இசையோடியைந்த அழைப்பு

காலர் ட்யூன் என்றழைக்கப்படும் Ring-back toneகளை வைத்துக் கொள்வதில் எனக்கு பொதுவாய் உடன்பாடு இருந்ததில்லை. அதன் அசந்தர்ப்பங்கள் (இழவு செய்தியைத் தொலைபேச‌ முற்படும் ஒருவருக்கு "நேத்து ராத்திரி யம்மா" பாடல் கேட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்) மட்டுமல்ல, அது தேவையற்றதொரு‌ வ‌ர்த்தக‌ இடைச்செருகலாகவும் தோன்றுவ‌தே காரணம்.

ஆனால் விதி யாரை விட்டது.

ஏர்டெல்லின் "Press * to copy this song" என்கிற (வ)ச‌தியைப் பயன்படுத்தி என் சினேகிதன் ஒருவன் அவனது காலர் ட்யூனான சுப்ரமணியபுரம் படத்தில் வரும் "கண்கள் இரண்டால்" பாடலை எனக்கும் ஒட்ட வைத்து விட்டான். இது நடந்தது சுமார் இரு வருடம் முன்பு. அகஸ்மாத்தாக வந்து சேர்ந்த அந்த ரொமான்டிக் பாடலுக்குப் பதிலாக வேறு ஏதேனும் வைப்பதே நன்று என்று கருதி சிலபல வரையரைகளுடன் தேடித் தேடி, பின் இளையாராஜா இசையில் ராம் கோபால் வர்மாவின் உதயம் 2006 படத்தில் வரும் "எழுந்து வா எழுந்து வா" என்பதை வைத்துக் கொண்டேன்.

பின்னர் அவ்வப்போது அதைத் தூற்றிக் கொண்டே மாற்றியும் வந்துள்ளேன். வரலாறு மிக‌ முக்கியம் என்கிற காரணத்தால் அவையாவன‌: 1. சம்போ சிவ சம்போ - நினைத்தாலே இனிக்கும் (எம்.எஸ்.விஸ்வநாதன்) 2. அகர ருத்ராய - நான் கடவுள் (இளையராஜா) 3. அடடா வா அசத்தலாம் - சர்வம் (யுவன் ஷங்கர் ராஜா) 4. வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால் (ஏ.ஆர்.ரஹ்மான்) 5. என்னடா பாண்டி - வால்மீகி (இளையராஜா) 6. Aazma Luck Is The Key - Luck (Salim-Sulaiman).

தற்போது கிட்டதட்ட ஒரு வருடமாக மா(ற்)றாமல் வைத்திருப்பது ஒரே பாடல் தான் - மாற்றும் எண்ணமும் இல்லை. இசை, குரல், வரி மூன்றுமே மிக மிக அற்புதமாக அமைந்த பாடலும் கூட. அஞ்சாதே படத்தில் சுந்தர் சி. பாபுவின் இசையில் இயக்குநர் மிஷ்கினே பாடிய "அச்சம் தவிர்" என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடி பாடல் தான் அது. அடியேனைத் தவிர‌, த‌மிழ்நாட்டில் வேறு ஓர் ஆசாமியும் இதே பாடலை மிக விரும்பி தனது செல்பேசியின் காலர் ட்யூனாக வைத்திருப்பதாகக் கேள்வி.

அவர் இயக்குநர் சேரன்.

Comments

viki said…
அஞ்சாதே படத்தில் சுந்தர் சி. பாபுவின் இசையில் இயக்குநர் மிஷ்கினே பாடிய "அச்சம் தவிர்" என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடி பாடல் தான் அது.///
.
.
கண்ணா அது மிஷ்கின் பாடலை.எஸ் பி பி பாடியது.அவ்வளவு ஆண்மையும் சக்தியும் கலந்த குரலுக்கு வேறு யார் சொந்தமாக இருக்க முடியும்?
கண்ணதாசன் கரைக்குடிதான் மிஷ்கின் பாடியது.
@viki

both 'acham thavir' and 'kannadasan karaikuri' songs are sung by myshkin.. and 'acham thavir' song is a part of 'puthiya aathicchoodi' penned by bharathi..

http://www.raaga.com/channels/tamil/album/T0001241.html
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்