இசையோடியைந்த அழைப்பு
காலர் ட்யூன் என்றழைக்கப்படும் Ring-back toneகளை வைத்துக் கொள்வதில் எனக்கு பொதுவாய் உடன்பாடு இருந்ததில்லை. அதன் அசந்தர்ப்பங்கள் (இழவு செய்தியைத் தொலைபேச முற்படும் ஒருவருக்கு " நேத்து ராத்திரி யம்மா " பாடல் கேட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்) மட்டுமல்ல, அது தேவையற்றதொரு வர்த்தக இடைச்செருகலாகவும் தோன்றுவதே காரணம். ஆனால் விதி யாரை விட்டது. ஏர்டெல்லின் " Press * to copy this song " என்கிற (வ)சதியைப் பயன்படுத்தி என் சினேகிதன் ஒருவன் அவனது காலர் ட்யூனான சுப்ரமணியபுரம் படத்தில் வரும் " கண்கள் இரண்டால் " பாடலை எனக்கும் ஒட்ட வைத்து விட்டான். இது நடந்தது சுமார் இரு வருடம் முன்பு. அகஸ்மாத்தாக வந்து சேர்ந்த அந்த ரொமான்டிக் பாடலுக்குப் பதிலாக வேறு ஏதேனும் வைப்பதே நன்று என்று கருதி சிலபல வரையரைகளுடன் தேடித் தேடி, பின் இளையாராஜா இசையில் ராம் கோபால் வர்மாவின் உதயம் 2006 படத்தில் வரும் " எழுந்து வா எழுந்து வா " என்பதை வைத்துக் கொண்டேன். பின்னர் அவ்வப்போது அதைத் தூற்றிக் கொண்டே மாற்றியும் வந்துள்ளேன். வரலாறு மிக முக்கியம் என்கிற காரணத்...