கோடுகளின் ரகசியம்

சரியாய் ஐம்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நார்மன் உட்லேண்ட், பெர்னார்ட் சில்வர், ஜோர்டின் ஜோஹன்சன் ஆகியோருக்கு அவர்கள் கண்டுபிடித்த பார் கோட் (Bar Code) என்ற அற்புதத்துக்கு அமெரிக்க பேடண்ட் வழங்கப்பட்டது. அதன் நினைவாக இன்று கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் பார்கோட் மாடலில் doodle வைத்திருக்கிறார்கள் (மேலேயிருப்பது).
பார்கோட் ரீடரில் படித்துப் பார்த்தால் "Google" என்று வருகிறது (Code 128 முறையில் text வடிவத்தில் பார்கோட் செய்திருக்கிறார்கள்). கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது அதே போல் நமது தளத்துக்கான பார்கோட். கூகுள் பயன்படுத்தியிருக்கும் அதே முறை; அதே வடிவம். அதில் ஒளிந்திருக்கும் text என்னவென்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். It's simple!

Comments