சில‌ சிந்தனைகள் - 6

அருண் வைத்யநாதனின் அச்சமுண்டு! அச்சமுண்டு! படம் பரவாயில்லை. குறிப்பிடத்தகுந்த விஷயங்கள் என்றால் ப்ரசன்னா, சினேகா இருவரின் தேர்ந்த நடிப்பு, கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை, மற்றும் அருணின் இயல்பான வசனங்கள். Neat and Clean.

^^^^^^^^^^^^^^^^^
நந்தினியின் திருதிரு துறுதுறு படம் சுவராசியமானதொரு முய‌ற்சி. பெண்களால் மட்டுமே எடுக்க முடிந்த மிகுந்த ரசனைக்குரிய சாஃப்ட் ரொமான்ஸ் இதன் ஸ்பெஷாலிட்டி. அதிலும் ரூபா மிக அழகாக இருக்கிறார். அப்புறம் மெளலி மற்றும் வசன‌ங்கள்.

^^^^^^^^^^^^^^^^^
கே.எஸ்.ரவிக்குமாரின் ஆதவன் ஏதோ தேறுகிறது. சூர்யாவுக்கு இது வேண்டாத வேலை. வடிவேலு பரவாயில்லை. தசாவதாரம் போன்ற வித்தியாசங்களுக்குப் பிறகும் தன்னுடைய பழைய மூத்திரத்தை - மன்னிக்கவும் சூத்திரத்தை - மாற்ற மறுக்கிறார் இயக்குநர்.

^^^^^^^^^^^^^^^^^
எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை நன்றாக இருந்தது. குறிப்பாய் அதன் திரைக்கதை, வசனம் மற்றும் ஒளிப்பதிவு. ஜெயம் ரவியும் அந்த அழகான ஐந்து பெண்டுகளும் கூட நன்றாக நடித்திருந்தனர். இந்த வருடத்தின் குறிப்பிடத் தகுந்ததொரு முயற்சி.

^^^^^^^^^^^^^^^^^
பேராண்மை படத்தில் தலித் கதாநாயகனை மற்ற‌வர்கள் அவமானப்படுத்த முயற்சிக்கும் வசன‌ங்கள் யாவிலும் கணிசமான சென்ஸார் கத்திரி. அது போல் நிஜ வாழ்வில் அப்படிப் பேசுபவர்கள் நாவை வெட்டியெறிய முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

Comments

MSK said…
பேராண்மை திரைப்படம் நேற்று தான் பார்த்தேன். முதல் பாதியில் தேவை இல்லாத விரசங்களை தவிர்த்திருக்கலாம் (எஸ் ஜே சூர்யா படம் போல் இருக்கிறது ). இரண்டாம் பாதியில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. இரண்டாம் பாதியை பார்க்கும் போது 15 ஆண்டுகளுக்கு முன்பு வந்த அர்ஜுனின் 'ஜெய்ஹிந்' படம் நினைவில் வருவதை தவிர்க்க முடிய வில்லை. இருப்பினும் படம் சூப்பர்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி