பேயோனின் நுண்பதிவுகள்
பேயோன் என்பவர் ட்விட்டர் வாயிலாக எனக்கு அறிமுகம். சும்மா மற்றவர்கள் போல் சாப்பிட்டேன், தூங்கினேன், வாயு பிரித்தேன் என்பதாக இல்லாமல் நிஜமாகவே சுவாரசியமானவை இவரது ட்வீட்டுரைகள். இணையதளத்திலும் அவ்வப்போது எழுதி வருகிறார். சில முக்கியமானவை. குறிப்பாய், சமீபத்தில் இவர் எழுதியிருக்கும் "அடுத்த வாரத் தொடர்ச்சி" என்கிற குறுங்கதை வசீகரமானதொரு முயற்சி.
ஜெயமோகன் ஒரு முறை இவரை அறிமுகப்படுத்தி பதிவெழுதப் போய், அவர் தான் பேயோனோ என சந்தேகப்பட ஆரம்பித்து விட்டனர். எப்படியோ, தற்போது அவரது ஆயிரம் ட்வீட்களின் தொகுப்பு புத்தகமாக ஆழி பதிப்பக வெளியீடாக வருகிறது. ட்வீட் என்பதை நுண்பதிவு, துண்டிலக்கியப்பிரதி எனப் பலவாறாக அழைக்கிறார். இதன் மென்புத்தக வடிவம் இணையத்திலேயே அவரது தளத்திலேயே கிடைக்கிறது.
மேலிருக்கும் புத்தகத்தின் அட்டைப்படத்தை அதன் அங்கதத்தைக் கவனியுங்கள். எனக்கு கழிவறையில் அமர்ந்து சுடோகு புதிரவிழ்க்கும் என் சினேகிதன் ஞாபகம் வருகிறது.

Comments