படித்தது / பிடித்தது - 51

அக்காவின் அன்பளிப்பு

இடுப்பில் அரவம் சுற்றிய
பிள்ளையார் படம் என்றால்
அதை வீட்டில் வைக்கக்
கூடாது என்பதால்
கோவிலுக்கு அதை தந்து
விடுவதாக முடிவு செய்தாள் அக்கா..

எனினும் அந்தப் படத்தின்
கீழ் எழுதிக் கொடுத்தாள்........
அன்பளிப்பு : ம.தனலட்சுமி என்று.......

- இரா. பூபாலன்

நன்றி: நவீன விருட்சம்

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி