மீண்டும் விகடனில்...
ஆனந்த விகடன் 28.07.2010 தேதியிட்ட இதழின் வலைபாயுதே பகுதியில் மீண்டும் எனது ட்வீட் இடம் பெற்றுள்ளது. சில வரி கொண்ட சிறுபடைப்பு என்ற போதிலும் தொடர்ந்து வெளியாவது சந்துஷ்டி அளிக்கிறது. சைபர் ஸ்பைடர் யாராயிருந்தாலும் வந்தனம். பாரா, பேயோன், மாயோன், அடியேன் வரிசையில் பெயரில் writer என்ற prefix உடன் ட்விட்டர் களத்தில் புதிதாய்க் குதித்திருப்பவர் writerzero (பாரிஸ்). விஷயத்தை எனக்கு முதலில் தெரியப்படுத்திய அவருக்கும் என்னுடைய நன்றிகள் உரித்தாகுக.