ரங்கநாதன் தெரு எறும்புகள்
" இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவுமே இல்லை என்பதே யதார்த்தம் " - அதிஷா [ 'அங்காடித்தெரு' திரைப்பட விமர்சனத்தில் ] ****** தமிழ்ப் பதிவுலக மக்களால் சிலாகிக்கப்படும் திரைப்படங்கள் யாவும் அதற்கு எதிர்மறையாகவே இருக்கும் என்கிற தங்க விதி மற்றுமொரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இம்முறை அகப்பட்டிருக்கும் பரிசோதனை எலி வசந்தபாலனின் அங்காடித்தெரு (முந்தைய பெருச்சாளிகள் பசங்க, நாடோடிகள், நான் கடவுள், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா ). அடிப்படையான பிரச்சனை என்னவெனில், படத்தில் வலுவான கதையென்று ஒன்றுமில்லை; அதற்கு அத்தியாவசியத் தேவையான சிக்கல் இல்லை. பின்பு எங்கிருந்து போய் தொடர்ச்சியான காட்சிகள் மூலமாய்த் திரைக்கதையைப் பின்னுவது. அதன் காரணமாக படம் முழுக்க நிறைய நாடகத்தனமான மிகையுணர்ச்சிக் காட்சிகளைப் புகுத்த வேண்டிய நிர்பந்தம். பின்புலம் ஒன்று தான் படத்தின் முதுகெலும்புச்சரமாய் படத்தை நிமிர்த்தி வைக்கிறது. அந்த வகையில் இப்படத்தை அத்தகைய விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றின நல்லதொரு ஆவணப்பதிவாக மட...