சந்திரயான் : A TEASER TRAILER

*******

விரைவில்...! மிக விரைவில்...!

*******

"எதிர்காலத்தில் என் கவிதைகளோ, வலைப்பதிவுகளோ, அல்லது இன்ன பிறவோ தொகுப்பாய் வெளிவர நேருமென்றால் NMH வெளியீடாகவே வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்."

- சி.சரவணகார்த்திகேயன் ['ஒண்டிக்கட்டை உலகம்' நூல் விமர்சனம்]

*******

இதை எழுதியது சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு (18 டிசம்பர், 2008). அப்போது என்ன நினைத்து இப்படி எழுதினேன் என்பது நிச்சயமாய் நினைவில்லை. ஆனால் இப்போது அந்த 'ஆசை' நிறைவேறியிருக்கிறது. "எழுதுபவர் என்கிற படியிலிருந்து எழுத்தாளர் என்னும் படிக்குச் செல்வது ஒரு கட்டம்" என்று எழுத்தாளர் பாரா குறிப்பிடுவதைப் போல எனக்கான அந்த படிநிலை மாற்றம் நான் விரும்பியதைப் போலவே NHM வாயிலாகவே நடந்தேறியிருக்கிறது.

*******

நன்றி பத்ரி & பாரா!


*******


ஆம். எனது முதல் புத்தகமான 'சந்திரயான்', நியூ ஹொரைஸான் மீடியா வெளியீடாக (இம்ப்ரிண்ட் கிழக்கு பதிப்பகம் என்று நினைக்கிறேன்) வரும் ஆண்டின் துவக்கத்தில் வெளிவர இருக்கிறது. நாளை தொடங்கவிருக்கும் 33வது சென்னை புத்தகக்காட்சிக்கு - முதல் நாள் இல்லையென்றாலும், பிற்பாடு - 99% புத்தகம் வந்து விடும் என்று பத்ரி சொன்னதாக நினைவு. என்னுடைய கவலையெல்லாம் மீதமிருக்கும் அந்த 1% பற்றித் தான்!

பொதுவாய், புத்தகத்தின் / எழுத்தாளரின் முக்கியத்துவத்தைப் பொறுத்துத் தான் அதன் Priority தீர்மானிக்கப்படும் என்பது தெரிந்ததே. இம்முறை NHM பல்வேறு இம்ப்ரிண்ட்களில் கிட்டதட்ட 200 புத்தகங்களை இக்காட்சிக்குக் கொண்டு வரவிருப்பதாக‌ செவிவழிச்செய்திகள் வாயிலாக அறிகிறேன். அந்த இருநூறில் ஒன்று தான் என்னுடையது. எப்படியோ, கண்காட்சியின் இறுதி தினமாவது புத்தகம் வந்து விடும் என நம்புகிறேன். பார்க்கலாம்.

அதுவரை நகம் கடித்துக் காத்திருக்கவேண்டியது தான். நீங்களும் நானும்!

*******

('சந்திரயான்' புத்த‌கம் பற்றி நான் எழுதிய சிறுகுறிப்பு)

ஓர் இந்தியக் கனவு

நிலா ஓர் ஆச்சரியம்; அண்ட பிரம்மாண்டத்தின் ஒரு துளி; ஆதிகாலந்தொட்டு மனிதனை உறங்க விடாமல் செய்து வரும் பெருங்கனவு. அதில் முளைக்கும் கேள்விகள், பதில்களுக்கு பதிலாக, புதிய கேள்விகளையே விதைப்பவை.

15,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்ம காலத்தில் தொடங்கிய நிலவு ஆராய்ச்சி, ரஷ்ய‌, அமெரிக்க, ஜப்பனிய, ஐரோப்பிய, சீன கலாசாரங்களைக் கடந்து, இன்று இந்திய ஒப்பனையுடன் 'சந்திரயான்' அவதாரம் எடுத்திருக்கிறது.

சந்திரயான்இந்தியாவின் முதல் நிலவாராய்ச்சித்திட்டம்.

அது –
நிகழ்வு அல்ல;
செய்தி.
தலைப்புச் செய்தி.
இன்னும் சரியாய்ச் சொல்ல வேண்டுமெனில்,
சரித்திரம்.

அத்தொழில்நுட்ப மாயாஜாலத்தின் ஆதியோடந்தமான‌ குறுக்குவெட்டுச்சித்திரம் இந்நூல்.

*******

"விற்பனையிலும் வீச்சிலும் கிழக்கு புத்தகங்களுக்கு உள்ள பெரிய போட்டி யார் என்று வெளியே விதவிதமாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்தபோது உண்மையில் நாங்கள் ரகசியமாகச் சிரித்தோம். எங்களுக்கு மட்டுமே தெரியும்.

விற்பனையளவில் கிழக்கின் முதன்மையான போட்டியாளர் Prodigy தான்."


- பா.ராகவன் [கிழக்கு ப்ளஸ் தொடர் - பகுதி 7]

*******

Prodigy என்பது கிழக்கு பதிப்பகம் போல NHMன் மற்றொரு இம்ப்ரிண்ட் என்ற தகவலையும் சேர்த்துப் பார்த்தால், மேற்குறிப்பிட்ட பாரா மூலம் பா.ரா. சொல்ல வரும் கருத்தின் வீரியம் புலப்படும். அதாவது, NHMன் நூல்களுக்கு அதன் மற்ற நூல்களே போட்டி என்பதே இதன் சாரம். இந்த‌ அடிப்படையில், இம்முறை புத்த‌கக்கண்காட்சியில் என்னுடைய முக்கியமான 25 போட்டியாளர்களைக் கொஞ்சம் கவனிப்போம்.
  1. பாரக் ஒபாமா
  2. அப்துல் கலாம்
  3. அசோகமித்திரன்
  4. இந்திரா பார்த்தசாரதி
  5. ஜெயமோகன்
  6. யுவன் சந்திரசேகர்
  7. கே.ரகோத்தமன்
  8. பா.ராகவன்
  9. மருதன்
  10. என்.சொக்கன்
  11. முகில்
  12. ஜே.எஸ்.ராகவன்
  13. சோம.வள்ளியப்பன்
  14. இலந்தை சு. இராமசாமி
  15. பா.தீனதயாளன்
  16. ச.ந.கண்ணன்
  17. பாலு சத்யா
  18. சிபி கே. சாலமன்
  19. ஆர்.முத்துக்குமார்
  20. எஸ்.எல்.வி.மூர்த்தி
  21. யுவகிருஷ்ணா
  22. மலர்மன்னன்
  23. ச‌சிகுமார்
  24. பாண்டிராஜ்
  25. சமுத்திரக்கனி
*******

"அத்துடன், இணையத்தில் எழுதி வருபவரான சரவண கார்த்திகேயனின் சந்திரயான் பற்றிய முழுமையான நூலும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கப் போகிறது என்று நம்பிக்கை தெரிவித்தார் பத்ரி."

- ஆர். வெங்கடேஷ் [சென்னை புத்தகக் கண்காட்சி – ஒரு டிரெயிலர்]

*******

"சதீஷ் கிருஷ்ண மூர்த்தியின் விளம்பர மாயாஜாலம், சரவண கார்த்திகேயனின் சந்திரயான், சரவணா ராஜேந்திரனின் தாராவி, சிவசேனா பற்றிய புத்தகங்கள் இந்த வருடப் புதிய அறிமுகங்கள்."

- பா. ராகவன் [எழுதுபவர்களும் எழுத்தாளர்களும்]

*******

NEWS UPDATE - சற்று முன் கிடைத்த தகவல் 1: 'சந்திரயான்' புத்தகம் வரும் திங்கட்கிழமை - அதாவது, 4 ஜனவரி 2009 - அன்று புத்தகக்காட்சியில் கிடைக்கும் என்று தெரிகிறது. அதற்கடுத்த‌ சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (ஜனவரி 9 மற்றும் 10 தேதிகள்) அடியேன் புத்தககாட்சிக்கு விஜயம் செய்ய உத்தேசம். என் வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் : யாரும் ஆட்டோகிராஃப் கேட்டு தொல்லைப்படுத்த வேண்டாம் ;)

*******

NEWS UPDATE - சற்று முன் கிடைத்த தகவல் 2: மேலே தந்திருக்கும் பட்டியலில் ஒரு முக்கியமான‌ போட்டியாளர் பெயர் விடுபட்டு விட்டது.

அவர் நம்ம வாத்யார் - சுஜாதா.

*******

புத்தகம் தொடர்பான மற்ற விவரங்கள் - அடுத்த பதிவில்..

*******

Comments

congrats. சுவாரசியமான பதற்றம். அனுபவியுங்கள். :-)
Anonymous said…
advance wishes... congrats...
வாழ்த்துகள்! மிக்க மகிழ்ச்சி! புத்தக வெளியிட்டின் பெருமிதத்தில் நீ! அன்பளிப்பாக ஒரு பதிப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நான்! :)
Lakshman said…
வாழ்த்துக்கள்!!!
Yamineem said…
வாழ்த்துக்கள்
Muthu said…
வாழ்த்துகள் !

"சந்திரயான்" எப்படி வெற்றியோ அதே வெற்றியே இந்த "சந்திரயான்" க்கும்.... வெற்றின் வட்டம் தான் சிறியது; ஆரம்பம்தனே..... நான் இன்னும் எழுதவேண்டும், விரைவில். !




முத்துக்குமார். S
Muthu said…
வாழ்த்துகள் !

"சந்திரயான்" எப்படி வெற்றியோ அதே வெற்றியே இந்த "சந்திரயான்" க்கும்.... வெற்றின் வட்டம் தான் சிறியது; ஆரம்பம்தனே..... நான் இன்னும் எழுதவேண்டும், விரைவில். !




முத்துக்குமார். S

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி