சகா : சில குறிப்புகள் - 2

"நீங்கள் தானே சகா?" என்று கேட்ட‌வர்களுக்கு அல்லது கேட்க நினைத்த‌வர்களுக்கு என்னிடம் பதிலில்லை. சகாவிடம் சொன்னதற்கு "கடவுள் அல்லது தேவடியாள் என்ற‌ பெயரில் நீ எழுதினால் கூட இதே அசட்டுக் கேள்வியைக் கேட்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது உன் வேலையில்லை. மீறிக் கேட்டால் கேட்பவனிடம் அவன் தான் சகா என்று சொல்" என்றான். யோசித்துப் பார்த்தால் அது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது.

**********************

சகாவின் பெண் தோழியொருத்தி பெரிய ச‌ண்டைக்காரி. சண்டை முடிந்து அவள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். தான் ஹைலைட். அது ஓர் உடலுறவு உச்சத்துக்கு சமானமாய் இருக்கிறது என்பான் சகா. அப்படிப்பட்ட ஒரு சண்டைக்குப் பின் அவள் அனுப்பிய குறுந்தகவலைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாய் இரவில் கிளம்பிப் போனவன் மறுநாள் காலையில் தான் அறைக்குத் திரும்பினான். அவள் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.: "come here you fuck..".

**********************

கல்லூரி நாட்களில் நாங்களெல்லாம் பரிட்சை தொடங்குவதற்கு முந்தைய சில நிமிடங்களில் பதட்டமாய்ப் புத்த‌கத்தைப் புரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து நக்கலாய்ச் சிரிப்பான் சகா. இத்தனைக்கும் அவன் சுமாராகப் படிக்கக் கூடியவன் தான். அதைப் பற்றிக் கேட்டதற்கு பரிட்சைக்கு முன்பு படிப்பது முதலிரவுக்கு முன்பு சுயமைதூனம் செய்வ‌தைப் போன்றது என்றான். திருமணமான பின்பு தான் அவன் சொன்னது விளங்கியது எனக்கு. சகா தீர்க்கதரிசி.

**********************

சகா 'அபியும் நானும்' படம் பார்த்துவிட்டு என்னிடம் கேட்டான், "பட‌த்தோட டைட்டிலான 'அபியும் நானும்' அப்படின்னு யார் சொல்றாங்க?". நான் "அபியோட அப்பா" என்றேன். "அப்புறம், ஏன் டைட்டில் கார்டுல 'அபியும் நானும்' அப்படின்னு குழந்தைகள் கையெழுத்தில் எழுதி வெச்சிருக்காங்க?" என‌க்கேட்டான். பின் என்ன நினைத்தானோ, "ஆனா அந்த கையெழுத்துல ஒரு செக்ஸுவல் அட்ராக்ஷன் இருக்கு" என்றான்.

**********************

சரோஜா தேவி முதல் தீபிகா படுகோன் வரை சகாவுக்கு பிடித்த நடிகைக‌ள் என்று ஒரு பெரிய‌ பட்டியலே உண்டு. துரதிர்ஷ்டவசமாய் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடிகை கூட அதில் கிடையாது. ஆந்த்ரபோலஜியை அடிப்படையாகக் கொண்டு இதை ஒருமுறை எனக்கு விளக்க முயன்றான். என் சிற்றறிவுக்கு முழுதாய்ப் புரியாத அச்சித்தாந்தத்தின் அடிநாதம் இது தான்: "ஆதிகாலத்தில் தமிழ் பெண்கள் மேலிருந்து இயங்கினார்கள்".

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி