சகா : சில குறிப்புகள் - 3

சகாவிடம் எப்படித் தான் வந்து விழுகிறாள்களோ தெரியாது. இத்த‌னைக்கும் அவன் அப்படியொன்றும் அழகோ, நிறமோ இல்லை. பணம் கூட நிறைய கிடையாது. பைக் ஓட்டத் தெரியாது. தாலூக் ஆபீஸ் குமாஸ்தா மாதிரி தான் உடையணிவான். அதையும் துவைத்ததாக சரித்திரமில்லை. ஷூ அணிய மாட்டான். பாதி நேரம் கக்கூஸுக்கு போடும் செருப்பு தான். ஆனாலும் அவனுக்கு அத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ். "பேசனும். விடாம பேசனும். பேசற மாதிரி பேசினா விழாத பொண்ணே கிடையாது உலகத்தில" என்பான்.

**********************

சகா எஸ்.எம்.எஸ். அனுப்பினானென்றால் ஒன்று 'ஏ' ஜோக்காக இருக்கும்; அல்லது பேலன்ஸ் தீர்ந்து போய் "Call Me.." என்பதாய் இருக்கும். அவன் அனுப்புவது தான் இப்படியென்றால் அவன் சினேகிதிகள் அவனுக்கு அனுப்புவது இன்னமும் பச்சை. ஒரு நாள் ஆர்வத்தில், "மெசேஜ் மட்டும் தான் இப்படியா இல்ல பேசும் போதும் இப்படித் தானா?" என்று கேட்டேன். "அது இண்ட்ரஸ்ட்டிங்டா. அவளுங்களா ஆரம்பிக்க மாட்டாங்க. நாம கொஞ்சம் கொஞ்சமா தூண்டனும். இதுவும் ஒரு வகையில Oral தானே" என்றான்.


**********************

சகாவுக்கு சகோதரிகள் கிடையாது. பள்ளியில் சொல்லும் Pledgeல் "All Indians are my brothers and sisters except one or two" என்று சொல்லி மைதானத்தில் முட்டி போட்டவன். கல்லூரி நாட்களிலும் ஜூனியரோ சீனியரோ ஸ்டூடண்டோ லெக்சரரோ எந்தப் பெண்ணையும் அவன் சகோதரியாய்ப் பாவித்ததாய் நினைவில்லை. அவர்களும் அப்படியே. ஒரு பொறுக்கியை சகோதரனாய் அழைப்பதை கெளரவப் பிரச்சனையாக எண்ணியிருக்கலாம். "மனசாட்சிக்கு விரோதமா எப்படிடா கூப்பிடுவாங்க?" இது அவன் கருத்து.

**********************

சகா ஒருமுறை பேருந்தில் ஊருக்கு போகும் போது உடன் பயணித்த ஒர் ஊமைப் பெண்ணுக்கு அவ‌ன் கணவன் அருகிலிருக்கும் போதே கொக்கி போட்டிருக்கிறான். இதே சூழ்நிலையில் நீங்களோ நானோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். சர்வ நிச்சயமாய் செருப்படி விழுந்திருக்கும். அங்கு தான் சகா நம்மிலிருந்து வேறுபடுகிறான். முதலில் விலகிய‌ அந்த பெண்ணை மெல்ல மெல்ல‌ சம்மதிக்க வைத்திருக்கிறான். அது தான் அவனது தொழில் ரகசியம். ஊரிலிருந்து திரும்பிய பின் சொன்னான், "பாவம்டா, ஊமை".

**********************

சகாவுக்கு ஆடுக்கறி என்றால் பிடிக்காது; ஆனால் கோழிக்கறி என்றால் பிளந்து கட்டுவான். ஒரு முறை சுத்த சைவ பட்சியான அவன் நண்பியொருத்தியுட‌ன் கோழிக்கறி வாங்க செல்கையில், அவள் மூக்கைப் பொத்தியபடி கேட்டிருக்கிறாள். "கோழிப்பீ இந்த நாத்தம் நாறுதே. இந்தக்கறியை எப்படித் தான் திங்கறாங்களோ". பதிலுக்கு நம்மாள் சொன்னது: "ஐஸ்வர்யா ராய் உடம்புக்குள்ளேயும் தான் பீ, மூத்திரம், தூமை, கோளை, சளி எல்லாம் இருக்குது. அதுக்காக அவளை ரசிக்காம இருக்க முடியுமா?"

Comments

சகா ... புரியுது

வாழ்த்துக்கள்
@நிகழ்காலத்தில்...
I will convey this to சகா..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி