ஆயிரத்தில் ஒருவன் - ஒரு பதில்

யுவகிருஷ்ணாவின் 'ஆயிரத்தில் ஒருவன்' விமர்சனப் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் தவறுதலாக விடுபட்டிருக்குமாயின் இங்கே படித்துக் கொள்ளலாம்:

*******

நீங்கள் சொல்லும் 'ஹாலிவுட்டை நோக்கி நெருங்கும் கோலிவுட்டின் பயணத்தில்' லாஜிக் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அந்த அடிப்படையில் தான் அத்தகைய விமர்சனங்களை ஒரு சிலர் முன் வைத்திருக்கக்கூடும். செல்வா போன்றவர்களின் படைப்புகளில் தான் லாஜிக்கை எதிர்பார்க்க முடியும். விஜய் படங்களில் அல்ல. அதுவும் ஒரு காரணம்.

தவிர, த‌ற்போது பதிவுகள் உள்ளிட்ட ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும் படத்தின் பிரதான‌ தவறுகள் (அதாவது லாஜிக் ஓட்டைகள்; தொழில்நுட்ப போதாமைகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன்) அனைத்தையும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் (அப்படியொன்று எடுக்கப்பட்டால்) சரி செய்து கொள்கிறேன் என்று செல்வாவே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.

அர்த்தம் என்னவெனில், சரிசெய்யப்பட்டிருக்க வேண்டிய அத்தகைய குறைகள் இப்பிரதியில் இருக்கின்றன என அவரே ஒப்புக் கொள்கிறார்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி