இரண்டு திரைப்படங்கள்

சிவா மனசுல சக்தி: "அந்தக் கால காதலிக்க நேரமில்லை மாதிரி இருக்கிறது" என்று இயக்குநர் மிஷ்கினால் குறிப்பிடப்பட்டதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்தைப் பார்த்தேன். ம்ஹூம். எனக்கொன்றும் உறைக்கவில்லை. காட்சி வாரியாக இயக்குநர் கதை சொன்ன போது விகடன் நிறுவனத்தில் வாய் பிளந்து கதை கேட்டுத் தலையாட்டிய புண்ணியாத்மா யாரென்று தெரியவில்லை. அவ்வளவு செயற்கைத்தனமான கதாபாத்திரங்கள். முக்கியமாய் கதாநாயகி அனுயாவின் பாத்திரம். ஜீரணிக்கவே முடியவில்லை. உவ்வே. ஜீவா மட்டும் ஸோலோவாய் தன் பெர்ஃபாமென்ஸ் காரணமாய்ப் பிழைக்கிறார். மற்றபடி படத்தில் ஒரே ஆறுதல் சந்தானம் வரும் பகுதிகளின் வசனங்கள் ("பச்சத்தண்ணி குடிச்சுட்டு பாயாசம் சாப்பிட்ட மாதிரி பில்டப் பண்றே!")‌. மிஷ்கினுக்கு 'காதலிக்க நேரமில்லை' படம் பிடிக்காது போலிருக்கிற‌து.

நியூட்டனின் மூன்றாம் விதி: எஸ்.ஜே. சூர்யா என்கிற இளைஞன் காதலிப்பதாய்க் கழுத்தறுக்கும் ஆரம்பக் காட்சிகளையும், படத்துக்கு தேவையே இல்லாமல் ஆங்காங்கே சொருகப்பட்டுள்ள பாடல்களையும் மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இப்படம் ஒரு மிகச் சுவாரசியமான த்ரில்லர். தமிழ் திரையுலகில் நடந்து வரும் உள்ளடக்க‌ மாற்றங்களில் மிக முக்கியமாக நான் கருதுவது ஜனரஞ்சகப் படங்களின் தளத்தில் கூடி வரும் திரைக்கதை நேர்த்தி. சென்னை 600028, ஓரம் போ, பொய் சொல்லப் போறோம், தசாவதாரம், அயன், நியூட்டனின் மூன்றாம் விதி போன்றவை உதாரணங்கள். இவற்றில் கணிசமானவை நட்சத்திர அந்தஸ்தின்மை போன்ற காரணங்களால் கவனிக்கப் படாமலே போகின்றன என்பது தான் tricky. தாய்முத்துசெல்வன் என்கிற இந்தப் புதிய இயக்குநரை மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வரவேற்கிறேன்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்