படித்தது / பிடித்தது - 89

வாசம்

பருவத்தில் தோன்றி உதிர்ந்த மலர்களை
ஆழத் தோண்டி ஆங்கே புதைத்து வைத்தேன்;
நெடுங்காலம் சென்றபின் அன்றொரு நாள் ந‌டுநிசியில்
யாரும் காணாமல் அக‌ழ்ந்தெடுத்து நுக‌ர்ந்தேன்
ம‌ண்ணுக்குள்ளே க‌னியாகி ம‌துவாகிக் கிட‌ந்த‌து;
ஒரு போதும் அருந்திடவே இய‌லாதென்றாலும்
மூடுவதிலும் திற‌ப்பதிலுமே போதையேறிப் போகிற‌து.

- தீபா

நன்றி: சிதறல்கள்

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி