அகநாழிகை - தொடர்ச்சி
அகநாழிகை இதழை அறிமுகம் செய்து நான் எழுதிய பதிவில் சொல்லப்பட்டிருந்த சில கருத்துக்களுக்குப் பதிலளித்து இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவன் அவர்கள் எனக்கு ஒரு நீண்ட மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதழ் குறித்து என் பார்வையில் தப்பியிருந்த அல்லது தப்பாயிருந்த சில விஷயங்கள் அதில் தெளிவாக்கப் பட்டிருந்தன. ஆனால் அது எனக்குத் தனிப்பட்ட முறையில் அவர் எழுதிய கடிதம் என்பதால் இங்கே பகிர இயல வில்லை. பிறிதொரு சமயம் அதைக் குறித்து விரிவாய்க் கதைப்போம். ******* அகநாழிகை - ஜூன் 2010 இதழின் உள்ளடக்கம்: நேர்காணல்கள் : ''நவீனத்துவம் என்பது உத்தியில் இல்லை'' - எம்.ஏ.நுஃமான் [நேர்காணல் : பஃஹிமா ஜஹான்] ''சுதந்திரம்'' - பால் ஸக்கரியா [நேர்காணல் : ஷோபா வாரியர் - தமிழில் : சி.சரவணகார்த்திகேயன் ] ''காதலின் வரைபடம்'' - அதாஃப் சோயிப் [நேர்காணல் : அமித் ஹுசைன் - தமிழில் : நதியலை] சிறுகதைகள் : பாவண்ணன் அய்யப்ப மாதவன் ரிஷான் ஷெரிப் ஐயப்பன் கிருஷ்ணன் மதியழகன் சுப்பையா கட்டுரைகள் : கலாப்ரியா ஜெயந்தி சங்கர் அஜயன்பாலா நதியலை ஆர்.அபிலாஷ் வாழ்க்கைத்தொடர் : சுபின் மேத்தா - ரா.க...