படித்தது / பிடித்தது - 76

அறை

கலவியில் முந்திய விந்துக்கு
நடிக்கத் தெரியாத மனைவியை
உப்புக் கரையாத தோசைக்கு
அறைவேன்

அழகாய் இருக்கும் மாணவியை
அடிக்கடி அழ வைக்க கையெழுத்து
நல்ல காரணம்

முதலையின் பற்கள் குறித்த கேள்விக்கு
அவளை நான் கடைசியாய் அறைந்தேன்
முத்தமிடும் வேட்கை மிக

முத்தமும் சிலுவையும் இணை பிரியாதவை
முத்தமிட்டு சிலுவையில் அறைந்தாலும்
சிலுவையிட்டு முத்தம் பறந்தாலும்

பேரறிவாளன் நான்
நாடகங்களில் நீண்ட வசனம் பேசும்
ஷைலக்கின் பாத்திரம் எனதே
கடைசி விருந்து நாடகத்திற்கு உங்களுக்கு
அனுமதி இலவசம் ஆண்டோனியோ

- நேசமித்ரன்

நன்றி: நேசமித்ரன் கவிதைகள்

Comments

மிக்க நன்றி சரவணக் குமார் சார் எனது கவிதைகள் உங்களுக்கு பிடித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அன்பும் நன்றியும் நிறைய

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

உங்க வீட்டுப் பொண்ணு

இறுதி இரவு [சிறுகதை]