ராசி பலன்கள்
ஆஷுதோஷ் கோவாரிகரின் மூன்றரை மணி நேரப் படமான What's Your Rashee? நேற்று பார்த்தேன். அமெரிக்க என்.ஆர்.ஐ. இளைஞன் தன் குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக குறுகிய காலத்துக்குள் (இருபது நாட்கள்!) திருமணம் செய்யத் தீர்மானித்து, பன்னிரண்டு ராசிகளிலிருந்தும் ஒவ்வொரு பெண்ணைப் பார்த்து இறுதியில் யாரைத் தேர்ந்தெடுக்கிறான் என்பது கதை.
திரைக்கதை அவ்வளவு திறமையானதென்று சொல்ல இயலாது. Madhu Rye என்பவர் எழுதிய Kimball Ravenswood என்ற குஜராத்தி நாவலின் தழுவல் என்று டைட்டில் காட்டிலேயே போடு விடுகிறார்கள். 1989ல் இதே கதையுடன் தூர்தர்ஷனில் ஒரு சீரியல் வந்தது என்று விக்கிபீடியா சொல்கிறது. வசனங்கள் இந்தி சரியாய்ப் புரியாத எனக்கே ஆங்காங்கே புன்னகை வரவழைத்தது.
அஞ்சலி (மேஷம்) அப்பாவித்தனம். சஞ்சனா (கும்பம்) சந்தர்ப்பவாதம். காஜல் (மிதுனம்) நவநாகரீகம். ஹன்ஸா (கடகம்) நேர்மை. சந்திரிகா (மீனம்) பழமைவாதம். ரஜ்னி (துலாம்) வியாபாரம். மல்லிகா (சிம்மம்) முன்கோபம். நந்தினி (விருச்சிகம்) தன்னம்பிக்கை. பூஜா (கன்னி) சேவை. விஷாகா (ரிஷபம்) முதிர்ச்சியின்மை. பாவ்னா (தனுசு) மூட நம்பிக்கை. ஜங்கனா (மகரம்) குழந்தைத்தனம். இது தான் WYR முன்வைக்கும் அரசியல்.
ப்ரியங்கா சோப்ரா மிக மிக அற்புதமாக நடித்திருக்கிறார். பன்னிரெண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான உடல் மொழி மற்றும் முக பாவனைகள் காட்டி பிரம்மிக்க வைத்திருக்கிறார். இத்தனைக்கும் மேக்கப் பிரயத்தனங்கள் கூட அதிகமில்லை; காஸ்ட்யூம் டிஸைன் மற்றும் கதாபாத்திர ஆக்கத்திலேயே சாதித்து விட்டனர். Well done!
படத்துக்கு படம் ப்ரியங்காவின் நடிப்பு கிராஃப் எகிறிக் கொண்டே போகிறது. முதலில் Fashion, அப்புறம் Kaminey, இப்போது WYR. தயவு செய்து தேசிய விருது கொடுத்து கெடுத்து விடாதீர்கள். நடிப்பைப் போல் அவரது அழகும், வடிவமும் கூட கூடிக் கொண்டே போவதாகத் தோன்றுகிறது (என் மனைவியிடம் சொன்னால் delusion என்று சொல்கிறாள்).
என்னுடன் படத்துக்கு வந்த அலுவலக நண்பர் "உங்க கமல்ஹாசனை இவ கிட்ட வாங்கி குடிக்க சொல்லுங்க" என்றார். எனக்கு ஒப்புதலில்லை. இந்தியாவின் தற்போதைய சிறந்த நடிகை யாரென்று கேட்டால் யோசிக்காமல் ப்ரியங்காவைத் தான் கை காட்டுவேன். அதே சமயம் சிறந்த நடிகன் என்றால் கமல்ஹாசனைத் தான் சொல்லுவேன். சந்தேகமேயில்லை.
ஹர்மன் பவேஜா. அவர் தான் கதாநாயகன் அல்லது கதையின் நாயகன். அழகாயிருக்கிறார்; ஆனால் ப்ரியங்காவுடன் ஈடு கொடுத்து நடிக்கவியலாது தடுமாறியிருக்கிறார். அதே போல் தடுமாறியிருக்கும் இன்னொரு விஷயம் பின்னணி இசை (மற்றும் பாடல்கள்). ஏ.ஆர்.ரஹ்மான் இருந்திருந்தால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தீம் அமைத்திருப்பார்.
அது சரி, கடைசியில், எந்த ராசிக்காரி ஜெயிக்கிறாள்? என் மனைவியின் ராசிக்காரனான ஹர்மன் பவேஜா திருமணம் செய்யும் அந்த ப்ரியங்கா சோப்ராவின் ராசி சாட்சாத் என்னுடையது. "What's Your Rashee?" என்று கேட்கிறீர்களா? நீங்களே தியேட்டரில் போய் பார்த்துக் கொள்ளுங்கள். Ignore the stupid ibnlive.com review and watch it!

Comments