தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட...
Comments
//தமிழில் 5000 பேர் பதிவெழுதுகிறார்கள். அவர்களில் கிட்டதட்ட முந்நூற்று சொச்சம் பேரை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன். அதனால் இதை முழுமையான அல்லது நிரந்தரமான பட்டியலாக கொள்ள இயலாது.//
அவ்வப்போது நாம் நம்மை பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதை நம்மை அறியாது சில வார்த்தைகள் வழியாக வெளியிட்டு விடுவோம். மேலே உள்ளதில் நீங்கள் மட்டுமே என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தினீர்கள்? அது ரைட்டர் ஜெயகாந்தன் சொன்னது போல் அடக்கம் போன்றதொரு அகம்பாவம். என்னோடு படித்த ஒருவன் பெங்களூரில் இன்று ஹச்.சி.எல்லில் மென்பொருள் துறையில் இருக்கிறான். அவனை எதேச்சையாக நான் சந்திக்க என்னடா செய்ற என்றேன். அதற்கு அவன்,"பெங்களூர்ல ஹச்.சி.எல் ங்குற கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொன்னான். ஹச்.சி.எல் என்ற கம்பெனியை நாடே அறியும். ஆனால் அவனோ ஒன்னும் தெரியாதவனைப் போல் ஹச்.சி.எல் என்ற கம்பெனியில் என்று பேசுகிறான். அதுதான் அடக்கம் போன்றதொரு அகம்பாவம்.
எனக்கு நீங்கள் பயன்படுத்தும் அடியேன் என்பதற்கும் சுஜாதா பயன்படுத்திய அடியேனுக்கும் வித்தியாசம் உண்டு என்றே தோன்றுகிறது. சுஜாதவின் அடியேனில் உண்மையாகவே ஒரு பணிவு தெரிந்தது. உங்களது அடியேனில் அடக்கம் போன்றதொரு அகம்பாவமே தெரிகிறது...d...