சகா : சில குறிப்புகள் - 8

கல்லூரியில் இறுதியாண்டு கேம்பஸ் இண்டர்வ்யூ நடந்து கொண்டிருந்த காலத்தில், ஒரு பன்னாட்டு மென்பொருள் சேவை நிறுவனத்தின் எழுத்துத் தேர்வு தேறி, நேர்முகத்தேர்வில் உட்கார்ந்திருந்த சகாவிடம், முப்பதுகளின் தொடக்கத்திலிருந்த மனிதவளத்துறை பெண் (லோ-ஹிப்), "What's your hobby?" என்று கேட்டதற்கு, புன்னகையுடன் அவன் சொன்ன பதில் - "Indoor bird watching". அப்பெண் முந்தானையை சரி செய்து கொண்டே அத்தோடு இண்டர்வ்யூவை முடித்துக் கொள்வதாக அறிவித்தாள். அந்தக் கம்பெனி சகாவை நிராகரித்தது.

**********************

சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய தன் பணக்கார சினேகிதிக்கு சகா கொடுத்த பரிசு ஜெர்மனியிலிருந்து பிரத்யேகமாய் இறக்குமதி செய்யப்பட்ட கறுப்பு நிற‌ பிகினி (விலை - மதிப்புக் கூட்டு வரியுடன் சேர்த்து பத்து யூரோக்கள்). அதன் சிறப்பு என்னவென்றால் அதையணிந்து தண்ணீருக்குள் இறங்கிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு கரைந்து மறைந்து விடும் (பெயரே GET NAKED BIKINI தான்). ஆனால் அதைச் சொல்லாமல், அழகாக கிஃப்ட் பேக் செய்யப்பட்ட அந்தப் பரிசையும், தனது ட்ரேட் மார்க் புன்னகை ஒன்றையும் அவளுக்கு தந்து விட்டு வந்து விட்டான் சகா. Unfortunately, the story is not ending here.

பிறந்த நாள் பரிசுகளை ஆராய்ந்து கொண்டிருந்த அந்த நண்பியின் அம்மா கண்களிலா அந்த வஸ்து பட்டுத் தொலைக்க வேண்டும். காஸ்மாபாலிடன் க்ளப்பில், சென்னை நகரின் பெரும் புள்ளிகள் குழுமியிருந்த ஏதோ ஒரு கெட்-டுக‌தரின் போது, விஷயம் தெரியாமல் அவளது அம்மா அதை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் இறங்க, கொஞ்ச நேரத்தில் பெரும் பிரச்சனையாகி விட்டது. சகாவின் சினேகிதி அவனுக்கு தொலைபேசி கத்தியிருக்கிறாள். அதன் சாரம் இது தான் : "I am embarrassed. She didn't even have it shaved". அதைக்கேட்டு சகாவுக்கு த்ரிஷாவின் பாத்ரூம் சி.டி. ஞாபகம் வந்ததாம்.

**********************

சகா ஜீன்ஸ் பேண்ட் அணியமாட்டான்; டி‍ஷர்ட்டும் ஆகாது. அவசரமாய் தைக்கப்பட்ட ஒரு ஓவர்சைஸ் பேண்ட்டும், கை மடித்து விடப்பட்ட ஃபுல்ஹேண்ட் ஷர்ட்டும் தான் அவனது ரெகுலர் காஸ்ட்யூம். வீட்டிலிருக்கும் போது வெற்று மார்பும், மடித்துக் கட்டப்பட்ட லுங்கியும் தான். இப்படி ஒரு முனிவனைப் போல் வாழ்ந்து வந்த சகாவின் வாழ்க்கையில் திருப்பு முனை, வேறொரு ப்ராஜெக்டிலிருக்கும் அவன் அலுவலக‌ தோழி சுல்தானா வடிவில் வந்தது (சகா வைத்திருக்கும் செல்லப்பெயர் - 'சுல்த்').

ஒரு பார்ட்டியின் போது அறிமுகமான அவள், சகாவின் தோற்றத்தில் வருத்தமுற்று, அவனை லீ (Lee) ஷோரூமுக்கு அழைத்துச் சென்று, அவள் அணிந்திருந்தது போலவே இடுப்பைப் பிடித்த மாதிரியான அளவில் ஒரு ஜீன்ஸ் பேண்டை வாங்கிக் கொடுத்திருக்கிறாள். ட்ரையல் ரூமில் போட்டுப் பார்த்து விட்டு "இறுக்கமா இருக்கு" என சகா முனக, சுல்த் சிரித்துக் கொண்டே, "Garment that squeezes in testicles makes fashion" என்று விளக்கம் கொடுத்து, அதையே பேக் செய்யச் சொல்லி பில் கட்டியிருக்கிறாள்.

**********************

தஞ்சை பிரகாஷ் எழுதிய 'மீனின் சிறகுகள்' நாவலில் வரும் ரங்கமணி கிட்டதட்ட சகா தான். என்ன ஒரே வித்தியாசம், இவன் பிராமணனும் இல்லை; இது அக்ரஹாரமும் இல்லை. "ரங்கமணி ஒரு பயம்! சந்தோஷம்! வியப்பு! ராக்ஷஸம்! எல்லாம் எல்லோருக்கும் தான். இன்னது செய்வான் இது செய்யமாட்டான் என்று யாராலும் புரிந்து கொண்டு விட முடியாது" என்று அதில் வருவது அப்படியே சகாவுக்கும் பொருந்தும். இன்னமும் இளமையின் எச்சங்கள் ஆங்காங்கே மிச்சமிருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கும் மெனோபாஸ் கேஸ்களெல்லாம், சகாவின் 'ஆன்ட்டி' என்கிற குரலுக்கு கிறங்கிக் குழைவதை நீங்கள் நேரடியாகப் பார்த்தால் தான் உங்களுக்கு நான் சொல்வது புரியும்.

**********************

சகா முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த‌ ப்ராஜெக்டில் ஒரு மாட்யூலின் பெயர் Simplified Service Architecture. சுருக்கமாய் 'SSA' என்று அழைப்பார்கள். வழக்கமாய் நடக்கும் வாராந்திர மீட்டிங்கில் ஆன்-சைட்டிலிருக்கும் சகாவின் பெண் மேலாளர், "I am not seeing SSA in the last couple of status reports. ஏன் அதைப் பற்றி யாருமே இப்போதெல்லாம் பேசுவதில்லை. அது என்ன கெட்ட வார்த்தையா?" என கேட்க‌, சகா கடுப்பாகி "Certainly not. But it will be, if you reverse it" என்று சொல்லியிருக்கிறான். மீட்டிங்கிலிருந்த அத்தனை பேரும் - அந்தப் பெண் மேலாளர் உட்பட‌ - வாய் வலிக்க சிரித்திருக்கிறார்கள்.

Comments

Keerthi said…
the 2nd para is way 2 exaggeration...he is either spinning a yarn to u or u r exaggerating the story...there is no way a mom can fit in a daughter's bikini or flick her b'day present
gnani said…
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி