார். அவரது இரண்டாவது நூல்/முதலாவது கவிதைத் தொகுப்பு 'பரத்தை கூற்று' எதிர்வரும் சனிக்கிழமை (16.10.2010) அன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படுகிறது.

இடம் :
டிஸ்கவரி புக்பேலஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர், சென்னை-78.

வரவேற்புரை :
அகநாழிகை பொன்.வாசுதேவன்

புத்தகம் வெளியிட்டு சிறப்புரை :
எழுத்து எந்திரன் சாருநிவேதிதா

நன்றியுரை :
எழுத்தாளர்/கவிஞர் சி.சரவணகார்த்திகேயன்

காமம் தொடர்பான புத்தகம் என்பதால் சாருவின் பேச்சு காமச்சுனாமியாய் தாக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. எனவே உத்தம தமிழ் எழுத்தாளரின் ரசிகர்களும் முக்காடு போட்டுக்கொண்டாவது வந்து கூட்டத்தை ரசிக்கலாம். மாலை 4.50 மணியளவில் 'இலக்கிய ரோபோ சாருநிவேதிதா அகில உலக ரசிகர்மன்றம்' சார்பாக அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகமும் நடைபெறும்.

அனைவரும் வருக!

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி