கடிதம்: No Blog on Ilayaraja's B'day??

Hi SARKAR,

Well and wish the same from you. Hope this mail finds u and ur family in Good Health. Being a regular reader of ur blogs, I expected you would write a blog today (On the Maestro's B'day). Atleast u wud have posted "Isaignani 1000" as a dedication to our Music God.

Hope u might be too busy wid ur work to post a blog. Anyways keep writing. Take care.

Friendly Urs.,

A.Kaarthik,
Mumbai

############

கார்த்திக்,

அடிப்படையிலேயே மிகத் தவறானது, உங்கள் எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கை.

என் ஆதர்சமான சுஜாதாவின் பிறந்த நாளுக்கே நான் பிரத்யேகமாய் எதுவும் எழுதியதில்லை - அப்போதும் நீங்கள் இதே கேள்வியைக் கேட்டிருந்ததாக ஞாபகம். அதனால் இதைத் தெளிவுபடுத்தி விடுவது நல்லது என நினைக்கிறேன்.

எனது மற்றும் என் மனைவியின் பிறந்த நாள் (வேறு வழியில்லை!) தவிர நண்பர்கள், சுற்றத்தார், பிடித்தவர்கள், பிரபலங்கள் என்று வேறு எவ‌ருடைய பிறந்த நாளையும் பொதுவாய் நான் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை.

அது சரியா, தவறா என்கிற வாதம் ஒரு புறமிருக்க, பலருடைய பிறந்த நாட்கள் ஊடகங்கள் வாயிலாகவோ, வேறு யாராவது சொல்லியோ, அல்லது மோசமான சூழ்நிலையில் அவர்களே சொல்லியோ தான் நான் அறிந்து கொள்கிறேன்.

பாரதி, தாகூர் என இதற்கு முன்பு எப்போதேனும் பிறந்த நாளுக்கோ, நினைவு நாளுக்கோ நான் ஏதேனும் பதிவுகள் எழுதியிருக்கலாம். அது அப்போதைய நினைவுகளின் உந்துதல். அவ்வளவே. மற்றபடி வேறு காரணங்கள் ஏதுமில்லை.

தவிர, பிறந்த நாள் என்பதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு மட்டும் தான். அவர்கள் அதையெல்லாம் தாண்டியவர்கள். தினமும் நினைக்கப்பட, பேசப்பட, எழுதப்பட‌ வேண்டியவர்கள். ராஜாவின் விஷயமும் அப்படியே.

எழுதாதத‌ற்கு நீங்கள் சொல்வது போல் பணிச்சுமை ஒரு காரணமாக இருக்கலாம்; ஆனால் அது இல்லையென்றாலும் எதுவும் எழுதியிருக்கப் போவதில்லை. பதிவு போட்டால் தான் மரியாதை என்றும் அர்த்தமில்லை.

நல்ல வேளை, இன்று கலைஞருக்கு ஏன் பதிவு போடவில்லை என யாரும் கேட்கவில்லை.

பின்குறிப்பு:
Twitterல் எனது முதல் update இது: "Starting to tweet on the birthday of THE MUSIC GOD : I-L-A-Y-A-R-A-A-J-A". ஆம். இளையராஜாவின் பிறந்த நாளான நேற்று தான் twitterல் என் கணக்கைத் துவக்கினேன் [http://twitter.com/writercsk].

Comments

dr arunkumar said…
i dont know how you people call somebody as god. dont you feel ashamed of using such superstitious words? i dont want to discuss whether he truely disserves to be called as musical god or not. that is for debate. even if someone is too good in music, a cultured, well educated man wont use such words. it is infact an insult to ilayaraja if you call him as god. It is like our karunanidhi and jayalalitha are called as god by their udanpirappukkal.
Kaarthik said…
Hi SARKAR, U r rite. I asked u the same question on Sujatha's B'day. I know that u r an ardent fan of Sujatha and Ilayaraja. That's y I expected. Moreover u r posting IR's songs under "Isaignani 1000". So I felt it wud be apt if u had posted that series on Isagnani's B'day. Nothing else.


Hi Dr.Arunkumar,
I too hate and feel ashamed to call Kamal as "Aandavar"; Rajni as "Thalaivar", Ajith as "Thala", etc. though they are my favourites. But at the same time I feel proud to say Ilayaraja as Music God. Bcoz HE is!!!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி