பையா அல்ல பைத்தியகாரன்

டிரைவிங் லைசென்ஸ் மாதிரி தான். ஒரு முறை எட்டு போட்டுக் காட்டினால் அடுத்த இருபது வருடங்களுக்கு இந்த தேசத்தின் எந்த சாலையிலும் வாகனம் ஓட்டுவதற்கு நம்பி அனுமதிக்கிறார்கள். அதே முறைமையைத் தான் இங்கு சில தமிழ் திரைப்பட இயக்குநர்களும் பின்பற்றுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் லிங்குசாமி.


ஆம். எப்போதோ எட்டு பத்து வருடங்களுக்கு முன்பு ரன் என்றொரு சுவாரசியமான படத்தை தெரியாத்தனமாகத் தந்து விட்டார் என்பதற்காக இன்று வரையிலும் விடாமல் படமெடுத்து மக்களை இம்சித்து வருகிறார். அவர் இயக்கத்தில் பின் வந்த ஜி, சண்டக்கோழி, பீமா எல்லாமே சுமாருக்கும் கீழான படங்கள்.

விதிவிலக்கின்றி தொடர்ந்த பட்டியலில் லேட்டஸ்ட் இணைப்பு பையா.

எந்தவித சுவாரசியமுமற்ற திரைக்கதை தான் Primary Culprit - ஏற்ற இறக்கங்கள், வளைவு நெளிவுகளே இல்லாத பெண்ணுடம்பு மாதிரி (24-24-24 அளவுடைய ஒரு ஃபிகரை கற்பனை செய்து பாருங்கள்). டோல்கேட்டில் குடை பிடித்துத் தப்பிக்கும் காட்சி மட்டும் நன்று. தில், தூள், கில்லி, ரன், அயன் போன்ற successful commercial entertainerகளில் படம் நெடுக இத்தகைய காட்சிகள் இருக்கும் என்பது தான் வித்தியாசம்.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் மண்சோறு சாப்பிடுவது மாதிரி தான் இருந்தது.

மூன்றாவது படத்திலேயே முப்பது பேரை ஒற்றை ஆளாக அடிப்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் பருத்தி வீரன் உடல் மொழியை இனி மேலும் கார்த்தியிடம் சகிப்பதற்கில்லை. தமன்னா முற்றிய முருங்கக்காய் மாதிரி இருக்கிறார். மிலிந்த் சோமன் பரிதாபமாய் அடி வாங்குகிறார். ஜெகன் வரும் காட்சிகளின் மட்டும் வசனம் சிரிக்க வைக்கிறது. அப்புறம், படம் முழுக்க வரும் அந்த கறுப்பு லான்சர் காரும், ஆங்காங்கே வரும் அதே நிறமுள்ள சோனியா தீப்தியும் அநியாயத்துக்கு அழகு.

மதி, யுவன் இருவருமே எதிர்பார்த்த அளவுக்கு வெளிப்படவில்லை. ஆண்டனி பரவாயில்லை. ராஜீவன் சார், அந்த சுத்துதே சுத்துதே பூமி பாடலில் வரும் செட் நாங்கள் ஜெமினி கணேசன் காலத்து டூயட்களில் பார்த்ததாயிற்றே, இது என்ன ரீமிக்ஸா. க்ளௌட் நைன் வாரணம் ஆயிரம் பட‌த்துக்கு பிறகு மீண்டும் அதே மாதிரி...

மாற்று சினிமாவைத் தான் எது நல்லது எது கெட்டது என்று தெரியமல் பினாத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், கமர்ஷியல் படத்தை கூடவா அடையாளம் பார்க்கத் தெரியாது. இந்தப் படத்தைக் கூட சுவாரசியாயிருக்கிறது என சிலாகித்து எழுத ஒரு புத்திஜீவி கூட்டம் இருக்கிறது. முதலில் திரையரங்குகளுக்குப் பக்கத்திலிருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட கலைஞர் உத்திரவிட வேண்டும்.

என்னைக் கேட்டால் பையாவுக்கு வேட்டைக்காரன் தேவலை என்பேன்.

Comments

Athisha said…
சொல்லிட்டருப்பா கலெக்ட்ரு என்பதையே நானும் ரிப்பிட்டீக்கொள்கிறேன். உங்களுடைய தீ.வி.பிள்ளை பட விமர்சனத்தைவிட இது டாப் கிளாஸ். வலையுல அகிரா குராசாவா நீங்கள்தான்
Anonymous said…
hi, i would like u to add the chatback gadget to the home page of ur blog. if u r online we the readers can easily find u. use tis link. http://googletalk.blogspot.com/2008/02/google-talk-chatback.html.

after visiting tis link click chatback start page. then u d html code to add the gadget.
viki said…
மூன்றாவது படத்திலேயே முப்பது பேரை ஒற்றை ஆளாக அடிப்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் பருத்தி வீரன் உடல் மொழியை இனி மேலும் கார்த்தியிடம் சகிப்பதற்கில்லை///.
.
.
அது நூற்றுக்கு நூறு உண்மை..ஒரே உடல் மொழியை பார்க்க சகிக்கவில்லை(நான் இன்னும் அந்த கொடுமையான படத்தை பார்க்கவில்லை..எச்சரித்ததற்கு நன்றி .ஆயிரத்தில் ஒருவனையும் பார்கவில்லை..மெண்டல் செல்வா படங்களை பார்பதில்லை என ஒரு சின்ன சபதம்..இந்த கருமதிற்குதான் நான் தமிழ் படங்களைபார்ப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டேன் .ஹிந்தியில் குறிப்பிட்ட படங்கள் அல்லது உலக சினிமா (அது எந்த மொழியாயினும் நல்ல படமாக இருந்தால் பார்பேன். )
.
தம்பியாவது தன்னுடைய உடல்மொழியையே காப்பியடித்து கொண்டிருக்கிறார்..ஆனால் அண்ணாத்தே சூர்யா ராபர்ட் டி நீரோவின் உடல் மொழிகளை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரதியெடுக்க முயன்று(டி நீரோ போன்று வாயை வைத்துகொண்டு சிரிக்க முயல்வது மற்றும் ஒரு விரலை மட்டும் எதிரில் நிற்பவரிடம் காட்டி பேசுவது உம்.வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரனிடம் மற்றும் சமீராவிடம் பேசும்போது பார்க்க எரிச்சலாக வருகிறது) பரிதாபமாக தோற்றுபோகிறார் .ஏன் இந்த கொலை வெறிஎன தெரியவில்லை..அல்லது தோள்களை ஹேங்கரில் மாட்டிவிட்டது போன்று நிற்பது(காக்க காக்க படம் முழுவதும் நான் ஏதோ சூர்யாவிற்கு முதுகு பிடித்துகொண்டது என நினைத்தேன்..அப்புறம்தான் தெரிந்தது அவர் ஒருவிறைப்பான காவல் அதிகாரியென காட்டுவதற்காக அந்த கொடுமையை செய்திருக்கிறார்கள்).அடங்கப்பா தாங்க முடியல..
Keerthi said…
Machi, blog posts r kinda gettin monotonous. spice up plz...
உங்கள் விமரிசனத்தை வரிக்கு வரி -சந்தேகமின்றி முதல் வரியிலிருந்து- நான் ஆமோதிக்கிறேன்.ங்கொய்யால படமா எடுக்கிறாய்ங்க.... அழுகையா வருதுங்க...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி