சந்திரயான் - FAQs
‘சந்திரயான்’ புத்தகம் : அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. இந்தப் புத்தகம் யாருக்கானது?
உண்மையைச் சொல்லப் போனால் எல்லோருக்குமானது - அதாவது தமிழ் வாசிக்கத் தெரிந்த எல்லாருக்குமானது. சந்திரயான் இந்திய அறிவியல் ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு மைல்கல்; ஒரு மகத்தான சாதனை. அதைப் பற்றி அறிந்து+புரிந்து கொள்வது என்பது ஓர் இந்தியப் பிரஜையாக நம் ஒவ்வொருவரின் கடமை+உரிமை.
அந்த விஞ்ஞான வெற்றியின் கதையை தமிழர்களுக்கு, குறிப்பாய் இளைய சமுதாயத்தினருக்கு எளிய மொழிநடையில் முழுமையாக சுவாரசியமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு முனைந்து எழுதப்பட்டதே இந்நூல். இந்நூலைப் படித்து ஒரு மாணவனேனும் மாணவியேனும் விண்வெளி ஆராய்ச்சியில் தன் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் அதுவே இதன் வெற்றி.
மற்றபடி, எந்த வயதினரும், எந்தப் பாலினரும், எந்தப் பணியினரும் வாசிப்பு சுவாரசியம் அல்லது பொது அறிவு என்கிற இரண்டுள் ஏதாவதைக் காரணம் வைத்து இந்நூலைத் தாரளமாக வாங்கிப் படிக்கலாம். அவற்றிற்கு நான் உத்திரவாதம்.
2. இது சந்திரயான் பற்றிய முதல் புத்தகமா?
நேர்மையாக பதிலிறுக்க வேண்டுமெனில், இல்லை.
ஆனால் இந்தப் புத்தகம் எழுத ஆரம்பித்த போது சந்திரயான் திட்டத்துக்கென எந்த நட்சத்திர அந்தஸ்தும் கிடையாது. அதாவது சந்திரயான் நிலவில் நீர் இருக்கும் சங்கதியைக் கண்டுபிடித்ததெல்லாம் அப்போது நிகழ்ந்திருக்கவேயில்லை. அதனால் அப்போது சந்திரயான் பற்றி தமிழில் எந்தப் புத்தகமும் இல்லை.
இன்னமும் சொல்லப்போனால் அப்போது ஆங்கிலத்தில் கூட முழுமையாக எந்தப் புத்தகமும் இல்லை (நரேந்திர பண்டாரி என்கிற இஸ்ரோ விஞ்ஞானி எழுதிய ‘The Mysterious Moon & India’s Chandrayaan Mission’ என்ற புத்தகத்தின் இறுதி அத்தியாயம் சந்திரயானின் திட்ட வரைவைப் பற்றிப் பேசுவதை விடுத்துப் பார்த்தால்).
கிட்டதட்ட நான் எழுத ஆரம்பித்த சமயத்தில் பல்லவா பாக்லா மற்றும் சுபத்ரா மேனன் என்ற இரு பத்திரிக்கையாளர்கள் எழுதிய ‘Destination Moon’ என்ற புத்தகம் வெளியானது. பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிருபர் ஸ்ரீநிவாஸ் லக்ஷ்மண் (இவர் புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லக்ஷ்மணின் மகன்) எழுதிய ‘Moonshot India: Chandrayaan-1, The Mission Complete’ என்ற புத்தகம் வெளியானது. இது பொதுவாய் குழந்தைகளுக்கான புத்தகம் என அடையாளப்படுத்தப்பட்டது.
என்.ராமதுரையின் சந்திரயான் பற்றிய குழந்தைகளுக்கான அறிமுகப்புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் வேறொரு இம்ப்ரிண்ட்டான Prodigyயில் சரியாய் என் புத்தகம் வெளியாகும் இரு வாரம் முன்பு வெளியானது. அதே போல் ஆழி பதிப்பகத்திலிருந்தும் பார்த்திபன் என்பவர் எழுதிய சந்திரயான் என்ற ஒரு சிறிய நூல் வெளியாகியிருக்கிறது.
ஆக, என்னுடையது பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் முதல் புத்தகம் அல்ல; ஆனால் எல்லாத் தகவல்களையும் உள்ளடக்கிய ஒரே முழுமையான புத்தகம்.
3. இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?
சென்னையில் கிழக்கு பதிப்பகத்தின் ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலை ஷோரூமில் கிடைக்கும். இதைத் தவிர வேலூர், திருச்சி, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருக்கும் கிழக்கு ஷோரூம்களிம் கிடைக்கும் என்கிறார் என் பப்ளிஷர். வாங்கச் செல்வதாயிருந்தால், முன்பே அந்த குறிப்பிட்ட ஷோரூமிற்குத் தொலைபேசி புத்தகத்தின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்து கொண்டு செல்வது உத்தமம்.
சென்னை ஷோரூம்:
கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 600 018.
044 - 4200 9601, 95000 45642.
வேலூர் ஷோரூம்:
சரவணா புக் பேலஸ்
17/41, ரெட்டியப்பா முதலி தெரு,
ரங்கா கல்யாணமண்டபம் எதிரில்,
கொசப்பேட்டை,
வேலூர் - 632 001.
0416 - 2221130, 98430 66830.
திருச்சி ஷோரூம்:
நியூ திருச்சி புக் ஹவுஸ்
75/லு/1, ´பானா காம்ப்ளக்ஸ்,
சாலை ரோடு,
தில்லை நகர்,
திருச்சி - 620 018.
0431 - 2764198, 94432 38419.
மதுரை ஷோரூம்:
சுபஜெய் புத்தக நிலையம்
85 ஸி, வடக்கு வாசல்,
எஸ். எஸ். காலனி,
மதுரை - 625 010.
போன்: 99943 75439.
ஈரோடு ஷோரூம்:
ஸ்ரீ பாலாஜி புக் பேலஸ்
331/419, ஈ.வி.என். ரோடு,
எ.கே.எம். ஆஸ்பத்திரி அருகில்,
சூரம்பட்டி நாலு ரோடு,
ஈரோடு - 638 004.
போன்: 95666 09616.
திருநெல்வேலி ஷோரூம்:
கோல்டன் புக் ஹவுஸ்
68/1, சிவன் தெற்குரத வீதி,
தெற்கு பஜார்,
பாளையங்கேட்டை,
திருநெல்வேலி - 627 002.
போன்: 98431 11385.
நியூபுக்லேண்ட்ஸ், லேண்ட்மார்க், ஹிக்கின்பாத்தம்ஸ் முதலிய பிற கடைகளிலும் விரைவில் கிடைக்கத் தொடங்கும். அது பற்றிய தகவல் தெரியும் போது தெரியப்படுத்துகிறேன். இது தவிர, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட, நெட் பேங்க்கிங் இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி, இணையதளத்தின் மூலமாகவும் புத்தகத்தை வாங்கலாம். உங்கள் முகவரிக்கே அழகாய் பேக் செய்து அனுப்பி விடுவார்கள். இந்தியாவுக்குள் ரெஜிஸ்டர்ட் போஸ்ட்டில் வாங்கினால் தபால் செலவு இலவசம். கொரியர் என்றால் இடம் பொறுத்து கூடுதலாய்க் கொஞ்சம் பணம் வாங்குகிறார்கள்.
ஆன்லைனில் வாங்க :
- கிழக்கு பதிப்பகம் - http://nhm.in/shop/978-81-8493-382-6.html
- உடுமலை.காம் - http://udumalai.com/?prd=சந்திரயான்&page=products&id=6764
வேறு ஏதேனும் கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
*******
இடுகை இட்ட பின்பு மே 24, 2010 அன்று இரவு பத்து மணிக்கு சேர்க்கப்பட்டது:
சென்னையில் கிழக்கு பதிப்பகத்தின் மற்றுமொரு ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் ஷாப்பிங் சுவர்க்கபுரியான தியாகராய நகரில். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில், ரத்னா பவன் எதிரில்.
சென்னை ஷோரூம் - 2:
3B, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ் (தரைத்தளம்),
57, தெற்கு உஸ்மான் சாலை,
தி.நகர்,
சென்னை - 600 017.
தொலைபேசி: 044-42868126
மொபைல்: 95000-45640
தொடர்புடைய பத்ரியின் இடுகை இங்கே.
Comments
என் நண்பர்:எதை பத்தி சொல்றிங்க?
நான்: அட நம்ம WriterCSK எழுதுன புத்தகத்தை தான் சொல்றேன்.
என் நண்பர்: ஓ!! அதை இப்ப தான் படிச்சிங்களா?
நான்: ஆமா? ஏன் நீங்க ஏற்கனவே படிச்சிட்டிங்களோ?
என் நண்பர்:ஆமா ஆமா..... அதை ஏன் கேக்கற........
நான்:ஏன் இப்படி சலிச்சுக்கிரிங்க? அந்த புத்தகத்துக்கு என்ன குறைச்சல்??!!!
என் நண்பர்:எதுவும் குறைச்சல் கிடையாது, ஆனா எல்லாமே கொஞ்சம் அதிகம் தான்.
நான்:சும்மா சொல்லாதிங்க, எங்க கிடைக்கும் இந்த மாதிரி, எல்லா விஷயங்களுடன்??
என் நண்பர்:அட நீங்க சொல்றதும் சரிதாங்க, ஆனா எல்லாரோடைய ரசனையும் ஒரே மாதிரி இருக்காது.
நானும் அந்த புக் மார்க்கெட்டுல வந்த முதல் நாளே வாங்கி படிக்கணும்னு போனேன்.
அன்னைக்கு நைட் சென்னைல இருந்து பெங்களூர் வர போக வேண்டிய அவசர வேலை, சரி
ஆறு மணி நேர பயணத்துக்கு இது ரொம்ப உகந்ததா இருக்கும்னு இந்த புக்க வாங்கிட்டேன்.
நான்: சரி
என் நண்பர்: அப்புறம் என்ன கோயம்பேடு போய் நல்லா ஒரு பஸ்ஸ புடிச்சு பஸ்சும் ஏறியாச்சு. அப்ப எடுத்தேன் இந்த புக்க படிக்கலாம்னு,
எவ்வளவு விஷயங்கள், புது புது வடிவங்கள். அட அட படிக்க படிக்க, ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே நாலு அஞ்சு புக்கு வாங்கியிருந்தா
நம்ம நண்பருக்கெல்லாம் கூட அன்பளிப்பா கொடுத்திருக்கலாமேனு யோசிச்சேன்.
நான்: சரி அப்புறம் என்ன குறை கண்டிங்க??
என் நண்பர்:ஒரு இடத்தில், கிட்டத்தட்ட ஆசிரியரே தன் கருத்தை சொல்வது போல் ஒரு வரி:
"சந்திரயான் மொத்தமாக அனுப்பியிருக்கும் படங்களின் அளவு ஏழு டெராபைட்! சாதாரணமாக ஐஸ்வர்யா ராயின் ஓவ்வொரு அங்கத்தையும் துல்லியமாக
தெரிவிக்கும் ஓர் ஆளுயரக் கவர்ச்சிப்படம் 1 மெகாபைட் இருக்கும். டெராபைட் என்பது அது மாதிரி எழுபது லட்சம் புகைப்படங்களின் அளவு!."
நான்:என்னங்க இதுக்கெல்லாம் போய்ட்டு,
என் நண்பர்:அட நீங்க வேற, நான் அத கொண்டு போய்ட்டு என்னோட பசங்களுக்கு கொடுத்து இத படிங்கட,
இந்த ஸாரு சந்திரயான் பத்தி ரொம்ப அருமையா எழுதியிருக்காரு நல்லா படிச்சு தெரிஞ்சிகோங்கடான்னு,
ஆனா அதைப்படித்தவுடன் அசிங்கத்தை மிதித்தாற் போல் புத்தகத்தை பேருந்தின் ஜன்னல்வழி தூக்கிக் கடாசிவிட்டு காறி உமிழ்ந்தேன்.
இதையே என் பசங்க கிட்டையோ இல்லை அலுவலகத்துல வேலை பார்க்கிற ஒரு லேடிக்கோ இல்ல பின்ன யாருக்கவுது கொடுத்தா காறி காறி
துப்புவாங்க!! எந்த புத்திஜீவி போய் இந்த புக்க கொடுத்தான்னு கேவலபடுதுவாங்க. இல்லைனா இந்த புக்க போய் எந்த
பன்னாடை கொடுத்தான்னு அசிங்கபடுதுவாங்க.
நான்:அட இதெல்லாம் ஒரு பெரிய விசயமா??
என் நண்பர்:அட போங்க சார், உதாரணத்துக்கு இப்ப என்னோட பையன் வந்து இப்படி கேக்கறான், "ஏன்பா இதுல ஓவ்வொரு அங்கம்னா என்னபா? கவர்ச்சி படம்னா என்னப்பா?
நான்:!!!!!!!!!!!!!!!
என் நண்பர்:என்னங்க பதிலே இல்லை?? எவ்வளவு உதாரணம் இருக்கு, இந்தியாவின் பெருமையா விவரிக்க ஐஸ்வர்யா ராயின் அங்கத்தை விட வேற எதுவுமே இல்லையா?
முட்டாபைய, எல்லாம் அவன் எழுதுற சகா : சில குறிப்புகளோட வேலை தான், நாம யாரும் மண்ணை கொட்ட வேண்டாம் எல்லாம் அவனே கொட்டிப்பான்.
நான்:அட விடுங்க சார் பைய இப்ப தான் எழுதவே ஆரமிச்சியிருக்கான், போக போக பழகிடுவான் சார்.
என் நண்பர்:கிழிச்சான்,ஏதோ ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்
விவேக் ஒரு வசனம் சொல்லுவார். அப்போது சிரித்தேன்; இப்போது சிந்திக்கிறேன்.
"தெளசண்ட் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது."
அவனுக்கு தெளசண்ட் இல்லை டூ தெளசண்ட் பெரியார் வந்தாலும் என் மயிரின் அளவு கூட திருத்தவே முடியாது.
நான்: பொறுத்திருந்து பாப்போம் சார்.
என் நண்பர்: அதற்கு மேல் நம்மால ஒண்ணும் பண்ணமுடியாது.
நான்: நீங்க அவரை இவ்வளவு திட்டுறிங்க, அப்புறம் ஏன் அவரோட புத்தகத்தை எல்லாம் வாங்கி படிக்கிறிங்க?
என் நண்பர்: நானும் WriterCSK மாதிரி தான், தனக்கு பிடிக்காததை பற்றி எழுதி தீர்த்துக்கொள்வதுதான் பிடிக்கும். அதே போல் தான், அவருடைய புத்தகம் வாங்கி படிக்க முற்பட்டதும், முதலில் விருப்பமுடனே வாங்கி படித்தேன், சந்திராயன் II என ஒன்று வெளியிட்டால், அதையும் விருப்பமுடனேயே வாங்கி படிப்பேன். வாங்கி படிப்பதிலும் தவறொன்றுமில்லை, அதை வாங்கி படித்த பின் தவறேதும் இருந்தால் அதை சொல்வதிலும்(விமர்சிப்பதிலும்) தவறொன்றுமில்லை......என்ன புரியிதுங்களா,
நான்: ஆகா மொத்ததுல என்ன சொல்ல வரிங்க?
என் நண்பர்: FAQ -ல நான் சில கேள்வி கேக்கணும், அதை நான் இப்பவே உங்க கிட்ட சொல்லிடறேன்,
நான்: இத இத இத தான் நான் எதிர் பார்த்தேன், சொல்லுங்க, மன்னிக்கணும் கேளுங்க, என்ன கேள்வி(கள்) அது,
என் நண்பர்:
கேள்வி 1 : இந்த புத்தகம் எளிய மொழிநடையில் முழுமையாக சுவாரசியமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு முனைந்து எழுதப்பட்டதற்கு நூலின் ஏதேனும் பகுதியை மேற்கோள் காட்ட இயலுமா?
கேள்வி 2 : எல்லாத் தகவல்களையும் உள்ளடக்கிய ஒரே முழுமையான புத்தகம், இது சற்று நெருடலாக உள்ளது, உங்களுக்கு நெருடலாக இல்லையா?
கேள்வி 3 : சந்திரயான் இந்திய அறிவியல் ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு மைல்கல்; ஒரு மகத்தான சாதனை என ஏற்றுக்கொள்ளும் நீங்கள், பக்கம் 123ல் உங்களின் சொல்லை தவற விட்டதற்க்கான காரணம்?
அவ்வளவுதாங்க என்னோட சிறு சிறு கேள்விகள், எனக்கு ஒருவார்த்தை பதிலே போதும் இல்லை இல்லை பதிலே தேவையில்லை என நினைத்தால் கூட எனக்கு ஒன்றும் இல்லை. இருந்ந்தாலும் நமக்கு சொல்ல வேண்டும் என்பது ஒரு கடமை, அதற்கு தான் இப்படி, சரிங்க இப்பவே ரொம்ப நேரம் பேசிட்டோம், நான் கிளம்புகிறேன், மீண்டும் பார்க்கலாம்...
நான்: ஆமாம், ரொம்ப நேரம் ஆயிடிச்சு, மீண்டும் சந்திக்கலாம்.............
"அந்த விஞ்ஞான வெற்றியின் கதையை தமிழர்களுக்கு, குறிப்பாய் இளைய சமுதாயத்தினருக்கு எளிய மொழிநடையில் முழுமையாக சுவாரசியமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு முனைந்து எழுதப்பட்டதே இந்நூல்"
இது புத்தகத்தின் ஒரு பகுதியில் முழுமையாக மறக்கப்பட்டிருந்தது. அது மன்னிக்க முடியாதது, மேலும் சில பகுதிகள் மறக்கப்பட்டிருந்தாலும், அவை மன்னிக்கப்படலாம்.
அது என்னவென்று நான் உங்களுக்கு போன முறையே சொல்லிவிட்டேன்.
நான்: புரியுது, சரி வேற என்ன?
என் நண்பர்: அடுத்து ரொம்ப சுவாரசியமானது,
"மற்றபடி, எந்த வயதினரும், எந்தப் பாலினரும், எந்தப் பணியினரும் வாசிப்பு சுவாரசியம் அல்லது பொது அறிவு என்கிற இரண்டுள் ஏதாவதைக் காரணம் வைத்து இந்நூலைத் தாரளமாக வாங்கிப் படிக்கலாம். அவற்றிற்கு நான் உத்திரவாதம்."
இது ரொம்ப ஓவரா இருந்துச்சு, அடுத்தவருக்கு உத்திரவாதம் அளிக்கும் முன், தன்னிடம் உள்ள பொருள் எவ்வளவிற்கு தரமானது என்று அறிந்திருத்தல் அவசியம். அது இங்கே மிஸ்ஸிங்.
நான்: ம்ம்ம், அதெப்படிங்க ஒரே விசயத்த வெச்சிக்கிட்டு ஒட்டு மொத்த புக்கே ஒரு வேஸ்டுன, உங்க லாஜிக்கே சகிக்கல,
என் நண்பர்: நான் முன்னாடியே சொன்னது தான், ஒரு புக் தான் வாங்கநோமேன்னு வருத்தபட்டவன் நான், சுருக்கமா சொல்லனும்னா, ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்.
நான்: !!!!!!!!
என் நண்பர்: ம்ம் பார்த்தேன் பார்த்தேன், அதுக்கு என்ன இப்போ?
நான்: ஒன்றும் இல்லை, நீங்க அதா பார்த்த உடனே எதுனா பதில் வருமோன்னு யோசிச்சேன்,
என் நண்பர்: அப்படி என்ன வேணும் உங்களுக்கு?
நான்: அதான் போன தடவை சொல்லிக்கிட்டு இருந்திங்களே, அதுக்கு எதுன்ன பதில் மாதிரி எழுதி இருக்காரான்னு?
என் நண்பர்: (சிரித்துக்கொண்டே) நல்லா தெளிவாவே எழுதியிருக்காரு, ஆனா இன்னும் கொஞ்சம் நேர்மையாக எழுதியிருக்கலாம்....
நான்: எனக்கு தெரியும், எப்படியும் உங்களுக்குள்ளே ஒரு வருத்தம்(கோபம்) இருக்கும்னு, சொல்லுங்க சொல்லுங்க என்ன அந்த நேர்மையின்மை?
என் நண்பர்: அடுத்தவன் பத்தி கதை கேக்கறதுன்ன உங்களுக்கு எப்பவுமே ஒரு தனி சுகம் தான், இல்லை?
நான்: அட இப்போ அது ரொம்ப முக்கியமா? விஷயத்துக்கு வருவிங்களா.......