சுறாவும் சில சூ..க்களும்

"கதை கேட்கும் போது விஜய் மூளையை எங்கே சூ..க்குள் சுருட்டியா வைத்திருந்தார்?"

விஜய்யின் ஐம்பதாவது படமான சுறாவுக்கு வலையில் படிக்கக் கிடைத்த (எதிர்மறை) விமர்சனம் ஒன்றில்‌ வரும் வரி இது. படத்தின் கதை அசட்டுத்தனமானது அல்லது அரதப்பழசு என்பது தான் இது சொல்ல வரும் ஆதார செய்தி. கடந்த பத்து வருடங்களில் விஜய் நடித்த படங்களில் தொன்னூறு சதவிகிதம் ஜனரஞ்சகம் என்று சொல்லப்படும் வணிக சினிமாவின் ஒரே மாதிரியான கதையமைப்பையே கொண்டிருப்பவை.


அதாவது ஹீரோயிஸம், செண்டிமெண்ட், காமெடி, பாடல்கள், சண்டைக்காட்சிகள், கொஞ்சம் க்ளாமர் ஆகியவற்றின் விகிதாசாரப்படியிலான காட்சிகளின் கலவை. இதை விஜய்யும் பல்வேறு தருணங்களில் வெளிப்படையாக சொல்லி வந்திருக்கிறார். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், விஜய் மட்டுமல்ல இதற்கு முன்பே எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியோர் பின்பற்றி வெற்றி கண்ட அதே பாரம்பரிய முறைமை தான் இது.‌

சுறா படமும் விதிவிலக்கின்றி அதே பாணியைத் தான் பின்பற்றியிருக்கிறது.

இதில் அதிர்ச்சிக்குள்ளாகவோ, ஆச்சரியம் காட்டவோ, ஆதங்கப்படவோ என்ன இருக்கிற‌து என்று எனக்கு நிஜமாகவே புரியவில்லை. மேற்கண்ட பிருஷ்ட விமர்சகரைப் பார்த்து அதே சாயலில் வேறொரு கேள்வி எழும்புகிறது - "சுறா படத்துக்கு டிக்கெட் எடுக்கும் போது மூளையை எங்கே சூ..க்குள் சுருட்டியா வைத்திருந்தார்?". ஒரு வேளை மகாநதி படம் மாதிரி இருக்கும் என்று நம்பி படம் பார்க்கப் போயிருப்பாரோ.

அப்படியே நினைத்திருந்தாலும் அது யார் குற்றம்?

சுறா படத்தில் நிறைய குறைகள் இருந்த போதிலும் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன் போன்ற அவரது முந்தைய சமீபங்களைக் காட்டிலும் நன்றாகவே வந்திருக்கிற‌து. விஜய் அண்ணாவின் பொன்மொழி பற்றி வசனம் பேசுகிறார்; காமராஜர் மாதிரி பின்னால் கைகட்டி நடக்கிறார், எம்.ஜி.ஆரின் கார் எண் கொண்ட காரில் வருகிறார், ஆணிவேர், அஸ்திவாரம் என்றெல்லாம் சிலாகிக்கப்படுகிறார். மொத்தத்தில் தன் ரசிகர்களுக்கு எதோ சொல்ல விரும்புகிறார் என்பது தெளிவாய்த் தெரிகிறது.

உங்களத்தான் நம்பியிருக்காரு. பாத்து ஏதாவது செய்ங்க. சினிமாவாவது பிழைக்கும்.

நடனங்களில் படுத்து, அமர்ந்து, நிமிர்ந்து, எழுந்து, ஆடுவது‌ மாதிரியான யோகாசன ஜிம்னாஸ்டிக்களை விஜய் சேர்த்துக் கொண்டிருந்தாலும் சிம்புவுடையதைப் போன்ற சர்க்கஸ் சேஷ்டைகளைப் போலல்லாது ஒரு கலைத்தன்மை இருக்கிற‌து. வடிவேல் காமெடி மொக்கை தான். தமன்னா (ஆச்சரியமாய்) அழகாய் இருக்கிறார். அந்த வில்லன் நடிகரும் (பெயர் ராகுலோ என்னவோ) நன்றாக செய்திருக்கிறார்.

குறிப்பிட வேண்டிய சங்கதி என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு. விஜய்க்கு அடுத்து பட‌ம் முழுக்க தெரிபவர் அவர் தான். பாடல்கள் சுமாராகத் தான் தோன்றுகிறது - நிறைய இடங்களில் பழைய வாசனையும் கூட‌. சமகால சூப்பர் ஹீரோ ஒருவரின் ஐம்பதாவது படம் என்கிற சுமையோடு எஸ்.பி.ராஜ்குமார் (இம்முறை எஸ்.பி.ராஜகுமார்) தன் வேலையை செவ்வனே செய்யவில்லையென்றாலும் சுமாராக நிறைவேற்றியிருக்கிறார் (அழகர்மலையில் இளையராஜாவைப் பாட வைத்து, நடக்க விட்டு இவர் எடுத்த ஒரு பாடல் மட்டும் படம் குறித்த ஒரு சிறிய‌ எதிர்பார்ப்பை எழுப்பியிருந்தது).

இங்கே நான் சொல்லிக் கொள்ள விரும்பும் விஷயம் அடியேன் விஜய் ரசிகன் அல்ல என்பதே. இப்பதிவு உங்களை அப்படி எண்ண வைக்கும் என்பதேலேயே அப்பழியிலிருந்து பிழைக்கும் பொருட்டு இந்தத் தகவல். மற்றபடி, என்னைப் பொறுத்தவரை இசைக்கு எப்படி ஒரே இளையராஜவோ, அப்படியே நடிப்புக்கும் ஒரே கமல்ஹாசன் தான். இந்த விஜய், அஜீத், சிம்பு, த‌னுஷ் போன்ற ஜிகினாக்களுக்கெலாம் (இவ்வரிசையில் ரஜினியையும் சேர்க்க நினைத்து ரொம்ப யோசித்துக் கைவிட்டேன்) நான் அப்பாற்பட்டவன் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

எல்லா விஜய் படங்களையும் போல், இப்படத்துக்கும் சொல்லப்படும் ஒரு விஷயம் யாரையாவது கை காட்டி "அவன் தீவிர‌ விஜய் ரசிகன்; அவனே படம் ந‌ன்றாயில்லை என்கிறான்" என்பது. "அவன் மனம் பிறந்தவன்; அவனே இப்படிச் சொல்கிறான்" என்பதைப் போன்றது தான் இது என்ற தர்க்கமும், "அவன் படம் நன்றாயிருக்கிறது என்று சொன்ன போது என்ன செய்தாய்" என்ற குதர்க்கமும் ஒருபுறம் இருக்கட்டும், என்னுடைய சந்தேகமெல்லாம் உங்களுக்கெல்லாம் சொந்த மூளை என்ற ஒன்றே கிடையாதா?

Comments

Athisha said…
நல்ல பதிவு நன்றி விஜய்
ண்ணா..வாஙக்ண்ணா வாஙக்ண்ணா :))
Anonymous said…
ஒரு எழுத்தாளருக்கே உரித்தான விமர்சன நடை உங்களுடையது.ரெட்டச்சுழி போன்ற படங்களின் விமர்சனத்துக்காக காத்திருக்கிறேன்.உங்கள் விமர்சனத்திறமையை புத்தக விமர்சனங்களிலும் காட்டலாம்.
K Siva said…
தெளிவான மற்றும் ஒரு நேர்த்தியான விமர்சனத்துக்கு நன்றி !!

ஆனாலும் படம் கொஞ்சம் மோசம் தான்...
ஜெய் said…
விஜயகாந்துக்கு ஒரு ரமணா போல, அப்பப்போ அதிசயமாக சிலர் நல்ல படங்களில் நடிக்கிறாங்க.. அதுபோல ஒரு படம் விஜய்க்கு வரும்னு நினைச்சிருப்பாங்களா இருக்கும். அதுக்காக எதுக்கு பாஸ் சண்ட போட்டுகிட்டு.. விடுங்க.. விடுங்க..
Anonymous said…
இந்த மாதிரி குப்பையான திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி நீங்கள் உங்கள் மற்றும் எங்களின் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக உலக திரைப்படங்களை பார்த்து அவற்றை பற்றி நீங்கள் எழுதலாம்.
Anonymous said…
ஊர்ல நாலு பேரு ஒன்னு சொன்னா , இல்ல நான்தான் அறிவாளின்னு அதுக்கு நேர் எதிர்மறையா எதாவது சொல்ல வேண்டியது .சுறா படம் நல்ல இல்லன்னு எல்லாரும் சொல்றாங்க. இவர் அதுலயும் ஒரு பிட்டு போட்ராருய்யா. கேட்டா படம் பாத்தவங்க முட்டாளாம். யோவ் Non Conformist இம்சையே, போய் ஏதாவது உருப்படியான வேலைய பாருய்யா. பெரிய மேதாவி மாதிரி பேச வேண்டியது. உன் கம்ப்யூட்டர்ல 'பீ' ய வாரி கொட்டுனாதான் அடங்குவேன்னு நெனைக்கறேன். தயவு செஞ்சு இவன யாரும் encourage பண்ணாதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கறேன்.
discover said…
விஜயின் சுறா படம் பற்றிய ஒரு SMS கதை கூட நன்ற இருந்தது (கதை: விஜயோட நண்பன் ஒரு சீனர், அவர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளார். அவரை காண பதறிபோய் மருத்துவமைனையில் வந்து பார்க்கிறார். அப்பொழுது அந்த நண்பன் சீன மொழியில் சுக் சியாங்கோ சுங்கு என்று கூறுகிறார் அது என்ன என்று கண்டுபிடிக்க சீனாவுக்கு கடல் மேல சைக்கிள்ள போறாரு விஜய் போற வழியில 6 பாட்டு 4 பைட்டு கடைசியா அது என்னனு கண்டுபிடிசுடுறாரு அது என்னன்னா கொய்யால ஆக்சிஜன் tube ல இருந்து கால எடுடா)
viki said…
பொன்மனம் போன்ற ஒரு மென்மையான படத்தை எடுத்த எஸ் பி ராஜ்குமார்(அதன் பின் என்ன படம் எடுத்தார் எனக்கு தெரியவில்லை) இப்படத்தை ஒரு கைப்பாவையாக மட்டும் இருந்து எடுத்திருக்கிறார் என்பது திண்ணம்.(அது சரி விசய் படத்தை எந்த இயக்குனர்தான்அவரின் தலையீடு இல்லாமல் எடுக்க முடியும்?)
நீ குறிப்பிட்ட ஜிகினாக்களின் தொல்லை தாங்காமல்தான் தமிழ் படம் பார்பதையே வெகுவாக குறைத்து கொண்டேன்.
சமீபத்தில் நான் ரசித்து பார்த்த தமிழ் படங்களென்றால் அது பேராண்மை அதற்கு முன் வந்த பொம்மலாட்டம் மற்றும் குப்பி.
தமிழில் ஒன்று மசாலாவாக எடுப்பார்கள் இல்லையேல் என்னை வழியும் நான்கு தறுதலைகளை வைத்து எடுப்பார்கள். Dev.D மற்றும் kaminey .etc..etc.. போன்ற படங்களை இருபது வருடங்களானாலும் இங்கு எடுக்கபோவதில்லை.
viki said…
மற்றபடி, என்னைப் பொறுத்தவரை இசைக்கு எப்படி ஒரே இளையராஜவோ, அப்படியே நடிப்புக்கும் ஒரே கமல்ஹாசன் தான்///
.
.
தமிழில் கமல் மட்டும் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன்.
மேலும் கமல் பல முறை Al Pacino வின் உடல் மொழிகளை பிரதி எடுத்து வந்திருக்கிறார் .உம் தசாவதாரத்தில் அந்த விஞ்ஞானி கமலின் தோற்றம் Al Pacino வின் தோற்றத்தை ஒத்து அமைந்திருந்தது(ஹேர் ஸ்டைல் குறிப்பாக)
ஆனால் விதி விலக்காக தனது சொந்த உடல் மொழிகளை வெளிப்படுத்தி நடித்த படங்களும் உண்டு(உம குணா,மகாநதி )
நாயகன்(Godfather 1&2 வின் அட்ட காப்பி) படத்தில் இளம் கமல் Al Pacino வின் உடல் மொழிகளையும்(Godfather-2 பார்த்தால் தெரியும்)வயதான கமல் Marlon Brando வை மிக ஒத்தும் இருந்தது(தலையை சொரிந்து கொள்வது..உப்பிய கன்னம் ).அவர் குணா போன்று மகாநதி போன்று(அன்பே சிவம் கூட) சொந்த நடிப்பை வெளிப்படுத்தினால் மேலும் உயரத்திற்கு போக முடியும்(அவரன்றி வேறு யாரால் அது முடியும்?)நான் அவருக்கு எதிராக பேசவில்லை நானும் கமல் ரசிகன்தான்.(தமிழில் நடிக்க தெரிந்த ஒரே நடிகர்).மற்றபடி சூர்யா Robert De Niro என்ற உயிரை கொடுத்து நடிக்கும் ஒரு மகனடிகனை பிரதியெடுத்து வருவது எரிச்சலூட்டுகிறது.சிரிக்கும் பொது டி நிரோ போல் சிரிக்க முயல்வது விரலை காட்டி பேசுவது(யப்பா நான் சிம்பு ஸ்டைலை சொல்லவில்லை).இந்த கொடுமையை சூர்யா நிறுத்தி கொள்ளலாம்.நிச்சயம் டி நிரோவின் உஅயரத்தை அவரால் எட்டவே முடியாது.
ஆனால் கமல் தான்தான் மார்லோன் பிராண்டோவின் மகன் என கூறுவது ஒப்பு கொள்ள முடியாது.ஏற்கெனவே பலர் அதற்கான் தகுதியை எட்டி விட்டனர்(உம்.ராபர்ட் டி நிரோ ,ஷான் பென் etc..etc)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி