படித்தது / பிடித்தது - 77

தகப்பனாக இருப்பது

"அப்பா இன்னும் வரலை"
எனக்கூறும்
மகனின் பொய்யை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

வீட்டினுள்
இருந்தபடி.

"போயிட்டாருப்பா"
என திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.

கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...

தகப்பனாய்
இருப்பது.

- பா.ராஜாராம்

நன்றி: கருவேல நிழல்.....

Comments

நன்றியும் அன்பும் csk!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி