ஐந்து படங்கள் - சிறுவிமர்சனம்

*******

அசல் படம் பரவாயில்லை. அஜீத் கம்பீரம்; பாவ்னா அழகு. வசன‌ங்களில் மீண்டும் பழைய சரண் மீண்டிருக்கிறார். பிரபு, யூகி சேது, சுரேஷ், சமீரா ரெட்டி பரிதாபம். செல்வேந்திரன் இப்படத்திற்கு "டொட்டடொய்ங்ங்...!" என்று ஒன்றை வார்த்தை விமர்சனம் எழுதியிருந்ததை மிக ரசித்தேன் (படத்தில் வரும் ஒரு பாடலின் துவக்கம்). அந்த சத்தம் காதுகளுக்குக்கு பிடித்தமானதாய் இருப்பதைப் போல் இப்படமும் கண்களுக்கு பிடித்தமானதாய் இருக்கும் (ந‌ல்ல விஷுவல்ஸ் + ஸ்டைலிஷ் மேக்கிங்); மற்றபடி அதைப் போலவே படத்திலும் உள்ளே அர்த்தம் (அதாவது திரைக்கதை) என்று ஒன்றும் பெரிதாய் இல்லை என்பதாக சொல்ல வருகிறார் (என நினைக்கிறேன்).

*******

ராம் கோபால் வர்மாவின் Rann (ரணபூமி என்பதாக அர்த்தம் வருகிற‌து) படம் நன்றாக இருக்கிற‌து. தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளைத் தந்து அதிக டி.ஆர்.பி. ரேட்டிங் பெறுவதற்க்காக செய்யும் கேப்மாரித் தனங்களைப் படம் புட்டுப் புட்டு வைக்கிறது. திருப்பங்களோ, முடிச்சுகளோ இல்லாத சாதாரண ஆனால் நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட திரைக்கதை. RGV படங்களின் ஒளிப்பதிவு தான் பொதுவாய் மிகவும் பேசப்படும் (Of course, in the good sense). ஆனால் இப்படத்தின் ஒளிப்பதிவைப் பொறுத்தவரை வித்தியாசமான கேமெரா ஆங்கிள்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடர் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. ரிதேஷ், சுதீப் இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தியாவின் சிறந்த பத்து நடிகர்கள் பட்டியலைத் தயாரித்து வருகிறேன் - படம் பார்த்த பின், அதில் அமிதாப் இடம் பெற வேண்டியதன் அவசியத்தை மீண்டுமொரு முறை உறுதி செய்து கொண்டேன்.

*******

சில காட்சிகளைத் தவிர, கோவா படம் மிகச்சுமார் தான். "வர வர மாமியா" கதை தான். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால், இதில் காட்சி படுத்தப் பட்டிருக்கும் Gay Relationshipஐச் சொல்லலாம். அதிலும் சம்பத்தின் நடிப்பு அபாரம். "இளைய இசை ஞானி" என்று டைட்டில் கார்ட் போட்டுக் கொண்டால் மட்டும் போதாது. தீம் ம்யூசிக் மட்டும் பரவாயில்லை. இதில் பியா அழகாய் இருந்ததை குறிப்பிடாமல் விட்டால் எனக்கு நான்கு நாட்களுக்கு சோறு கிடைகாது. மூவரில் ஜெய் மட்டும் ஸ்கோர் பண்ணுகிறார். மற்ற‌படி, இந்த ஃபிப்ரவரி இறுதியில், நாங்கள் நண்பர்கள் நால்வர் கோவா போகிறோம். அதற்காக மட்டும் வெங்கட் பிரபுவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

*******

AVATAR படம் வெளிவந்த இரண்டாம் நாளே பார்த்தாயிற்று. ஆனால் விரிவாய் விமர்சனம் எழுத இன்னும் நேரம் கிடைத்த பாடில்லை. நிச்சயம் விரைவில் எழுத முயற்சிக்கிறேன். இப்போதைக்கு சுருக்கமான ரெவ்யூ. கதை அடாசு தான். திரைக்கதையும் சுமார் தான். ஆனால் அதையெல்லாம் யார் கவனித்தார்கள். அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸில் இப்படம் செட் பண்ணியிருக்கும் பெஞ்ச்மார்க்கை இன்னும் பத்து வருடங்களுக்கு எந்த ஹாலிவுட் படமும் நெருங்குவதை நினைக்கக் கூட‌ முடியாது எனத் தோன்றுகிறது (2000ம் ஆண்டு வெளியான‌ அலைபாயுதே படத்தில் இடம் பெற்ற "பச்சை நிறமே" பாடலின் விஷுவல் தொட்டிருக்கும் அழகியலின் உச்சத்தை வேறு எந்தப் பாடலும் இந்த பத்தாண்டுகளில் எட்ட முடியவில்லை. அதே போல் தான்). ராம் கோபால் வர்மா சொன்னது போல் ஜேம்ஸ் கேமரூன் கடவுள் தான்.

*******

கே.எஸ்.ரவிக்குமாரின் ஜக்குபாய் அவருடைய வழக்கமான ஆதிகால அரைத்துப் புளித்த மசாலா ஃபார்முலா. எத்தனை முறை தோற்றாலும் நம் ஆட்களுக்கு புத்தியே வராது போலிருக்கிறது. ஃபாரின் லொக்கேஷன்களில் எடுத்தால் படம் ஓடி விடும் என்று எந்த மாக்கான் சொன்னது? ஒரு காலத்தில் சுவாரசியமான எண்டர்டெய்னர்களைக் கொடுத்த இயக்குநரா இவர் என சந்தேகம் எழுகிறது. படத்தில், சரத்குமாரின் அனுபவமான நடிப்பும் ராஜசேகரின் சுமாரான ஒளிப்பதிவும் மட்டும் தேறுகிறது. மற்றபடி, கவுண்டமணி, ஸ்ரேயா, கிரண் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து அவமானப் படுத்தியிருக்கிறார்கள். ரஜினி, கமல் தவிர வேறு ஆட்களுடன் ரவிக்குமார் சேரும் படங்களை இனிப் பார்ப்பதில்லை என சங்கல்பம் செய்திருக்கிறேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

*******

Comments

Dinesh said…
Hi CSK,

I wanted to say few things regarding all the 5 movies:

Asal --> not watched yet & will not watch it in future also. "yeven intha ajith padatha theatrela poi paarpan... aiyo saamy!!!!" . so, no point in commenting this movie.

Rann --> looks like it is creating a huge buzz in bollywood. yet to watch.

Goa --> not at all bad, i would say. of-course, its a different genre (not like chennai-28/saroja), but still, an 100% romantic-comedy film. Yuvan's music is not bad at all. He has tried all kinds of musics in this film. especially, the complete re-recording scores in GOA related scenes are awesome .

Avatar --> really a mind-blowing film. i agree with what you said. at least for another 10 years, we cannot expect a animation movie like this even in Hollywood, until unless, Cameroon himself releases his sequel of Avatar.

Jaggubhai --> please don't give much impotence to these kinds of movies in ur blog. because, we (visitors of ur blog) have a decent faith on your movie selection & we believe that you have a wonderful movie reviewing skills. so, just cut these kinds of "SHIT"s out of your blog in future :)
கோவா படத்தின் சிறு விமர்சனம் பியா மாதிரி இருக்கிறது
Kumar said…
அசல்: அஜித் படங்களை நான் பெரிதாய் வயுர்ம்பி பார்பதில்லை. இதுவரை நான் அசல் பார்கவில்லை அதனால் நான் அசல் படம் பற்றி பேச ஒன்றுமில்லை.

ராம் கோபால் வர்மாவின் ரன்: இப்படத்தின் பெயர்குட எனக்கு தெரியாது. மன்னிக்கவும்.

கோவா: தற்கால குப்பை படங்களில் கோவா மிகவும் நன்று. நான் கோவா சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் கோவா படம் பார்த்த பின்பு மீண்டும் எனக்கு பழைய ஞாபகங்கள் வருகிறது. எனது கல்லூரி காலத்தை ஞாபகபடுத்திய வெங்கட் பிரபுவிற்கு எனது நன்றி. இப்படத்தில் நடித்த பியா எனது மனதை கொல்லை கொண்டுவிட்டார். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாக உள்ளது. சினேகாவிற்கு ஒரு வேலையும் இல்லை. இசையை தவிர இப்படத்தில் வேறு ஒரு பெரிய குறையும் இல்லை.

அவதார்: நான் இன்னும் பார்கவில்லை.

ஜக்குபாய்: இன்னுமா நீங்கள் சரத்குமார் படங்களை பார்த்துகொண்டு இருக்கீங்க?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி