உங்க வீட்டுப் பொண்ணு
சென்ற பொங்கல் தினத்தன்று விஜய் டிவியில் சிவகார்த்திகேயனை வைத்து எங்க வீட்டுப் பிள்ளை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அதில் சில சங்கடத்துக்குரிய விஷயங்கள் இடம் பெற்றன (குறைந்தபட்சம் என்னளவில்). கல்லூரிப் பெண்கள் சிலர் அவரது ரசிகைகள் எனக் காட்டப்பட்டு மேடையிலேயே குறும்புத்தனம் என்ற பெயரில் சில ஆபாசங்களில் ஈடுபட்டார்கள் (மறுபடி என்னளவில் தான்). அதன் காணொளிகளை இங்கே பார்க்கலாம் (விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் ஏற்றப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் காணொளி யில் இந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன): http://www.dailymotion.com/video/x19n58l_engaveettu-4_shortfilms (07:00 to end) http://www.dailymotion.com/video/x19n5qh_engaveettu-5_fun (start to 04:00) ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு பொங்கல் ஊட்டி விட்டு தனக்கும் அவரை ஊட்டி விடச் செய்கிறார். ஒருவர் சிவகார்த்திகேயனின் கன்னத்தைக் கிள்ளி விட்டு தன் கன்னத்தையும் அவரைக் கிள்ள வைக்கிறார். ஒருவர் லிஃப்ட்டுக்குள் தீபிகா படுகோனுடன் மாட்டுக் கொண்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கிறார். ஒருவர் அவர் தன்னைக் கையில் தூக்கிக...
Comments
கலைஞ்சன் என்பவன் தனிமையானவன்.அவனுக்கு சமூக கடமை இருக்க வேண்டும் என்று இவர் (சாரு கூட இதையே பிதற்றுகிறார் .அவரிடம் நான் முரண்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று)சொல்வதெல்லாம் குறிப்பது ஒன்றே.இவர் அந்த "நாளைக்கு வருவேன் நாளான்னிக்கு வருவேன்" என்று ஊரை ஏமாற்றிய ரஜினி காந்தின் ரசிகன் என்று. இவர் சொல்வதைபார்த்தால் எம் ஜி ஆர் பல குடும்பங்களை வாழ வைத்தார் .சிவாஜி கணேசன் பலரிடமும் எரிந்து விழுவார் ஆதலால் எம் ஜி ஆரே சிறந்த நடிகர் என்று கூறுவார்,இவர் தொடர்ந்து எழுதிவரும் "ஜான்" வரிசை இசையமைப்பளர்களே கலைஞ்சர்கள் .அல்லது ஆஸ்கார் வாங்கியிருக்க வேண்டும். மற்றவர்களெல்லாம் குப்பை.
இனி இவரின் குப்பைகளை படிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்
இந்தியாவில்தான் ஒரு கலையை பற்றி தெரியாமலேயே அதை விமர்சனம் செய்யும் போக்கு நிலவுகிறது.இதைபோல்தான் ஒரு பெண்மணி தொலைக்காட்சியில் ஒரு பட விமர்சனம் செய்யும் போது “இந்த படத்தில் நடிப்பவர்கள் எல்லோரும் Dark ஆக இருப்பதால் இது ஒரு Dark film என்றார்.இதுபோல்தான் இவரின் கட்டுரையும்.
http://www.youtube.com/watch?v=C8QQMk_il0Q&feature=channel_page
is this what oscar's award for "original" score for?where is the original?