பசங்க இயக்குநருக்கு கடிதம்
அன்புள்ள இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
தாங்கள் எழுதி ஆக்கம் செய்திருக்கும் பசங்க திரைப்படத்தில் வரும் முக்கிய திருப்பு முனைக் காட்சியில், அந்த ஆண்டு தங்களுக்கு பிடித்த / பிடிக்காத நபர்கள் / நிகழ்ச்சிகள் பற்றி மாணவர்களை ஒரு கடிதம் எழுதச் சொல்லுவார் வகுப்பாசிரியர். அதனால் நானும் தங்கள் படத்தில் எனக்கு பிடித்தது / பிடிக்காதது பற்றிப் பேச அதே வடிவத்தை தேர்ந்தெடுத்திருப்பது பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன்.
சாரு முதல் ஞாநி வரை சிந்தனைத் தளத்திலிருக்கும் அனைத்துத் தரப்பினரும், இன்றைக்கு சாத்தியமாகியிருக்கும் அத்தனை ஊடகங்கள் வழியாகவும், பல்வேறு காரணங்களைப் பின்புலமாகக் கொண்டு உங்கள் படத்தைப் சிலாகித்துத் தள்ளி விட்டார்கள். பசங்க என்கிற உங்கள் கன்னி முயற்சிக்கு பெரும்பாலும் பாராட்டுக்களையே உள்வாங்கிக் களைத்திருக்கும் உங்களிடம் முதலில் ஒன்றை உடைத்துச் சொல்லி விடுகிறேன்.
உங்களுடைய பசங்க திரைப்படம் எனக்குப் பிடிக்கவில்லை.
யோசித்துப் பாருங்கள். நீங்கள் எடுத்திருப்பது ஒரு மசாலாப் படத்தினின்று எவ்வாறு மேலானதென்று. என்னைப் பொறுத்தவரை பசங்க யதார்த்த முலாம் பூசப்பட்ட ஒரு சாதாரண மசாலாப் படமே. ஒரே வித்தியாசம் இதன் கதாபாத்திரங்களான பசங்க - அதாவது சிறுவர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் மசாலாப் படங்களின் ஆதார குணாதிசமான சுவாரசியம் என்பதையும் இழந்து நிராயுதபாணியாய் நிற்கிறது உங்கள் படம்.
அந்த் காலத்தில் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் என்கிற படத்தின் க்ளைமேக்ஸ் குப்பைக்கு எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல உங்கள் படத்தின் உச்சநிகழ்வாய் வரும் மருத்துவமனைக் காட்சி. அப்புறம் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் சிறுவனை உற்சாகப்படுத்த குடும்பமே கூட ஓடும் காட்சி. சன் மற்றும் கலைஞர் டிவிகளில் இரவு ப்ரைம் டைமில் வரும் ஆயிரம் எபிஸோட் அழுவாச்சி சீரியல்களுக்கு ஈடானது அது.
இதையெல்லாம் விடக் கொடுமையானது தேசிய கீதத்தைப் பாடவிட்டு பள்ளி மாணவர்களின் சண்டையை நிறுத்தும் காட்சி (தியேட்டரிலேயே அக்காட்சிக்கு சிலர் எழுந்து நின்று விட்டார்கள்). மன்னிக்கவும். என்னய்யா சொல்ல வருகிறீர்? கிராமத்துப் பள்ளிக் கூடங்களில் தேசிய கீதம் பாடப்படும் தருணங்களை கவனித்ததே இல்லையா? இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படி செயற்கைத்தனமாக படமெடுப்பதாக உத்தேசம்?
படம் நெடுக சிறுவர்கள் சினிமா நடிகர்களை, சினிமா காட்சிகளை பிரதியெடுக்கிறார்கள். அக்காட்சிகளை, சினிமா எந்த அளவுக்கு சிறார்கள் மனதில் செயல்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று காட்ட வைத்திருக்கிறீர்களா அல்லது அசத்தப் போவது யாரு, லொள்ளு சபா ரேஞ்சிலான நகைச்சுவைக் காட்சியாக வைத்திருக்கிறீர்களா என சரியாக விளங்கவில்லை. எப்படியிருப்பினும் அது ஓவர்டோஸ்.
அப்புறம் படத்தின் மைய அச்சாக வரும் ஜீவா நித்யானந்தத்தின் கதாபாத்திரமே மகா அபத்தமானதாகத் தோன்றுகிறது. பக்குவப்பட்ட ஓர் ஆசிரியரின் மகனான பன்னிரண்டு வயது சிறுவனுக்கு இவ்வளவு வில்லத்தனம் ஆகாது. அப்புறம் படத்தின் பெயருக்கேற்றாற் போல் இது பசங்களின் சித்தரிப்பு மட்டுமே. அதாவது சிறுவர்களின் உலகம். மனோன்மணி போன்ற சிறுமிகள் தொடுப்புகளாக மட்டும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
மசாலாப் படங்களில் தவறு நிகழ்ந்தால் கூட மீண்டும் யாராவது தயாரிப்பாளர் வாய்ப்பு தருவார். ஆனால் மாற்று சினிமாவை முயற்சிக்க ஷங்கர், பிரகாஷ்ராஜ், சசிகுமார் போன்ற சில தயாரிப்பாளர்களே இருக்கிறார்கள். இதில் கிடைத்த வாய்ப்பைத் தவற விடுவது மகாபாவம். பாலாஜி சக்திவேலின் கல்லூரி படம் பார்த்த போதும் இதே உணர்வே ஏற்பட்டது. அதனாலேயே கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்திருக்கிறேன்.
அதே நேரம் சில முக்கிய விஷயங்களை நீங்கள் இப்படத்தின் வாயிலாக பதிவு செய்திருக்கிறீர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. குழந்தைகளின் சிறுசிறு செயல்களின் வழி அவரகளின் உலகத்தை நுட்பமாக சித்திரித்திருக்கும் சில விதிவிலக்கான காட்சிகளை உதாரணமாகச் சொல்லலாம். "பயப்படலையே, பயப்படலையே", "எனக்கு அருவாக்குண்டின்னு எங்கம்மா சொன்னாங்கடா", "போதும் பொண்ணு" பெயர் விளக்கம் etc etc.
கீழ்காணும் விஷயங்களுக்காக இப்படத்தின் குறைகள் யாவும் மன்னிக்கப் படுகின்றன. 1.குழந்தைகளை நுட்பமாய்ச் சித்தரிக்கும் சில காட்சிகள் 2.சோபிக்கண்ணு - மீனாட்சியின் ஆரம்ப காதல் காட்சிகள் 3.கீழ் நடுத்தர வர்க்க குடும்பத்தின் கணவன் மனைவி சண்டையும் அதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையையும் காட்டியிருப்பது 4.ரசிக்க வைக்கும் சில வசனங்கள் 5. தேர்ந்த நடிப்பு மற்றும் உங்கள் இயக்கம்.
ஆம். திரைக்கதையில் கோட்டை விட்ட போதிலும் ஒரு இயக்குநராக நீங்கள் நிச்சயம் ஜெயித்திருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதனால் தான் மெனக்கெட்டு நான் இவ்வளவு விஷயங்கள் இப்படத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். அழகி, ஆட்டோகிராஃப், காதல், பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், பூ போன்ற படங்களைப் பாருங்கள். நீங்கள் எங்கே தப்பு செய்திருக்கிறீர்கள் எனக் கண்டுபிடியுங்கள்.
அடுத்த கடிதத்திலாவது உங்களைப் பாராட்ட விரும்புகிறேன்.
எதிர்பார்ப்புடன்,
சி.சரவணகார்த்திகேயன், writer.

Comments
respect.. yes..
You may not like the movie ( which i find rather very strange ) but I am sure you will accept the fact that attempts like this should be encouraged and appreciated..
Anyway it's a good attempt by the director.
CSK: Did you notice the girl who comes skipping to the place where the boys would be fighting before the national anthem? It just happened or the director's touch?
I think we can measure the director's ability to have an eye for the details with the help of this scene.
I liked the Pakkoda character..
Manikavemudiyathu than ena evaru kothupatu, double meaning comedy, ratham , katthi ilama oru padam edutyhirikaru ila..
Ofcource this movie has soem flaws ..everyone has rights to highloght the mistakes but romba methavi thanama ezhuthakodathu...
ezhakiyathil ungal padaipa paarka asai ..kunkumathi parisu petra antha padaipa thava ungal per sollu padaipu erunthal engal parvaiku vaikavum...