வேசியின் கவிதைகள்
பரத்தை கூற்று - இது எழுதப்பட்டது 2006ம் ஆண்டின் தொடக்கத்தில். அப்போது பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன்; கவிஞர் மகுடேசுவரனின் 'காமக்கடும்புனல்' படித்த போதையில் ஆழ்ந்திருந்தேன் (இப்போதும் அதிலிருந்து முழுமையாய்த் தெளிந்தேனில்லை). அதே போன்றதொரு தொகுப்பை எழுதி விட வேண்டும் என்று கையும், மனமும் பரபரத்துக் கிடந்த / கடந்த நாட்கள் அவை.
கிட்டதட்ட அதே காலகட்டத்தில் நண்பர்களுக்கு நேர்ந்த சில சம்பவங்களை பார்த்ததும் கேட்டதுமான பாதிப்பில் எழுதியது 'வேசியின் கவிதைகள்' என்ற 500 சிறுகவிதைகள் கொண்ட பெருந்தொகுப்பு. அது தான் இப்போது 'பரத்தை கூற்று' என்ற பெயரில் புத்தகமாகியிருக்கிறது. அதிலிருந்து குறைத்து, திருத்தி, தேர்ந்த 150 கவிதைகள் மட்டும் இதிலிருக்கின்றன. ஆடையோ கவிதையோ குறைக்கக் குறைக்கத் தானே அழகு!
'வேசியின் கவிதைகள்' அல்லது 'பரத்தை கூற்று' என்று தலைப்பே சொல்வது போல் ஒரு விபச்சாரி அல்லது பல விபச்சாரிகள் தங்கள் பலதரப்பட்ட மனநிலைகள் மற்றும் சூழ்நிலைகளிலிருந்து சொல்வதாய் எழுதப்பட்ட கவிதைகளே இவையனைத்தும். இதன் நியாயம் மற்றும் தேவை போன்றவற்றை புத்தக முன்னுரையில் விரிவாகவே விவாதித்திருக்கிறேன். தேவைப்படின் நமது வலைதளத்திலும் பேசவிருக்கிறேன்.
இது குறித்துச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது - இப்போதைக்கு இது மட்டும்.
*******
புத்தகம் வாங்க தற்போதைக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன:
1. மதுரை புத்தகக் காட்சியில் உயிர்மை பதிப்பக அரங்கில் நேரடியாக வாங்குவது
2. பொன்.வாசுதேவனின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி தபாலில் வாங்குவது
கூடிய விரைவில் மேலும் இரு வழிகளை ஏற்பாடு செய்வார்கள்:
1. தி.நகர் நியூ புக்லேண்ட்ஸ் போன்ற கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும்
2. உடுமலை.காம் போன்ற வலைதளங்களில் ஆன்லைனிலேயே வாங்கலாம்

Comments
வாங்கிப் படித்துவிட்டு வருகிறேன்.
http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html