சகா : சில குறிப்புகள் - 13
தீபிகா படுகோன் தோன்றும் சோனி டிஜிட்டல் கேமெரா விளம்பரம் பார்த்து விட்டு சகா சொன்னது - "கைகளில் CyberShot-ஐயும் கண்களில் SniperShot-ஐயும் வைத்திருக்கிறாள்!".
*******
Yet another தீபிகா tit-bit.
தன்னைப் போலவே இருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பெண்ணை டேட் செய்த ஆசாமியை தனது மறக்க முடியாத ரசிகர் என்று மே 19, 2010 தேதியிட்ட ஃபெமினா இதழில் தீபிகா படுகோன் சொல்லியிருந்ததைக் குறிப்பிட்டு, "என் கதை அப்படியே உல்டா. நான் டேட் செய்து கொண்டிருக்க்கும் பெண்ணைப் போலவே இருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காகவே தீபிகாவிற்கு ரசிகனாக இருக்கிறேன்" என்றான் சகா. Corollary!
எனக்கென்னவோ தீபிகா குறிப்பிட்ட ஆளே சகா தானோ என்றொரு சந்தேகமிருக்கிறது.
*******
கேம்பஸ் இண்டர்வ்யூக்கள் களை கட்டிக் கொண்டிருந்த எஞ்சினியரிங் இறுதியாண்டுத் தொடக்கத்தில் முக்கி முக்கி ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தின் எழுத்துத்தேர்வு தேறி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தான் சகா. இதில் HR ரவுண்டில் Stress Test என்ற பெயரில் மனதின் அழுத்தம் தாங்கும் சக்தியை சோதிப்பார்கள். பாட்டு பாடுவாயா, சைட் அடிப்பாயா, சிகரெட் பிடிப்பாயா, சிறுநீர் கழிப்பாயா என்பது மாதிரியான நிறையப் பின்நவீனத்துவ கேள்விகளை புத்திஜீவித்தனமாய் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மிக பிரசித்தி பெற்ற சாம்ப்பிள் : "உன் தாய் விபச்சாரியாமே, உண்மையா?" என்ற கேள்விக்கு "ஆம், ஆனால் என் தந்தை தான் அவரது ஒரே கஸ்டமர்" என பதில் சொல்லப்பட்டதாம்.
இது போன்ற ஸ்ட்ரெஸ் டெஸ்டில் சகாவை எதிர்கொண்ட ஒரு முற்றிய மும்பை குட்டி (சாஃப்ட்வேர் துறையில் இந்த HR வேலையில் இருக்கும் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்தவர்கள் யாரையாவது விசாரித்தால், Lux போன்ற ஏதாவது பிரபலமான நுகர்பொருளின் விளம்பரக் காணொளியினின்று நேராய் பூமிக்கு இறங்கி வந்தது மாதிரி இருப்பார்கள் என அவர்கள் சொல்லக்கூடும்) தன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டின் மேலிருந்த மாராப்பு நழுவுவதை அலட்சியம் செய்தபடிக்கு கேட்ட கேள்வி - "உன்னிடம் இரண்டு ஆணுறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஓட்டை. ஆனால் அது எது என உனக்குத் தெரியாது. இப்போது உன் கேர்ள் ஃப்ரெண்டை கர்ப்பம் தரிக்காமல் எப்படித் தடுப்பாய்?"
ஒரு கணம் யோசித்து விட்டு, "ஓர் ஆணுறைக்குள் மற்றொன்றை நுழைத்து ஒன்றாக்கிப் பயன்படுத்துவேன்" என்றிருக்கிறான். அவளோ விடாமல், "சரி, இரண்டில் எது ஓட்டை என்று எப்படிக் கண்டுபிடிப்பாய்?" எனக் கேட்க, சகா இம்முறை சற்றும் யோசிக்காமல் "இரண்டுக்கும் நடுவே கொஞ்சம் மிளகாய்ப்பொடியை வைத்து விடுவேன்" என்றானாம்.
இது சகா சொன்ன வெர்ஷன்.
பொய்யை உண்மை போலவும், உண்மையைப் பொய் போலவும் பேசுவதில் வல்லவன் அவன் என்பதால் இது போன்ற விஷயங்களில் எனக்கு அவன்பால் அவநம்பிக்கைகள் உண்டு. ஆனால் கல்லூரியே கொஞ்ச நாட்களுக்கு இதைப் பற்றிப் பேசிக் கொண்டது.
*******
தீராத பொய்களினாலான ஓர் ஊடலினூடானதொரு சண்டையின் முடிவில் மதுமிதா சகாவிடம் சொன்னது - "I hate love". அதற்கு சகாவின் பதில் - "But I love hatred too".

Comments