படித்தது / பிடித்தது - 88

சாத்தானிடமிருந்து கடவுளுக்கு

கால் இடறி விழாமல்
குருட்டுப் பிச்சைக்காரனைத்
தொட்டு நிறுத்துபவர்
பைத்தியக்காரியின் கர்ப்பத்துக்குப்
பொறுப்பேற்றுக்கொள்பவர்
சைகைகளில் காதலித்த பெண்ணை
‘தங்கை’யென்று சொல்லாதவர்
சாலையோர மரணங்களைச்
சகியாதவர்
சிறுமிகளை மகளாகவும்
நடத்தத் தெரிந்தவர்
சடலத்தின் முன்
குழந்தைக்கான வைத்தியப் பணத்தில்
குடித்துவிட்டதாக ஒப்புக்கொள்பவர்
ஒரு நொடி பயணிக்கிறார்
சாத்தானிடமிருந்து கடவுளுக்கு

- சே. பிருந்தா

நன்றி: காலச்சுவடு, செப்டெம்பர் 2010 இதழ்

Comments

Anonymous said…
add subscribe via email gadget for your blog so that readers will receive your new posts in their email inbox

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html
Anonymous said…
add subscribe via email gadget for your blog so that readers will receive your new posts in their email inbox

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html
வலைஞன் said…
கவிதையில் பிழை உள்ளது:
முதல் பகுதி இப்படி இருக்கவேண்டும்:

கால் இடறி விழாமல்
குருட்டுப் பிச்சைக்காரனைத்
தொட்டு நிறுத்துபவர்
பைத்தியக்காரியின் கர்ப்பத்துக்குப்
பொறுப்பேற்றுக்கொள்பவர்
சைகைகளில் காதலித்த பெண்ணை
‘தங்கை’யென்று சொல்லாதவர்
சாலையோர மரணங்களைச்
சகியாதவர்
சிறுமிகளை மகளாகவும்
நடத்தத் தெரிந்தவர்
ஒரு நொடி பயணிக்கிறார்
மனிதனிலிருந்து கடவுளுக்கு

இரண்டாம் பகுதி:
சடலத்தின் முன்
குழந்தைக்கான வைத்தியப் பணத்தில்
குடித்துவிட்டதாக ஒப்புக்கொள்பவர்
ஒரு நொடி பயணிக்கிறார்
சாத்தானிடமிருந்து கடவுளுக்கு

என்ன சரியா?
@வலைஞன்
அது perception பொறுத்த‌து..
Anonymous said…
'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி